கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 20, 2023

பாகம் 04 வெளியீடு 10- 20வது நவம்பர் 2023

ஹிதவதி மாதாந்த அறிக்கை

முகப்புத்தகத்தில் காணப்படும் ‘லாக் ப்ரொஃபைல் (Lock Profile)’ அம்சம்

முகப்புத்தகத்தில் உங்கள் சுயவிவர கணக்கினைப் பூட்டும் விருப்பம் முற்றிலும் உங்களுடையது. நீங்கள் உங்கள் வலைப்பின்னலை விரிவுபடுத்தி, மெய்நிகர் (virtual) தொழில்முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்தால், ஒரு பரந்த மெய்நிகர் சமூகத்தை கட்டியெழுப்ப திறந்து வைக்கப்பட்ட சுயவிவர கணக்கை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். இருப்பினும், பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் உள்ளடக்கங்கள் அதாவது புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளது என்ற உண்மையை நீங்கள் புறக்கணிக்க முடியாது.

     உங்களுக்கு தெரியுமா?

 

கடந்த 9 மாதங்களில் 23,534 முகப்புத்தக புகார்கள் பதிவு
https://divaina.lk

77 சதவிகித இணைய கட்டண பயன்பாடுகள் (apps) தரவு வெளியேற்றும் தீம்பொருளுக்கு (malware) எளிதில் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
https://www.digitalinformationworld.com

சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) தரவு மீறலுக்கு உள்ளானது மேலும் இது தொடர்பில் 665,000 வாடிக்கையாளர்கள் அம்பலப்படுத்தப்பட்டனர்.
https://cybersecurityventures.com

2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் 36.18 மில்லியன் கைப்பேசி தொலைத்தொடர்பு இணைப்புகள் இருந்ததாக GSMA புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://datareportal.com

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு வழங்குநரான Optus மில்லியன் கணக்கானவர்களுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
https://cybernews.com

மாதாந்த உதவிக்குறிப்பு

இணைய பாதுகாப்பு சம்பவத்திற்கான எதிர்செயல்களை விரைவுபடுத்த 6 படிகள்

நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மற்றும் சைபர் குற்றவாளிகளுக்கு எதிரான இறுதிப்புள்ளிகளைப் பாதுகாக்கும் திறனைத் நவீன பாதுகாப்பு கருவிகள் தொடர்ந்து மேம்படுத்துகின்றன. இருப்பினும் தீய குற்றவாளிகள் ஏதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

1. தயாரிப்பு
2. கண்டறிதல்
3. கட்டுப்பாடு
4. ஒழிப்பு
5. மீட்பு
6. கற்றுக்கொண்ட பாடங்கள்

     சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை


அட்லாசியன் பெருங்கூட்ட தரவு மையங்கள் மற்றும் பெருங்கூட்ட சேவையாகங்களில் உள்ள முக்கியமான பாதிப்புகளுக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளை வெளியிடுகிறது.
இப்பாதுகாப்புப் புதுப்பிப்பானது பெருங்கூட்ட தரவு மையங்கள் மற்றும் பெருங்கூட்ட சேவையாகங்களில் ஒரு முறையற்ற அங்கீகார பாதிப்பு மற்றும் ஒரு உடைந்த அணுகல் கட்டுப்பாட்டு பாதிப்பு ஆகியவற்றைக் எடுத்துரைக்கின்றது.
https://digital.nhs.uk

முக்கியமான உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் விரித்திறனை மேம்படுத்த புதிய “கவசங்கள் தயார் (Shields Ready)” என்ற பிரச்சாரத்தை DHS வெளியிட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), இணைய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு நிறுவனம் (CISA), மற்றும் மத்திய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (FEMA) ஆகியவை முக்கியமான உள்கட்டமைப்பு சமூகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த ஊக்குவிக்க புதிய “ஷீல்ட்ஸ் ரெடி” பிரச்சாரத்தைத் தொடங்கின.
https://www.cisa.gov

NuGet மீதான தீங்கிழைக்கும் தொகுப்பு பிரச்சாரம் MSBuild ஒருங்கிணைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது.
முதன்முறையாக கடினமான MSBuild அம்சத்தில் அறியப்பட்ட பாதுகாப்பு ஆபத்தை .NET களஞ்சியத்தில் தீங்கிழைக்கும் கோப்புகளைக் கண்டறிவதற்கு தாக்குபவர்கள் பயன்படுத்துகின்றனர்.
https://www.csoonline.com


சைபர் செய்திகள்

 

