கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 15, 2021
சந்தேகத்திற்கிடமான பின்வரும் நிலைமைகளை நீங்கள் எதிர்கொண்டால் உங்கள் டிக்டோக் கணக்கு ஊடுருவலுக்கு உள்ளாகியிருக்கலாம்:
- உங்கள் கடவுச்சொல், பாதுகாப்பு மின்னஞ்சல் மற்றும் தொடர்புடைய தொலைபேசி எண்ணின் மாற்றம்.
- உங்கள் பயனர்பெயர் அல்லது செல்லப்பெயரின் மாற்றம்.
- உங்கள் அனுமதியின்றி காணொளிகளை நீக்குதல் / இடுகையிடுதல்
- நீங்கள் எழுதாத செய்திகள் அனுப்பப்படல்
உங்கள் கணக்கு பிரச்சினைக்குள்ளானதாக நீங்கள் சந்தேகித்தால், உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க கீழேயுள்ள படிகளைப் பின்பற்றவும்:
கடவுச்சொல்லை மாற்றல்: டிக்டோக்கில், கடவுச்சொல்லை மாற்றிய பின் ஊடுருவியவர் தானாகவே உங்கள் கணக்கிலிருந்து வெளியேற்றப்படுவார்.
கணக்குத் தகவல் துல்லியமாக இருப்பதை சரிபார்த்தல்: டிக்டோக் அமைப்புகளின் கீழ் “எனது கணக்கை நிர்வகி” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தொடர்புடைய கணக்குத் தகவல், துல்லியமாக இருக்கிறதா என்று சோதிக்கவும்.
கடவுச்சொல்லை நீங்களே மாற்ற முடியாவிட்டால், தயவுசெய்து அவர்களின் செயலி பின்னூட்டத்தின் மூலம் டிக்டோக்கைத் தொடர்பு கொள்ளவும் (செயலி அமைப்புகள் – சிக்கலைப் புகாரளிக்கவும்).
கடவுச்சொல்லை மாற்றவும் கணக்குத் தகவலை சரிபார்க்கவும் கீழே காட்டப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.
- ‘தனியுரிமை மற்றும் அமைப்புகள்’ என்பதைத் தட்டவும்
- ‘எனது கணக்கை நிர்வகி’ என்பதற்குச் செல்லவும்
- கடவுச்சொல் மாற்றவும் மற்றும் பிற கணக்குத் தகவலை சரிபார்க்கவும் தேர்ந்தெடுக்கவும்
பின்வரும் படிகள் உங்கள் டிக்டோக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்
- ‘தனியுரிமை & அமைப்புகள்’ என்பதைத் தட்டவும்
- ‘தனியுரிமை மற்றும் பாதுகாப்பு’ என்பதற்குச் செல்லவும்
- கொடுக்கப்பட்ட தெரிவுகளை தனித்தனியாக அமைக்கவும்
ஆதாரம்: http://support.tiktok.com/knowledge-base/hacked-account