கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 3, 2021
சைபர் துன்புறுத்தல்கள் குறித்து நுவரெலியா லைசியம் இன்டர்நேஷனல் பாடசாலையின் நிர்வாக பிரிவு பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அமர்வை ஏற்பாடு செய்தது. “சைபர் துன்புறுத்தலை புரிந்து கொண்டு தடுத்தல் ” இதன் கருப்பொருளாக இருந்தது. இந்த அமர்வின் இலக்கு பங்கேற்பாளர்களாக உயர்தர வகுப்பு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் விளங்கியதுடன் பாடசாலைக்கு வசதியாக ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒன்லைன் மூலமான கற்றலின் நவீன போக்குகளையும், ஒன்லைன் தளங்களில் புதுமையான திறன்களை மேம்படுத்தும் வழிகளையும் அறிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.
இணையத்தைப் பயன்படுத்தும் போது சிறுவர்களுக்கு இணையத்தில் ஏற்படும் பாரிய அச்சுறுத்தல்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பிரதான விடயம் விவாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பாடசாலை ஊழியர்களும் பெற்றோர்களும் கூட அவர்கள் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருந்த காரணத்தால் இது குறித்து ஆர்வமாக இருந்தனர். அமர்வில் மாணவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர், சில மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு தீர்வுகளைக் கேட்டனர்.
சைபர் துன்புறுத்தல்கள் குறித்து, மாணவர்களுக்கும் ஏனைய பங்கேற்பாளர்களுக்கும் சைபர் தொடர்பான துன்புறுத்தல் விடயத்தில் உதவிகயை பெற்றுக் கொள்ளக்கூடிய ஹிதவதியின் உதவி சேவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.