கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 3, 2021
Hithawathi @ UNDP Hackadev Program – 2019 அக்டோபர் 17 ஆம் திகதியன்று யுஎன்டிபி, ஐசிடிஏ ,கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் யுஎன்டிபி யின் அழைப்பின் கீழ் சைபர் வன்முறை தொடர்பில் தீர்வு காண்பதற்காக இளைஞர்களை ஈடுபடுத்துதல்.
இந்த இரண்டு நாள் செயலமர்வு நிகழ்வில், பெண் பங்கேற்பாளர்களுக்கு இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில் பிழைத்துக்கொள்ள தேவையான அறிவு ஐ.சி.டி.ஏ, எல்.கே டொமைன் பதிவகம் மற்றும் பேஸ்புக் மூலமாக வழங்கப்பட்டது. வணிக வாய்ப்புகள் மற்றும் ஒன்லைன் தளங்கள் வழியாக ஒரு வணிகத்தை உருவாக்க பொருத்தமான கருவிகள் குறித்து ஐ.சி.டி.ஏ மற்றும் பேஸ்புக் நிறுவனங்களால் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
எல்.கே டொமைன் பதிவகம், சைபர் தொடர்பான குற்றங்கள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அமர்வு ஒன்றைச் மேற்கொண்டது . ஹிதவதியின் உதவிச் சேவை பங்கேற்பாளர்களுக்கு இணையத்தளத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டது. சமூக ஊடக தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் பங்கேற்பாளர்களிடையே ஹிதவதியின் துண்டு பிரசுரங்களும் பகிரப்பட்டன