கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
- வட்ஸ்அப்பில் உங்கள் உரையாடல்கள் மற்றும் மீடியா கோப்புகளில் உள்ள அனைத்து தகவல்களையும் நீக்குவது நிரந்தரமான செயல்முறை அல்ல. தரவுகளை மீளப் பெறமுடியாத வகையில் அவற்றை நிரந்தரமாக நீக்குவதற்கு இது உத்தரவாதம் அளிக்காது.
- உங்கள் கணக்கை நீக்கத் தொடங்குவதற்கு முன், ‘WhatsApp’ மற்றும் ‘WhatsApp Attachment’ ஆகியவற்றில் உள்ள அனைத்து தகவல்களையும் சரிபார்க்கவும். இது எல்லா தரவுகளையும் நிரந்தரமாக அழிக்க உதவுவதுடன் நீங்கள் கணக்கை நீக்கும்போது அந்தரங்கம் வெளிப்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யும்.
- நீங்கள் வட்ஸ்அப்பிற்குச் சென்றதும், மேல் வலது மூலையில் காட்டப்படும் மெனு பொத்தானைத் தட்டவும், பின்னர் தேடல் பட்டியின் பின்னால் வரும் ட்ரோப் டவுன் ஐகனைத் தெரிவுசெய்யவும். பின்னர் Settings → Account → Delete my account இனை தெரிவுசெய்யவும்.
- உரை பெட்டி ஒன்று திரையில் தோன்றும், சர்வதேச குறியீட்டுடன் உங்கள் சாதனத்தின் முழுமையான தொலைபேசி இலக்கத்தை உள்ளிடவும்.
- இப்போது “Delete my Account” என்பதைத் தட்டவும்.
- வட்ஸ்அப் கணக்கை நீக்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்;
- நீங்கள் வட்ஸ்அப் கணக்கினை நீக்குவதை முடித்ததும், உங்கள் வட்ஸ்அப் கணக்கு வழியாக உங்களைத் தொடர்புகொள்வது சாத்தியமில்லை.உங்கள் நண்பர்களின் தொடர்பு கொள்ள விருப்பமான நபர்களின் பட்டியலில் நீங்கள் ஒரு பகுதியாக இருந்தால், உங்கள் விவரம் மற்றும் பெயர் இனி தோன்றாது.
- சகல உரையாடல்கள், செய்திகள் மற்றும் அரட்டைகளும் உங்கள் சாதனத்திலிருந்து அழிக்கப்படும், அத்தகைய தகவல்களை நீங்கள் அணுக முடியாது.வட்ஸ்அப் ஒத்திசைக்கப்பட்டால் தரவினை மீட்டெடுக்க முடியும்.
- உங்களது பெயரும் இலக்கமும் நீங்கள் ஏற்கனவே இருந்த வட்ஸ்அப் குழுக்களில் இருக்காது.
வட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கான படிமுறைகள்
மூலம்: தகவல் பாதுகாப்பு பற்றிய கையேடு, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு – ஒருங்கிணைப்பு மையம்(Handbook on Information Security, Sri Lanka CERT – CC)