கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 20, 2024
பாகம் 05 வெளியீடு 04- 20வது ஏப்ரல் 2024
Piggybackers களை உள்ளே அனுமதிப்பீர்களா?
Piggybacking என்றால் என்ன?
பிக்கிபேக்கிங் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபரின் அனுமதி அல்லது அதனை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மூலம் கடந்தகால பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை பதுக்கி வைப்பதாகும். இது ஆன்லைன் மட்டுமல்லாது நடைமுறை பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரு பெரிய பிரச்சனையாகும். நிறுவனங்களும் பொது மக்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவர்கள் தங்களை மேலும் சிறப்பாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
உங்களுக்கு தெரியுமா?
- 2024 இல் 30%க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிரியேட்டர் எகானமி ஸ்டார்ட்அப்களில் பொறியியல் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
https://www.digitalinformationworld.com - App devs மீது Google வழக்குத் தொடர்ந்துள்ளது மேலும் அவர்கள் 100k+ பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டிருப்பதோடு Play Store ன் crypto scammers எனக் கூறுகிறது
https://www.theregister.com - மில்லியன் கணக்கான SurveyLama பயனாளர்களின் பெரிய அளவு மீறலில் தரவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்
https://www.techradar.com - AT&T தரவு கசிவால் 73M வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அதனால் ஏற்பட்ட பிழைகள் அமெரிக்க அரசாங்க செய்தி பெட்டிக்கு வழிவகுத்தன.
https://www.helpnetsecurity.com
குழந்தைகள், பதின்வயதினர் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த இணையப் பாதுகாப்பிற்கான சிறந்த உதவிக்குறிப்புகள்
- இணைய ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள்
- உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
- வலுவான கடவுச்சொற்களை தேர்வு செய்யுங்கள்
- அறிமுகமில்லா நபர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்
- உங்கள் சமூக ஊடக கணக்குகளை தனிப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்
- என்ன பதிவு இடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
- பாதுகாப்பான இணைய தளங்களில் இருந்து மட்டும் ஆன்லைனில் கொள்வனவு செய்யுங்கள்
- கடவுச்சொல் நிர்வாகியைப் பயன்படுத்துங்கள்
- எதையும் அதிகமாகப் பகிர வேண்டாம்
- பொது WiFi உபயோகிக்கும் போது தனிப்பட்ட பாதுகாப்பு முறையில் பயன்படுத்துங்கள்
- உபயோகத்தில் இல்லாத கணக்குகளை மூடுங்கள்
- ஃபிஷிங் (phishing) பற்றி கவனத்துடன் இருங்கள்
- தனியுரிமை அமைப்புகளை இயக்கத்தில் வையுங்கள்
- நீங்கள் என்ன பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
- சாதனங்களை மேம்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்
- ஒருமிக்க ஆன்லைனில் நேரத்தை செலவிடுங்கள்
- தனியுரிமைக் கொள்கைகளைப் தெரிந்து கொள்ளுங்கள்
- பள்ளி வேலைகளுக்கு தேவையானவை என்ன என்பதை ஆசிரியர்களுடன் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
- அனுமதிகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
- தரவுகளை தொடர்ந்து காப்பு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
- உங்களது இணைய இணைப்பைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்
- இருப்பிடத் தரவை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிந்து கொள்ளுங்கள்
- நவீன வீட்டு சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்
- ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணியுங்கள்
- கூடுதல் பாதுகாப்புக்கு 2FA ஐப் பயன்படுத்துங்கள்
- ஒரு விரிவான இணைய பாதுகாப்பு தொகுப்பை நிறுவுங்கள்
- சந்தேகம் இருக்கும் பட்சத்தில் பிற உதவியை பெற்றுக் கொள்ளுங்கள்
- திரை நேரத்தையும் கவனச்சிதறல்களையும் அளவுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
சைபர் செய்திகள்
இலங்கை அரசின் இணையத்தளம் ‘உயர்தர மாணவனால்’ ஊடுருவல் (hack) செய்யப்பட்டது
இலங்கை கல்வி அமைச்சின் இணையத்தளமானது, “பாதுகாப்புக் குறைபாடுகள்” என்ற விட்டுச் சென்ற செய்தியுடன் உயர்தர மாணவர் ஒருவரால் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது.
