கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 4, 2020
உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டால்
உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாவிட்டால் அல்லது உங்கள் கணக்கில் அறிமுகமில்லாத மாற்றங்களை அவதானித்தால் அல்லது உங்கள் கணக்கினை வேறு யாராவது அணுகியிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், தயவுசெய்து உடனடியாக உங்கள் சுயவிவரத்திற்கான URL உடன் ஹேக் செய்யப்பட்ட கணக்கு படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் லிங்க்ட்இன்னுக்கு தெரிவிக்கவும். உங்கள் கணக்கை மீட்டெடுக்க லிங்க்ட்இன் உதவும்.
உங்கள் கணக்கில் உள்நுழைய முடிந்தாலும், வேறொருவருக்கு உங்கள் லிங்ட்இன் கணக்கில் அணுகல் இருப்பதாக நீங்கள் நம்பினால், தயவுசெய்து மேற்கூறப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து உடனடியாக உங்கள் கணக்கைப் பாதுகாக்க கீழ்வரும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்:
- உங்கள் கடவுச்சொல்லை வேறு எங்கும் பயன்படுத்தாத வலுவான கடவுச்சொல்லாக மாற்றவும்.
- உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் யாரிடமாவது இருந்தாலும் உங்கள் கணக்கில் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க, இரண்டு-படி சரிபார்ப்பை (two-step verification) செயற்படுத்தவும் .
- உங்கள் லிங்ட்இன் கணக்கில் உள்நுழைந்த எல்லா இடங்களையும் காண உங்கள் செயற்பாட்டில் உள்ள அமர்வுகளை உடனடியாக மதிப்பாய்வு செய்து வெளியேறவும். ஒரு குறிப்பிட்ட உள்நுழைவு அல்லது சாதனத்தை நீங்கள் அடையாளம் காணவில்லை எனில், உங்கள் கடவுச்சொல்லை மாற்றி, அந்த அமர்விலிருந்து வெளியேறவும்..
- உங்கள் லிங்க்ட்இன் கணக்கில் உள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரி (கள்) மற்றும் தொலைபேசி எண்களையும் அவை புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்வதற்கும் உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்க உங்களுக்கு லிங்க்ட்இன் இணைப்பினை அனுப்ப தேவைப்படும்போது அவை பாதுகாப்பாக இருக்கவும் மதிப்பாய்வு செய்யுங்கள்
- உங்கள் கணக்கில் இணைக்கப்பட்டமின்னஞ்சல் கணக்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவற்றை அவதானிக்கவும். பாதுகாப்பான பக்கத்தில் இருப்பதற்கு அந்தக் கணக்குகளில் உள்ள கடவுச்சொற்களையும் நீங்கள் எப்போதும் மாற்றியமைக்கலாம்.
- உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் / அல்லது நம்பும் நபர்களுடன் மட்டுமே நீங்கள் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் அண்மைய இணைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்.
- உங்கள் உண்மையான பதிவுகள் மட்டுமே உங்கள் கணக்குடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்த உதவுவதற்கு கையகப்படுத்தும் காலபகுதியில் செய்யப்பட்ட இடுகைகள் மற்றும் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும்.
- அண்மைய பின்தொடர்வுகள் மற்றும் ஏனைய சமூக செயற்பாடுகளை (விருப்பங்கள்) அவை அனைத்தும் உங்களுடையவை என்பதை உறுதிப்படுத்த மதிப்பாய்வு செய்யவும்.
- உங்கள் தகவல்களை சரிபார்த்து, நீங்கள் மேற்கொள்ளாத எந்த செயற்பாட்டினையும் நீக்கவும்.
உங்கள் இணைப்பின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால்
உங்களது இணைப்புகளில் ஒன்றினது லிங்க்ட்இன் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க லிங்க்ட்இன் பரிந்துரைக்கிறது:
- பிரச்சினைக்குரிய உறுப்பினரின் சுயவிவரத்திற்கு செல்லவும்.
- உறுப்பினரின் சுயவிவரப் படத்திற்குக் கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்து, பட்டியலிலிருந்து Report / Block என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- I think this account may have been hacked என்பதை தெரிவு செய்து பின்னர் Submit ஐ கிளிக் செய்க.
உரிய உறுப்பினர் தங்கள் கணக்கைப் பாதுகாக்க லிங்க்ட்இன் உதவும். இதற்கிடையில், நீங்கள் கீழ்வருவனவற்றை செய்யலாம்:
- உங்களது தொடர்பு தகவல், உங்கள் தொடர்புகளுக்கு தோன்றும் விதத்தை மாற்றுவதற்கு தெரிவினை மேற்கோள்க .
- பாதிக்கப்பட்ட உறுப்பினரைத் தடுக்கவும். உறுப்பினர் தங்கள் கணக்கின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் அவரை தடைநீக்கம் செய்யலாம்.
- உங்கள் தொடர்புகளிலிருந்து ஹேக் செய்யப்பட்ட உறுப்பினரை அகற்ற தேர்வுசெய்க. இதன் கருத்து பாதிக்கப்பட்ட உறுப்பினர் இனி உங்கள் இணைப்பிலே இல்லை என்பதுடன் எதிர்காலத்தில் அவரை மீண்டும் இணைக்க விரும்பினால், நீங்கள் அவர்களை மீள அழைக்க வேண்டும்.