கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 1, 2020
- இலக்கத்தை மாற்றுவதற்கு முன்னர் உங்கள் புதிய “தொலைபேசிஇலக்கம் ” குறுந் தகவல் மற்றும் / அல்லது அழைப்புகளைப் பெறக் கூடியதாகவும் செயற்படு நிலையில் உள்ள தரவு இணைப்பை கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- உங்கள் தொலைபேசியில் உள்ள வட்ஸ்அப்பில் உங்கள்“ பழைய தொலைபேசி இலக்கம் ”தற்போது சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இலக்கத்தை மாற்றுவதற்கு முன்பாக WhatsApp → Settings சென்று உங்கள் சுயவிவரப் புகைப்படத்தைத் தட்டுவதன் மூலம் வட்ஸ்அப்பில் எந்த இலக்கம் சரிபார்க்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காணலாம்.
- நீங்கள் வட்ஸ்அப்பிற்குச் சென்றதும், மேல் வலது மூலையில் காட்டப்படும் மெனு பொத்தானைத் தட்டவும், பின்னர் தேடல் பட்டியின் பின்னால் தோன்றும் ட்ரோப் டவுன் ஐகனைத் தெரிவுசெய்யவும் பின்னர், Settings → Account → Change Number இனை தெரிவுசெய்யவும் .
- உங்கள் தற்போதைய வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்தை முதலாவது உரை பெட்டியில் உள்ளிடவும். உங்கள் புதிய தொலைபேசி இலக்கத்தை இரண்டாவது உரை பெட்டியில் உள்ளிடவும். பின்னர் தொடர்வதற்கு “Done” என்பதைத் தட்டவும்.
- நீங்கள் இலக்கத்தை மாற்றினால், அதே தொலைபேசியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வரை புதிய தொலைபேசி இலக்கத்துடன் உங்கள் உரையாடல் வரலாறு கிடைக்கும்.
i. வட்ஸ்அப் கணக்கில் இலக்கத்தை மாற்றுவதற்கான படிமுறைகள்
மூலம்: தகவல் பாதுகாப்பு பற்றிய கையேடு, இலங்கை கணினி அவசரகால தயார்நிலைக் குழு – ஒருங்கிணைப்பு மையம்(Handbook on Information Security, Sri Lanka CERT – CC)