கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 10, 2022

இலவச அழைப்புகள், தகவல் மெஸேஜ்) பரிமாற்றம் மற்றும் வேகமாக கோப்புகளை பகிர்வது போன்ற தெரிவுகளைக்கொண்ட டெலிகிராம் பிரபலமான செய்தியிடல் பயன்பாடாக அறியப்படுகிறது. இப் பயன்பாட்டை (ஆப்) ஒரே நேரத்தில் பல கருவிகளில் பயன்படுத்த முடியும். மற்ற பெரும்பாலான செய்தியிடல் பயன்பாடுகளைப் போலவே, இத் தளத்திலும் பொருத்தமற்ற விடயங்கள் நடக்கலாம். எனவே, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இதுபோன்ற சிக்கல்களை எவ்வாறு புகாரளிப்பது என்பதை டெலிகிராம் வெளிப்படுத்தியுள்ளது.

டெலிகிராமில் சட்டவிரோத உள்ளடக்கத்தைப் புகாரளிப்பது எப்படி?
டெலிகிராமில் பொதுவில் கிடைக்கும் ஸ்டிக்கர் செட், சேனல்கள் மற்றும் போட்களை (bots) சட்டத்திற்குப் புறம்பான உள்ளடக்கங்களை கொண்டதாக நீங்கள் கண்டால், பயன்பாட்டில் இருக்கும் ‘புகாரிடல்’ பொத்தான்களைப் பயன்படுத்தலாம்.

அல்லது abuse@telegram.org மின்னஞ்சல் மூலம் டெலிகிராம் குழுவிற்கு அதைத் தெரிவிக்கவும்.

டெலிகிராமில் ஆள்மாறாட்டத்தைப் புகாரளிப்பது எப்படி?
யாராவது உங்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தால் (பாசாங்கு செய்து) @NoToScam எனும்  பயன்பாட்டின் மூலம் அதைப் புகாரளிக்கலாம்.

மேலும் உங்கள் சிக்கலை குறிப்பிட்டு abuse@telegram.org மின்னஞ்சல் ஊடாக புகாரளிக்கலாம். (பயனாளியின் பெயர் (User name ) உட்பட)

டெலிகிராமில் மோசடி செய்பவர்களை புகாரளிப்பது எப்படி?
இத் தளத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்ற, பயனாளிகள் அவர்களின் தகவல்கள் மற்றும் /அல்லது அவர்களை ஏமாற்றி பணத்தை மோசடி (ஸ்கேம்) செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் புகாரளிக்கப்பட வேண்டும். எனவே, இப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதனூடாக மோசடி செய்பவர்கள் பற்றி அறிந்தால் புகாரளிக்க @NoToScam ஐத் தொடர்பு கொள்ளவும்.

டெலிகிராம் கணக்கு இல்லாத ஒருவர் கூட, abuse@telegram.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (பயனாளியின் பெயர் மற்றும் தொடர்புடைய திரைப் பிடிப்புகளுடன் / ஸ்கிரீன்ஷாட்களுடன்) மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் இதுபோன்ற மோசடி செய்பவர்கள் குறித்து புகாரளிக்கலாம்.

டெலிகிராமில் வேறு ஏதேனும் சிக்கலைப் புகாரளிப்பது எப்படி?
மேலே குறிப்பிடப்பட்ட சிக்கல்களைத் தவிர, டெலிகிராமில் உள்ள பயனாளிகள் அல்லது சேனல்கள் உட்பட வேறு எந்த உள்ளடக்கத்தையும் https://telegram.org/support என்ற இணையத்தள வலை வாசல் (போர்டல்) ஊடாக சரியான தகவலுடன் தேவையான புலங்களை நிரப்புவதன் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் பிரச்சினையை இங்கே தெளிவாக விவரிப்பது மிகவும் முக்கியம். இறுதியாக, புகார்களை அனுப்ப “சமர்ப்பி” என்பதை சொடுக்கவும் / கிளிக் செய்யவும்.

 

புகார் அளிக்கப்பட்டதும், டெலிகிராம் அவர்களின் தனியுரிமைக் கொள்கையின்படி (privacy policy) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மூலம் :
https://telegram.org/faq