கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 4, 2023


மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) என்றால் என்ன
?

மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) என்பது கணினி அல்லது சேவையகத்தில் இயங்கும் ஒரு சிறப்புக் கணினி மென்பொருளாகும். அணுகல் மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான வெளிப்புற முயற்சிகளிலிருந்து கணினி அல்லது சேவையகத்தைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.மேலும், சந்தேகத்திற்கிடமான  வெளிச்செல்லும் கோரிக்கைகளையும் சரிபார்த்துக்கொள்ளவும் ஒரு மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) கட்டமைக்கப்படலாம்.

மென்பொருள் தீச்சுவர்(ஃபயர்வால்கள்) வின்டோஸ், மெக் ஓஎஸ் மற்றும் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களைக் கொண்ட தனிப்பட்ட கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலே உள்ளவற்றைத் தவிர, IoT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) சாதனங்களில்  தீச்சுவர்(ஃபயர்வால்கள்) உட்பொதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வலையமைப்பிலுள்ள ஒவ்வொரு கணினியிலும் ஒரு மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) நிறுவப்பட வேண்டும். எனவே ஒரு மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) ஒரு நேரத்தில் ஓர் கணினியை மாத்திரமே பாதுகாக்க முடியும்.

மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) செயற்படும் முறை மற்றும் மென்பொருள் தீச்சுவரின் (ஃபயர்வால்) சிறப்பு அம்சங்கள்

  • ஏற்கனவே வன்பொருள் ஃபயர்வாலால் புறக்கணிக்கப்பட்ட நிகழக்கூடிய சாத்தியமான எந்தவொரு தீங்கிழைக்கும் நிரல் அல்லது  அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பின் இரண்டாவது வரிசையாக இது  செயல்படுகிறது.
  • ஒரு நிரல்வழியமைப்பை அணுக முயற்சிக்கும் போது, மென்பொருள் தீச்சுவர் (ஃபயர்வால்) அது தீங்கிழைக்குமா அல்லது சட்டப்பூர்வமானதா என்பதைத் தரவுத்தளத்திற்கு எதிராகச் சரிபார்ப்பதன் மூலம் தீர்மானிக்கிறது.
  • மென்பொருள்தீச்சுவர் (ஃபயர்வால்) சாதனத்தில் நுழைய முயற்சிக்கும் நெரிசலைத் தடுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வலையமைப்பின் ஒற்றை கூறுகளை அணுகுவதிலிருந்து பயனர்களைத் தடுக்க முடியும்.
  • மேம்படுத்தப்பட்ட மென்பொருள் தீச்சுவர்(ஃபயர்வால்கள்) பொதுவாக ஒரு பயனர் அல்லது சாதனத்திற்கு அனுமதிக்கப்பட்ட அணுகல் உரிமைகள் மீது சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகின்றன, ஏனெனில் அவை விதிகளின் தொகுப்பின் அடிப்படையில் அனைத்து நெரிசல்களையும் வடிகட்டி தரவுகளை ஆய்வு செய்யக்கூடியது.
  • ஒரு மென்பொருள்தீச்சுவர் (ஃபயர்வால்) மூலம் திறவுச் சொற்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தைத் தடுக்கலாம், இருப்பினும் வன்பொருள் தீச்சுவர்களால் (ஃபயர்வால்) ஒரு தளத்தை (டொமைன்) அல்லது வலைத்தளத்தை மாத்திரமே தடுக்க முடியும்.

மென்பொருள் தீச்சுவர்களின் (ஃபயர்வாலின்) நன்மைகள்       

  • இதை நிறுவுவது மலிவானது மேலும் இலவச பதிப்புகள் கூட கிடைக்கின்றன.
  • கூடுதல் வன்பொருள் அல்லது மென்பொருளின் தேவையின்றி நேரடியாகவே நிறுவலைச் செய்து கொள்ளலாம்.
  • மென்பொருள்தீச்சுவர்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தளங்களுக்கான அணுகலைத் தடுக்கலாம்.
  • புதுப்பிப்புகள் எளிமையானவை மற்றும் பயனர்கள் தாங்களாகவேஅவற்றைச் செய்துகொள்ள முடியும்.
  • இதுவைரஸ்கள், இணையத் திருடர்கள் (ஹேக்கர்கள்), ஸ்பேம், தீங்கு நிரல் (மால்வேர்) மற்றும் பிற தீங்கிழைக்கும் நிரல்களுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்க உதவுகிறது.
  • வெவ்வேறு அளவிலான அணுகல் முறைகளை மற்றும்அனுமதிகளைப் பிற பயனர்களுக்கு எளிதாக ஒதுக்கப்படலாம்.
  • பெற்றோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும்இளையோரைக் கண்காணிக்கும் முறைகளும் இதில் சாத்தியமாக இருக்கின்றது.


மூலங்கள்:

https://www.geeksforgeeks.org/difference-between-hardware-firewall-and-software-firewall/

https://www.fortinet.com/resources/cyberglossary/how-does-a-firewall-work

https://www.businesstechweekly.com/operational-efficiency/computer-networking/software-firewall-vs-hardware-firewall/

https://www.checkpoint.com/cyber-hub/network-security/what-is-firewall/what-is-firewall-software/