https://www.tamilguardian.com
The Asia Foundation மற்றும் Google.org கூட்டாண்மை இலங்கையில் APAC Cybersecurity Fund இன் முழுப்பதிப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் திட்டமானது 10,000 நபர்களை உள்ளடக்கிய 5,000 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
https://asiafoundation.org
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கான புதிய ஆன்லைன் அறிக்கை முறை தொடங்கப்பட்டது
இணையதளத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு தீர்வு காண வேண்டிய அவசரத்தை அடையாளப்படுத்தி, இந்த முயற்சி இணையம் மற்றும் சமூக ஊடக ஒளியலை வரிசைகள் மூலம் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் அநாகரீகமான காணொளிகளை பரப்பப் படுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
https://www.dailynews.lk
YouTube இன் புதிய புதுப்பிப்புகள் நேரலை தொடர்பாடலிற்கான புதிய திருப்பு முனையாக இருக்கலாம்
உள்ளடக்க படைப்பாளர்கள் பெரும்பாலும் நேரலை தொடர்பாடல் செய்ய முனைவதற்கான நோக்கம் இவ்வாறான நேரலை தொடர்பாடல்கள் அவர்களது பார்வையாளர்களுடன் உண்மையான நேரத்தில் நேரடியாக தொடர்பு கொள்வதற்காகவே ஆகும்.
https://www.digitalinformationworld.com
மாதத்தின் ரீல்
ஹிதாவதி facebook பக்கத்தில் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி வெளியிடப்படும் ரீலைப் பார்த்து, நீங்கள் புரிந்துகொண்டதை/உங்கள் அறிவிற்குச் சேர்த்ததைச் சுருக்கமாகக் கமெண்ட் செய்யுங்கள்!
தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களுக்கு MD குணசேன புத்தகக் கடை பரிசு வவுச்சர்கள் தலா ரூ.2,000/- வழங்கப்படும்!
இந்தப் போட்டிக்கு நிதியுதவி வழங்கிய LK டொமைன் ரெஜிஸ்ட்ரிக்கு மிக்க நன்றி!
த லிங்க்
வெளிநாட்டு நவீன சந்தைப்படுத்தல் நிறுவனம் ஒன்றின் அலைபேசி இலக்கத்தில் இருந்து WhatsApp மூலமாக ஒன்லைன் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக, சித்துமிக்கு ஒரு செய்தி வந்தது. அவளது அலைபேசி இலக்கமானது ஒரு வேலை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் இருந்து பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக கருதிய அவள் மேலதிக தகவல்கள் வழங்குமாறு வினவினாள்.
ஹிதவதி செய்தி அறை
விழிப்புணர்வு திட்டங்கள்
கடந்த கால நிகழ்வுகள் :
ஹிதவதியின் 10 வது ஆண்டு விழா
BMICH ல் நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இணையத்தில் உங்கள் நம்பிக்கையாளர்’ என அறிமுகப்படுத்தப்பட்ட ஹிதவதி திட்டம், 02 ஏப்ரல் 2024 அன்று BMICH இல் தனது பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்நிகழ்வில் இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமதி புஷ்பா ரம்யானி சொய்சா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ் மற்றும் பல பங்குதாரர்கள் மற்றும் பல்வேறு வழிகளில் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
அத்தோடு ஒரு சிறிய கையேடு மற்றும் பத்து வருட பயணத்தின் சிறப்பம்சங்களைக் குறிக்கும் வகையில் ஒரு காணொளியும் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஹிதவதி திட்டத்திற்கு ஆதரவளித்த நபர்கள் அனைவரும் பாராட்டப்பட்டனர்.
