கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 1, 2021
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
அயோத்யா தனது பேஸ்புக் இன்பாக்ஸை பார்க்கும்போது, கீழேயுள்ள செய்தியைக் கண்டார் ,
ஹாய்,
உங்கள் அழகான நிர்வாண படங்கள் மற்றும் சூடான வீடியோக்களை உள்ளடங்கிய பின்வரும் இணைப்பை நாங்கள் கண்டோம்;
www.xyzja; uy; qjyq’qfj-kfkflsj, jl; ftyj
இதிலே நீங்கள் மேலும் சிலவற்றைப் பதிவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம், அவற்றின் பிந்திய வெளியீட்டிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
சந்தோசமாக இருங்கள் !
அயோத்யா அதிர்ச்சியடைந்தார், என்ன நடக்கிறது என்பதை அவரால் கற்பனை செய்யவே முடியவில்லை; அவை யாராலும் திருத்தி அமைக்கப்பட்ட படங்களா அல்லது அவை உண்மையான படங்களா என ஆயிரக்கணக்கான கேள்விகள் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தால். அவை எதுவாக இருந்தாலும் அவற்றைப் பார்ப்பதற்காக அந்த இணைப்பைக் கிளிக் செய்தார். அது அவரை பின்வரும் முகவரிக்கு கொண்டு சென்றது
ஆயினும் , அதில் உள்நுழைய மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பின்னர் கூட அதனை பார்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
அடுத்த நாள், அவருடைய சில நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன,
ஷமி: நீங்கள் அனுப்பிய அந்த ஆபாச வீடியோ என்ன?
நலின்: ஏய், நீங்கள் ஏன் அந்த வீடியோக்களை எனக்கு அனுப்புகிறீர்கள், நான் ஏற்கனவே திருமணமாகிவிட்டேன்.
பீக்: பெண்ணே உங்கள் டைம்லைனில் இடப்பட்ட புகைப்படம் அருவருப்பானது.
அந்த இணைப்பைக் கிளிக் செய்ய வைப்பதன் மூலமாக யாரோ ஒருவர் தனது எல்லா தொடர்புகளையும் திருடவும், மோசமான வீடியோக்களை அனுப்பவும் (அது அவரது வீடியோ கூட இல்லை) தனது டைம்லைனில் நிர்வாண படத்தை இடுகையிடவும் வழிவகுத்தது என்பதை சிறிது நேரத்தின் பின்னர் அவர் உணர்ந்தார்
முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்: தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்
உரிய இணைப்பை நீங்கள் பார்வையிட்டால், முகவரியின் (URL) வகையை கவனமாக பாருங்கள்.
மிக முக்கியமாக, ஒருவேளை நீங்கள் அந்த இணைப்பிற்குச் சென்றாலும் கூட , ஒருபோதும் உங்கள் கடவுச்சொல் அல்லது பயனர் பெயரை அதில் உள்ளிடவோ அல்லது அதில் உள்நுழையவோ வேண்டாம் !