Fact Crescendo (ஃபேக்ட் கிரஸண்டோ)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024
இன்டர்நேஷனல் ஃபேக்ட் செக்கிங் நெட்வொர்க் (IFCN) அங்கீகாரம் பெற்ற மெட்டா நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு ஃபேக்ட் செக்கிங் பங்குதாரராக ‘ஃபேக்ட் கிரஸண்டோ’ செயல்பட்டு வருகிறது. சுயாதீனமான, சார்பற்ற ஆய்வாளர்கள் குழுவை கொண்டுள்ள ‘ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை’ நிறுவனத்தினால், சமூக ஊடகங்களில் பரவுகின்ற பொய்யான மற்றும் தவறான பதிவுகளை குறைக்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 3000 க்கும் மேற்பட்ட உண்மைச் சோதனைகளை இந்நிறுவனம் செய்துள்ளது. சமூகம் மற்றும் பாலினம் அடிப்படையில் பரவும் தவறான தகவல்களை மட்டுப்படுத்தும் திட்டங்களிலும் ‘ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை’ ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.. எமது இணையதளம் :- https://srilanka.factcrescendo.com/