இலங்கையின் ‘நிகழ்நிழை (online) பாதுகாப்பு சட்டமூலத்திற்கு’ குழுநிலை திருத்தங்கள்: CPA அக்கறை.
இலங்கையின் சர்ச்சைக்குரிய ‘நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு’ மனுத்தாக்கல் செய்த நிறுவனங்களில் ஒன்றான மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA), சட்டமூலத்திற்கு முன்மொழியப்பட்ட குழுநிலை திருத்தங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளது.
https://economynext.com

அமெரிக்கன் விமான நிறுவனங்களின் விமானிகள் தொழிற்சங்கம் பணையத் தீநீரல் மூலம் தாக்கப்பட்டது.
அமெரிக்கன் விமான நிறுவனங்களின் விமானிகள் தொழிற்சங்கம் பணையத் தீநீரல் (Ransomware) தாக்குதலைத் தொடர்ந்து அதன் அமைப்புகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இது விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதித்த சமீபத்திய இணைய சம்பவங்களில் ஒன்றாகும்.
https://cybersecurityventures.com

வரவிருக்கும் அமெரிக்க தேர்தல்களுக்கு முன்னதாக அரசியல் சந்தைப்படுத்துபவர்களுக்கு, மீட்டா (Meta) அதன் AI கருவிகளை அணுக மறுக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனமான மீட்டா (Meta) வரவிருக்கும் அமெரிக்க தேர்தல்களுக்கு முன்னதாக தனது அரசியல் சந்தைப்படுத்தல் கருவிகளுக்கான அணுகலை மறுக்கும் வாக்குறுதியில் உண்மையாக இருக்கின்றது.
https://www.digitalinformationworld.com

பாதுகாப்பு தொடர்பில் முகப்புத்தகம் போன்ற போட்டியாளர்களை விட TikTok பின்தங்கி காணப்படுகின்றது.
பாதுகாப்பின் அடிப்படையில் போட்டி தளங்களான முகப்புத்தகம் மற்றும் யுடியூப் முன்னணியில் இருக்கும் நிலையில் TikTok பின்தங்கி இருப்பதாக ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.
https://cybernews.com

ExpressVPN இப்போது எளிதான கடவுச்சொல் நிர்வாகியுடன் வருகிறது.
ExpressVPNக்கான அணுகல் உள்ள எவரும் இப்போது விசைகளைப் (Keys) பயன்படுத்தலாம் மேலும் இது ExpressVPN இன் புதிய கடவுச்சொல் நிர்வாகியாகும்.
https://www.xda-developers.com

 

 

மாதத்தின் ரீல்

ஹிதாவதி facebook பக்கத்தில் ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதி வெளியிடப்படும் ரீலைப் பார்த்து, நீங்கள் புரிந்துகொண்டதை/உங்கள் அறிவிற்குச் சேர்த்ததைச் சுருக்கமாகக் கமெண்ட் செய்யுங்கள்!

தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களுக்கு MD குணசேன புத்தகக் கடை பரிசு வவுச்சர்கள் தலா ரூ.2,000/- வழங்கப்படும்!

இந்தப் போட்டிக்கு நிதியுதவி வழங்கிய LK டொமைன் ரெஜிஸ்ட்ரிக்கு மிக்க நன்றி!

  உண்மைக்கதை

பட்டப்படிப்புக்கு தவறவிட்ட பாடம்

ஒரு காலைப் பொழுதில் ஹிதவதிக்கு ஒரு தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவருடைய குரல் கவலை மற்றும் விரக்தியால் நடுங்கியது. சில்வா என்ற அந்த தந்தை தனது குடும்பத்தில் இருந்த குழப்பத்தைப் பற்றி ஹிதவதியிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

திரு. சில்வா: “மிஸ், என் மகள் ஒரு பல்கலைக்கழக மாணவி. அவள் மிகவும் பிரகாசமான திறமையான பெண். அவள் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்ற போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இருப்பினும் நேற்று நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால், அவள் இப்போது வகுப்புகளுக்குச் செல்ல மறுக்கின்றாள். அவள் அவளது அறைக்குள் தன்னைத் தானே பூட்டிக் கொள்கிறாள், அத்தோடு அவள் முற்றிலும் உடைந்து போய் காணப்படுகிறாள். அவள் தொடர்ந்து கண்ணீரோடும், திகிலடைந்தவளாக இருக்கின்றாள். தயவுசெய்து உங்களால் எங்களுக்கு உதவ முடியுமா?”

