கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 15, 2024
வாட்ஸ்அப் இறுதியில் இருந்து இறுதி வரையான குறியாக்கம் கொண்ட ( என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனின்) பாதுகாப்பு அம்சத்துடன் வருவதால், பயன்பாட்டில் பகிரப்படும் உள்ளடக்கத்தை வாட்ஸ்அப்பினால் கூட அணுக முடியாது. எனவே, வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறும் சம்பவங்களைப் புகாரளிப்பதன் மூலம் அறிவிப்பது அவசியம். செயலிகள் மூலம் அவர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் எப்படிச் சிக்கல்களைப் புகாரளிக்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
- Android இல்:
வாட்ஸ்அப்பிற்குச் செல்லவும் > More options என்பதைத் தட்டவும் ( ) தொடர்ந்து > > Settings > Help > க்கு செல்லவும்
வாட்ஸ்அப்பிற்குச் செல்லவும் > More options என்பதைத் தட்டவும் ( ) தொடர்ந்து > > Settings > Help > க்கு செல்லவும்
முடிந்தவரை தகவல்களை வழங்குவதன் மூலம் பிரச்சனைக்குரிய உள்ளடக்கத்தில் உள்ள சிக்கலை நீங்கள் தெளிவாக விவரிக்கலாம். நீங்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க தொடர்புடைய ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கலாம்.
முதன்முறையாக தெரியாத எண்ணிலிருந்து செய்தியைப் பெறும்போது, அந்த எண்ணை வாட்ஸ்அப்பில் பயன்பாட்டிலிருந்து நேரடியாக முறைப்பாடு செய்யும் தெரிவிக்கும் விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும். அதேபோல், ஒரு தொடர்பு / வணிகம் / குழு (நீங்கள் பங்கேற்பாளர்) WhatsApp சேவை விதிமுறைகளை மீறுவதாக நீங்கள் நினைத்தால், கீழே காட்டப்பட்டுள்ள படிகளைப் பயன்படுத்தி தொடர்புடைய தொடர்பு / வணிகம் / குழுவைப் புகாரளிக்கலாம்:
- அரட்டையைத் திறக்கவும்.
- அவர்களின் சுயவிவரத் தகவலைத் திறக்க, தொடர்பு / வணிகம் / குழுவின் பெயரைத் தட்டவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து, தொடர்பு / வணிகம் / குழுவைப் புகாரளி என்பதைத் தட்டவும்.
மேற்கூறியவற்றைத் தவிர, உங்களை ஏமாற்றி பயனடைவதற்காக பெரும்பாலும் தெரியாத எண்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பும் ஸ்பேம் மற்றும் புரளி செய்திகள் வாட்ஸ்அப்பை பாதுகாப்பான தளமாக மாற்ற அதே வழியில் புகாரளிக்கலாம். ஒரு செய்தி சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால் அல்லது உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நன்றாக இருந்தால், அதைத் தட்டவோ, பகிரவோ அல்லது அனுப்பவோ வேண்டாம்.
ஸ்பேம் மற்றும் புரளி செய்திகளைக் கவனியுங்கள்,
- எழுத்துப்பிழைகள் அல்லது இலக்கணப் பிழைகளைச் சேர்த்தல்
- இணைப்பைத் தட்டச் சொல்லுதல்
- உங்கள் தனிப்பட்ட தகவலை (கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு எண்கள், பிறந்த தேதி, கடவுச்சொற்கள் போன்றவை) பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டல்
- செய்தியை அனுப்பச் சொல்லுதல்
- புதிய அம்சத்தை “செயல்படுத்த” இணைப்பைக் கிளிக் செய்யும்படி கேட்டல்
- வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறுதல் (WhatsApp ஒரு இலவச பயன்பாடாகும், மேலும் WhatsApp ஐப் பயன்படுத்த பணம் செலுத்துமாறு உங்களிடம் கேட்காது மற்றும் WhatsApp ஐ இலவசமாகப் பயன்படுத்த நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.)
உங்கள் தொடர்புகளில் ஒருவர் அத்தகைய செய்தியை உங்களுக்கு பகிர்ந்திருந்தால் / அனுப்பியிருந்தால், செய்தியை நீக்கவும் மற்றும் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யாதீர்கள் அல்லது தனிப்பட்ட தகவலை வழங்க வேண்டாம். அவர்கள் அனுப்பிய செய்தியில் ஸ்பேம் இருப்பதாகத் உரியவரிடம் கூறி, மேலதிக தகவலுக்கு அவர்களை ஹிதவதிக்கு அனுப்பவும்.
அறிக்கையிடப்பட்ட செயல்பாடு அவர்களின் சேவை விதிமுறைகளை மீறுவதாக நம்பினால், கணக்குகளைத் தடைசெய்ய WhatsApp க்கு உரிமை உண்டு.
குறிப்பு: உடனடி உதவி தேவைப்படுவதால் உங்களுக்கோ அல்லது வேறு யாருக்கோ உளரீதியான/உடல் ரீதியான ஆபத்தில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் உள்நாட்டு சட்ட அமலாக்க அதிகாரிகளை (உதாரணத்திற்கு,பொலிசார்) தொடர்புகொண்டு உள்ளடக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் மற்றும் கிடைக்கக்கூடிய தொடர்புத் தகவலுடன் புகாரளிக்கலாம்.
ஆதாரம்:
https://faq.whatsapp.com/general/security-and-privacy/staying-safe-on-whatsapp/?lang=en