கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 30, 2024
உங்கள் செயலில் உள்ள நிலையைக் கட்டுப்படுத்தல்:
நீங்கள் பின்வருமாறு ‘செயலில்’ இருப்பதைக் காண உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம்;
அன்ட்ரோயிட் :
- Chats இல் மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- செயலில் உள்ள நிலையை (Active Status) இனத் தட்டவும்.
- உங்கள் Active Status (செயலில் உள்ள நிலையை) இயக்க (on) அல்லது முடக்க(off) செய்ய திரையின் மேற்புறத்தில் உள்ள மாற்றத்தைப் பயன்படுத்தவும்.
- உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்த, on அல்லது off இனைத் தட்டவும்.
ஐபோன் அல்லது ஐபாட்:
- Chats, இல் மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- Active Status இனத் தட்டவும்.
- உங்கள் Active Status இயக்க (on) அல்லது முடக்க(off) செய்ய திரையின் மேற்புறத்தில் உள்ள மாற்றத்தைப் பயன்படுத்தவும்.
- உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்த, on அல்லது off இனைத் தட்டவும்.
நீங்கள் யாருடன் அளவளாவுகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்தல்:
செய்தியிடல் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் உங்கள் இலக்கத்திற்கு செய்திகளை அனுப்பக்கூடிய நபர்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்:
- Chats, லிருந்து, மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவர புகைப்படத்தைத் தட்டவும்.
- செய்தியிடல் அமைப்புகளைத் தட்டவும்.
- இயக்க அல்லது முடக்க உங்கள் தொலைபேசி எண்ணைக் கொண்ட நபர்களுக்கு அடுத்து தட்டவும்.
உங்கள் கதை(Story)யை யார் காணலாம் என்பதைத் தனிப்பயனாக்குங்கள்:
பின்வரும் படிமுறைகளின் மூலமாக உங்கள் கதை(Story)யை யார் பார்க்க முடியும் மற்றும் பார்க்க முடியாது என்பதை நீங்கள் தெரிவு செய்யலாம்.
- மெசஞ்சரில், மேல் இடது மூலையில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- கீழே உருட்டி கதையைத்(Story)தட்டவும்.
- பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் இணைப்புகள், நண்பர்கள் அல்லது வழமை ஆகியவற்றில் ஒன்றை தெரிவு செய்க.
- சேமி(Save) என்பதைத் தட்டவும்.
உங்களை தொடர்பு கொள்பவர்களில் விரும்பாதவர்களைத் தடுக்க, மறைக்க அல்லது முடக்குவதற்கு :
கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளின்படி அறிவிப்புகளைத் தடுப்பது, புறக்கணிப்பது / மறைப்பது அல்லது முடக்குவதன் மூலம் விரும்பாத நபர்களுடன் இணைவதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெறும் செய்திகளைத் தடுக்க:
ஐபோன் அல்லது ஐபாட்:
- Chats, இல், நீங்கள் தடுக்க விரும்பும் நபருடனான உரையாடலைத் திறக்கவும்.
- உரையாடலின் மேலே அவர்களின் பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டி, Block இனைத் தட்டவும்
- மெசெஞ்சரில் Block on Messenger இனை தெரிவு செய்து Block ஐ தட்டவும் .
அன்ட்ரோயிட்:
- Chats, இல், நீங்கள் தடுக்க விரும்பும் நபருடனான உரையாடலைத் திறக்கவும்.
- உரையாடலின் மேலே அவர்களின் பெயரைத் தட்டவும், பின்னர் Block இனைத் தட்டவும்.
- மெசெஞ்சரில் Block on Messenger இனை தெரிவு செய்து Block ஐ தட்டவும் .
உரையாடலைப் புறக்கணிக்க:
ஐபோன் அல்லது ஐபாட்:
- Chats, இல், நீங்கள் புறக்கணிக்க விரும்பும் உரையாடலைத் திறக்கவும்.
- உரையாடலின் மேலே உள்ள பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டவும், செய்திகளைப் புறக்கணி(Ignore Messages) இனைத் தட்டவும், பின்னர் மீண்டும் செய்திகளைப் புறக்கணி(Ignore Messages) இனைத் தட்டவும்.
அன்ட்ரோயிட்:
- Chats, இல், நீங்கள் புறக்கணிக்க விரும்பும் உரையாடலைத் திறக்கவும்.
- உரையாடலின் மேலே உள்ள பெயரைத் தட்டவும்.
- கீழே உருட்டவும், செய்திகளைப் புறக்கணி(Ignore Messages) இனைத் தட்டவும், பின்னர் மீண்டும் புறக்கணி(Ignore) இனைத் தட்டவும்.
அறிவிப்புகளை நிறுத்துவதற்கு
ஐபோன் அல்லது ஐபாட்:
சகல உரையாடல்களுக்கும் மெசஞ்சர் அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :
- Chats, இல், மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- Notifications & Sounds இனைத் தட்டவும்.
- Do Not Disturb இற்கு அடுத்து தட்டவும்.
- அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்க.
ஒரு உரையாடலுக்கான அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :
- Chats, இல் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
- இனைத் தட்டி அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்க.
அன்ட்ரோயிட்:
சகல உரையாடல்களுக்கும் மெசஞ்சர் அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :
- Chats, இல், மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.
- Notifications & Sounds இனைத் தட்டவும்.
- அவற்றை நிறுத்துவதற்கு On ற்கு அடுத்து தட்டவும்
- அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்து Ok இனைத் தட்டவும்
ஒரு உரையாடலுக்கான அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :
- Chats இல் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
- இனைத் தட்டி அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்க.
- OK இனைத் தட்டவும்.
விண்டோஸ்
மெசஞ்சர் அறிவிப்புகளை இயக்க அல்லது முடக்க:
- இனைக் கிளிக் செய்க.
- Notifications ஐக் கிளிக் செய்க.
- Do not disturb க்குக் கீழே கிளிக் செய்க.
ஒரு உரையாடலுக்கான அறிவிப்புகளை நிறுத்துவதற்கு :
- உரையாடலைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் இனைக் கிளிக் செய்க .
- Mute Notifications இனைத் தெரிவு செய்க.
- அறிவிப்புகளை எவ்வளவு காலத்திற்கு நிறுத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்து Confirm இனைக் கிளிக் செய்க .
குறிப்புகள் :
https://www.facebook.com/help/messenger-app/1064701417063145/?helpref=hc_fnav&bc[0]=691363354276356