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு
SAVIKMA AUTOMATION & ENGINEERING SERVICES (PVT) LTD, மூனமலே
ஹிதவதி சேவைகள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு 1 ஏப்ரல் 2024 அன்று மூனமலையில் உள்ள SAVIKMA AUTOMATION & ENGINEERING SERVICES (PVT) LTD நிறுவனத்தில் ஹிதவதியால் நடத்தப்பட்டது. இந்த அமர்வில் நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்
எல்பிட்டிய ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில்
மார்ச் 30, 2024 அன்று, எல்பிட்டிய ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் ‘தக்ஷின ஜன மெஹேவர’ நிகழ்ச்சித் திட்டத்தின் நாகொட பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் நட்புறவு திட்டத்தினால் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
சைபர் ஸ்பேஸில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு திட்டம்
குகுலேகங்கா லயா ஓய்வு நேரத்தில்
மார்ச் 28, 2024 அன்று, குருநாகலில் உள்ள லயா லீஷரில் சைபர் ஸ்பேஸில் பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சுயாதீன தொலைக்காட்சி சேனல் நடத்திய ஆண்டு இளவரசன் மற்றும் இளவரசி போட்டியின் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பங்குதாரர்கள் மன்றத்தில் ஹிதவதியின் பங்கேற்பு
MARRIOTT COLOMBO வின் COURTYARD ல்
மார்ச் 21 ஆம் தேதி MARRIOTT COLOMBO COURTYARD ல் பொது ஸ்தலத்திற்கான தேடல் ஏற்பாட்டில் “இணைய பாலினம் – அடிப்படையிலான பாலியல் வன்முறை” குறித்த தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய பங்குதாரர்கள் மன்றத்தில் ஹிதவதி பங்கேற்றது. பல்வேறு அமைப்புகள் இம்மன்றத்தில் கற்கையோடு சேர்ந்த தங்களது ஒத்துழைப்பையும் வழங்கவதற்காக இணைந்தது.
சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை
புதிய HTTP/2 பாதிப்பானது இணைய சேவையகங்களை DoS தாக்குதல்களுக்கு அம்பலமாக்குகிறது
புதிய ஆராய்ச்சி ஒன்றில் HTTP/2 நெறிமுறையில் CONTINUATION சட்டகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது, இது சேவை மறுப்பு (DoS) தாக்குதல்களை நடத்த பயன்படுத்திக்கொள்ளலாம் என அறியப்படுகிறது.
https://thehackernews.com
CISA இரண்டு அறியப்பட்ட பயன்படுத்தக் கூடிய எளிதான பாதிப்புகளை அட்டவணையில் சேர்க்கிறது
செயலில் உள்ள பயன்பாடுகளின் சான்றுகளின் அடிப்படையில், CISA அதன் அறியப்பட்ட பயன்படுத்தக் கூடிய எளிதான பாதிப்புகள் பட்டியலில் இரண்டு புதிய எளிதான பாதிப்புகளைச் சேர்த்துள்ளது.
https://www.cisa.gov
Google Chrome இல் பல பாதிப்புகள் (CERT-NCSOC-0221)
தொலைவில் இருந்து தாக்குபவர்கள், இந்த பாதிப்புகளில் சிலவற்றை பயன்படுத்தி, சேவை நிலை மறுப்பு மற்றும் இலக்கு அமைப்பில் தொலைவில் இருந்தபடி குறியீடு செயல்படுத்தலைத் தூண்டலாம்.
https://www.onlinesafety.lk
திரைப்பட குறிப்பு
த கேர்ள் இன் த ஸ்பைடர்ஸ் வெப் (2018)
இளம் கணனி ஊடுருவல் செய்யும் லிஸ்பெத் சாலண்டர் மற்றும் பத்திரிகையாளர் மைக்கேல் ப்லோம்க்விஸ்ட் ஆகியோர் உளவாளிகள், இணையக் குற்றவாளிகள் மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்க அதிகாரிகளின் வலையில் தாங்கள் சிக்குண்டதை அறிந்தனர்.
https://www.youtube.com
கேஜெட்
Edge Impulse ல் வாகன தரிப்பிட நிரம்பலைக் கண்டறிதல்
Edge Impulse ல் உள்ள பொருள் கண்டறிதல் மாதிரி மூலம் வெறுமையான மற்றும் நிரப்பப் பட்ட வாகன தரிப்பிடங்களைக் காட்டுகிறது.
https://www.hackster.io
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக எனது LinkedIn கணக்கில் உள்ள அனைத்தும் போலியானவை.
நீங்கள் இப்போது எங்களை தொடர்பு கொள்ளலாம்
WhatsApp & Viber
+94 77 771 1199
(வணிக நேரங்களில் மட்டும்)