கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
“Report spam or abuse” இணைப்பு சமூகத்தினர் பதிவேற்றும் அல்லது பார்க்கும் வீடியோக்களில் இடப்பட்டிருக்கும் வேண்டாத கருத்துரை தொடர்பில் முறைப்பாடு செய்ய சமூகத்தை அனுமதிக்கிறது.போதுமான பயனர்கள் ஒரு கருத்தை வேண்டாதது எனக் குறித்தால், அது “Marked as Spam” என்ற இணைப்பின் கீழ் மறைக்கப்படும்.“Show link” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கருத்துரையை மீண்டும் காணலாம்.வீடியோவை பதிவேற்றியவர் கருத்துரையை வேண்டாதது என “unmark” செய்யும் தகமையைக் கொண்டுள்ளார்.
1. நீங்கள் முறைப்பாடு செய்ய விரும்பும் கருத்துரைக்கு செல்க
2. More ஐ கிளிக் செய்க.
3. Report இல் வேண்டாதது (spam) அல்லது தவறானது (abuse) இனை கிளிக் செய்க
4. முறைப்பாடு செய்வதற்குரிய காரணத்தைத் தெரிவுசெய்யவும் .
மிகுந்த கவனமாக “Report spam or abuse” அம்சத்தைப் பயன்படுத்தவும். நீங்கள் அதை தவறாகப் பயன்படுத்தினால் யூடியூப்பினை பயன்படுத்த உங்கள் மீது தடை விதிக்கப்படலாம்.
உங்கள் கருத்து வேண்டாதது என தவறாக குறிப்பிடப்படும்போது
நீங்கள் இட்ட கருத்துரை வேண்டாதது என தவறாக குறிக்கப்பட்ட போது அது அவ்வாறு இருப்பதாக நீங்கள் நம்பவில்லை எனில் வீடியோவைப் பதிவேற்றியவரைத் தொடர்புகொண்டு உங்கள் கருத்தை பழைய நிலைக்கு கொண்டு வரும்படி அவர்களிடம் கேட்கலாம்.
மூலம்: https://support.google.com/youtube/answer/2802027?hl=en&co=GENIE.Platform%3DDesktop&oco=1