அடுத்து என்ன நடந்தது

ஹிதவதி செய்தி அறை

விழிப்புணர்வு திட்டங்கள்

கடந்த கால நிகழ்வுகள் :

இன்ஃபோடெல் (INFOTEL) 2023
BMICH, கொழும்பு

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் தொழில் கூட்டமைப்பு (FITIS) ஏற்பாடு செய்த இலங்கையின் மிகப்பெரிய ICT கண்காட்சி 2023 இல் ஹிதவதிக்கு ஒரு விற்பனையகம் இருந்தது. ஹிதவதி துண்டுப் பிரசுரங்கள், விளம்பர அட்டைகள் மற்றும் சுஹுருசரா துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது மற்றும் ஹிதவதி பற்றிய விழிப்புணர்வு மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்டது. 2023 நவம்பர் 03, 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் இருந்து பல பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 3000 பேர் அங்கு வருகை தந்தனர்.


ஹிதவதி விழிப்புணர்வு கூட்டம்

NSBM கிரீன் யுனிவர்சிட்டி டவுன் – ஹோமாகமா

இணைய பாதுகாப்பு மற்றும் ஹிதவதி சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அமர்வு 02 நவம்பர் 2023 அன்று NSBM கிரீன் யுனிவர்சிட்டி டவுன் – ஹோமாகமாவில் நடைபெற்றது. இந்த அமர்வில் விரிவுரையாளர்களும் சுமார் 50 மாணவர்களும் கலந்து கொண்டனர்.


‘ஹிதவதி டீன்ஸ் ஹப்’ திட்டம் – இணைய பாதுகாப்பு குறித்த பெற்றோர் விழிப்புணர்வு அமர்வு மகுலுகஸ்வெவ மகா வித்தியாலயத்தில்

LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் அனுசரணையில் “ஹிட்டாவதி டீன்ஸ் ஹப்” என்ற துணைத் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி மகுலுகஸ்வெவ கல்லூரியில் இணையத்தில் உலாவல் மற்றும் இணையப் பாதுகாப்பு மற்றும் நட்புரீதியான சேவைகளைப் பாதுகாப்பது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் சுமார் 80 பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

ஹிதவதி விழிப்புணர்வு கூட்டம்
DIGIGO.LK நிகழ்வு – காலி

2023 அக்டோபர் 20 அன்று DigiGo.lk இன் முதல் நிகழ்வில் ஹிதவதியின் விழிப்புணர்வு அமர்வு காலியில் நடைபெற்றது. இது LK டொமைன் ரெஜிஸ்ட்ரி, FITIS (Federation of Information Technology Industry Sri Lanka) உடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிராந்தியத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (SMEs) உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

எதிர்கால வலையரங்கு அமர்வுகளில் பங்கேற்க மற்றும் இணைய பாதுகாப்பு பற்றி அறிய, கீழே உள்ள குறியீடுகளை கிளிக் செய்து எங்கள் Viber அல்லது WhatsApp குழுவில் சேரவும்:


திரைப்பட குறிப்பு

ஸ்கில் ரோட் (Silk Road ) – 2021

 

டில்லர் ரஸ்ஸல் (Tiller Russell) இயக்கிய, இது 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ரோஸ் உல்ப்ரிச்ட்டால் (Ross Ulbricht) தொடங்கப்பட்ட அநாமதேய இருள் வலைச் சந்தையின் கதையாகும். சில்க் ரோட்டை (Silk Road) மூடிய FBI நடவடிக்கைக்குப் பிறகு Ulbricht ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.

https://youtu.be/LBOBuqBzn7w?si=buLm8mycJrqvfO16

கேஜெட்

 

 

புத்திசாலித்தனமான விவசாய முறை

 

புத்திசாலித்தனமான விவசாய முறை: பயிர் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த உணரிகளின் தரவுகளின் அடிப்படையில் தானியங்கு நீர்ப்பாசனம் மற்றும் காற்றோட்டம் அமைப்புகளை செயல்படுத்தும்.
https://www.hackster.io

வேடிக்கைக்காக ஒரு தகவல்

படுக்கையறை காதல்
ஹேய்! எனது இன்ஸ்டாகிராம் கணக்கை ஊடுறுவினீர்களா?

https://cybersecurityventures.com/

நீங்கள் இப்போது எங்களை தொடர்பு கொள்ளலாம்
WhatsApp & Viber
+94 77 771 1199
(வணிக நேரங்களில் மட்டும்)

ஹிதவதி வாட்ஸ்அப் மற்றும் வைபர்
எண். +94 77 771 1199
(எங்கள் வணிக நேரங்கள் – வார நாட்களில் காலை 08.30 – மாலை 05.00 சனிக்கிழமைகளில் காலை 08.30 – மதியம் 12.30 வரை )