கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 7, 2023
வைபர் ஒரு பிரபலமான தளமாக மாறியுள்ளது, இதில் நண்பர்கள், குடும்பத்தினர், சகாக்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்புகள் நடைபெறுகின்றன. அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த, செயலியில் பகிரப்பட்ட பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பில் புகாரளிக்க வைபர் பயனர்களை ஊக்குவிக்கிறது.
விளம்பரங்கள், சமூகங்கள், சமூகங்கள் / Bot களுக்குள் உள்ள தனிப்பட்ட இடுகைகள் மற்றும் தனிப்பயன் ஸ்டிக்கர் பொதிகளில், பின்வரும் பொருத்தமற்ற உள்ளடக்கம் புகாரளிக்கக்கூடிய வகையில் தோன்றினால் அதனை Viber ஏற்றுக்கொள்கின்றது.
திரிபுபடுத்தப்பட்ட தகவல் (போலி செய்தி)
சுய தீங்குக்கான ஊக்கம்
குழந்தைகள் மீதான சுரண்டல்
நிர்வாணம்
சட்டத்தை மீறுவதற்கான ஊக்கம்
கட்ஃபிஷிங் (ஆள்மாறாட்டம்)
காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை மீறல்கள்
மேலும், மேலே குறிப்பிட்ட பொருத்தமற்ற உள்ளடக்கத்தை வேறொரு பயனரிடமிருந்து நேரடியாகப் பெற்றால் அதனைத் தடுக்க வைபர் பரிந்துரைக்கிறது.
- உங்கள் தொடர்பு பட்டியலில் சேமிக்கப்படாத ஒருவரிடமிருந்து அரட்டை பெறப்பட்டால், ஆரம்பத்தில் தடுப்பதற்கான விருப்பம் உங்களுக்கு வழங்கப்படும். இது ஒரு ஸ்பேமரிடமிருந்து வந்தது என்று நீங்கள் நம்பினால், கீழே காட்டப்பட்டுள்ளபடி தடுப்பு மற்றும் ஸ்பேமைத் தேர்வுசெய்யலாம்.
- அரட்டை உங்கள் தொடர்பு பட்டியலில் சேமிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து வந்தால்நீங்கள் பின்வருமாறு புகாரளிக்கலாம்;
- உங்கள் தொலைபேசியில் வைபரைத் திறந்து, “அரட்டைகள்” என்பதைத் தட்டவும், நீங்கள் தடுக்க விரும்பும் அரட்டையை (நபரை) தேர்ந்தெடுக்கவும்
- Info ஐ தட்டவும் (Android) அல்லது திரையின் மேற்புறத்தில் உள்ள அரட்டையின் பெயர் (iOS)
- “Chat info“ஐ தட்டவும்
- “Block this contact“ ஐ தட்டவும்
அது தவிர இங்கே படிமுறைகள் உள்ளன;
- உங்கள் தொலைபேசியில் ஒரு சமூகம் தொடர்பில் புகாரளிக்க
- வைபரைத் திறந்து நீங்கள் புகாரளிக்க விரும்பும் சமூகத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- திரையின் மேற்புறத்தில், 3 புள்ளிகளைத் தட்டவும் (Android) (iOS)
- “Report Community”ஐ தட்டவும்
- சமூகத்தின் மீது புகாரளிப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் தொலைபேசியில் ஒரு சமூகம் அல்லது Bot இல் உள்ள ஒரு செய்தி தொடர்பில் புகாரளிக்க
- வைபரைத் திறந்து, பொருத்தமற்ற செய்தி உள்ள சமூகம் அல்லது Bot ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- திரையின் மேற்புறத்தில், 3 புள்ளிகளைத் தட்டவும் (Android) (iOS)
- “Report a message” ஐ தட்டவும்
- நீங்கள் புகாரளிக்க விரும்பும் செய்தி (களை) தட்டவும்
- “அறிக்கை” அல்லது ஆச்சரியக்குறியைத் தட்டவும் திரையின் அடிப்பகுதியில் இது உள்ளது.
- செய்தி (களை) புகாரளிப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்
பிற உள்ளடக்கம் தொடர்பில் புகாரளிக்க
ஒரு ஸ்டிக்கர் பொதியை புகாரளிப்பதற்கான வழிமுறைகளை Create Your Own Sticker Pack இல் காணலாம்.
மேலே குறிப்பிடப்படாத மற்ற எல்லா விஷயங்களையும் புகாரளிக்க நீங்கள் open a support ticket ஐத் திறக்க வேண்டும். உதாரணமாக, ஆள்மாறாட்டம் (போலி) கணக்குகள், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள், தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் இந்த (https://vb.me/ContactUs) மூலம் தேவையான புலங்களை சரியான தகவல்களுடன் நிரப்புவதன் மூலம் தெரிவிக்கலாம். உங்கள் பிரச்சினையை தெளிவாகக் குறிப்பிடுவது மிகவும் முக்கியம். உங்கள் விஷயத்தை வைபரை எளிதில் அடையாளம் காண நீங்கள் தொடர்புடைய ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கலாம். அறிக்கையை அனுப்ப இறுதியாக “Submit Ticket” என்பதைக் கிளிக் செய்க.
நீங்கள் புகாரளித்த தகவல்களை மதிப்பாய்வு செய்தபின், வைபர் உதவி அணிக்கு அவர்களின் Content Guidelines மற்றும் Terms of Use படி தகுந்த நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.
குறிப்பு: நீங்கள் அல்லது வேறு யாராவது உணர்ச்சி / உடல் ரீதியான ஆபத்தில் இருப்பதாகவும் உடனடி உதவி தேவைப்படுவதாகவும் நீங்கள் உணர்ந்தால், உள்ளடக்கத்தின் ஸ்கிரீன் ஷாட் மற்றும் கிடைக்கக்கூடிய தொடர்புத் தகவலுடன் இதனைப் புகாரளிக்க உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை (எ.கா. காவல்துறை) தொடர்பு கொள்ளலாம்.
ஆதாரம் : https://help.viber.com/hc/en-us/articles/8922694984733-How-to-Report-Inappropriate-Content