கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 21, 2023

ஸ்னாப்சாட்

ஸ்னாப்சாட்டானது உடனடி செய்தி பரிமாற்ற செயலியாக அறியப்படுவதுடன் அதன் சேவைகள் ஸ்னாப் கூட்டுத்தாபனத்தினால் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. உங்களது நண்பர்களுடன் தொடர்பிலிருப்பதற்காக இச்செயலியை எந்தவொரு கருவியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்பதுடன் இது அரட்டை, சொடுக்கு மற்றும் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே உங்களது நண்பர்களுடன் காணொளி அழைப்பு வாயிலாக இணைந்துக்கொள்வதற்கான அம்சங்களையும் வழங்குகின்றது. பகிரும் விடயங்களை தரவடிப்பு, விசேட திருத்தம், சொல்வடிப்பு மற்றும் வரைதல் என்பவற்றினால் திருத்திக்கொள்ளவும் முடியும்.

பல செயலிகளைப் போன்றே, இச்செயலியிலும் துஷ்பிரயோகம், வம்பிழுத்தல், அச்சுறுத்தல் அல்லது ஏனைய பாதுகாப்பு விடயங்களுக்கு எதிராக முறையிடும் வாய்ப்புக்கள் இதனில் காணப்படுகின்றன.

ஸ்னாப்சாட்டில் தவறான பயன்பாடு குறித்து முறையிடுவது எவ்வாறு?

ஒரு ஸ்னாப்சாட் கணக்கு குறித்து முறையிடுதல்

எவரேனும் ஒருவரது ஸ்னாப்சாட் கணக்கு குறித்து முறையிட,

  1. ஸ்னாப்சாட் செயலியின் ‘எனது நண்பர்கள்’ பகுதிக்கு சென்று, ஸ்னாப்சாட் பயனரின் பெயரை சொடுக்கவும் அல்லது ‘Manage Friendship’ ஐ சொடுக்கவும்
  2. வலது பக்க மேல் மூலையில் காணப்படும் ‘⋮’ குறியீட்டை சொடுக்கவும்
  3. Report’ ஐ அழுத்தவும்
  4. முறையிடுவதற்கான காரணத்தை தெரிவுசெய்யவும்
  5. முறைப்பாட்டை சமர்ப்பித்து நபரை தடைசெய்யவும்

ஸ்னாப் அல்லது ஸ்னாப்சாட்டின் பதிவு குறித்து முறையிடல்

ஸ்னாப் அல்லது ஸ்னாப்சாட் பதிவு குறித்து முறையிடுவதற்கு,

அதனை அழுத்திப்பிடித்து ‘Report Snap’ ஐ அழுத்தவும்

 

இம்முறையில் அழுத்திப்பிடிப்பதனூடாக ஸ்னாப்சாட்டின் உள்ளடக்கங்களின் பின்வரும் பல்வேறு வகைகள் குறித்து நீங்கள் முறையிடலாம்

  • நேரடி ஸ்னாப்கள்
  • எனது பதிவுகள்
  • பகிரப்பட்ட ஸ்னாப்கள்
  • பொது பயனர் பதிவுகள்
  • ஸ்னாப் வரைபடத்திலான ஸ்னாப்கள்
  • குவிவிடத்திலான ஸ்னாப்கள்

பொது பயனர் கணக்கு குறித்து முறையிடல்

  1. நீங்கள் முறையிட விரும்பும் பொதுப் பயனர் கணக்கிற்குச் செல்லவும்
  2. மேலுள்ள  …  ஐ அழுத்தவும்
  3. Report’ ஐ அழுத்தவும்
  4. நீங்கள் முறையிடும் பொதுப் பயனர் கணக்கிற்கான காரணத்தை தெரிவுசெய்து, பின்னர் ‘Submitஐ அழுத்தவும்.

 

மறைக்கப்பட்ட பதிவுகள் குறித்து முறையிடல்

ஸ்னாப்சாட் பதிவுகளிலான முறைப்;பாட்டுக்குரிய விடயங்களுடன் செயற்படுவதற்கு, பெட்டியில் அழுத்திப் பிடிப்பதுடன் ‘Report Tile’ ஐ அழுத்தவும்

அத்தகைய உள்ளடக்கங்கள் உங்களிற்கு உவப்பற்றதெனில், அவ்வாறான பதிவுகளிலான சில பதிவுகளை காண ‘Hide from Discover’ ஐ சொடுக்கவும்

 

 

வில்லைகள் குறித்து முறையிடல்

ஸ்னாப்சாட்டர்களினால் உருவாக்கப்பட்ட வில்லைகள் குறித்து நீங்கள் முறையிடலாம்

  1. வில்லை கொணர்விகளிலான வில்லை இழுத்து, அவ்வில்லைகளின் மேல் காணப்படும் ⓘ  குறியை அழுத்தவும்
  2. பின்னர் ‘Report’ ஐ அழுத்தவும்