கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 10, 2021

தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற டிக்டொக் தளத்திலுள்ள போலியான உருவகப்படுத்தக் கூடிய கணக்குகளை கண்டறிவது இலகுவானதாகும். மேற்குறித்த தேடல் பெறுபேறுகளுக்கப்பால் டிக்டொக் நிறுவனத்தினால் குறித்த கணக்கு உண்மையான கணக்கென குறிப்பிடப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளக்குறியின் (பயனர் பெயரிற்கருகில் காட்சிப்படுத்தப்படும் நீல நிற சரி எனும் அடையாளம்) அர்த்தம் அல்லது பெறுமதியை அறிந்த ஒருவரினால் டொம் ஃக்ரூசி அவர்களின் உண்மையான கணக்கை கண்டறிய முடியும். உருவகப்படுத்தப்பட்ட கணக்குகளிலினூடாக பயனர்கள் தவறான முறையில் வழிநடாத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கப்படும் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளக்குறியானது, பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள், பிரபலங்கள் போன்றோருக்கு மாத்திரம் பொருத்தமானதாகும்.
எவ்வாறெனினும், டிக்டொக்கானது ஏனைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைப் போன்று உருவகப்படுத்தி மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை அனுமதிப்பதில்லை. மறுபுறத்தில் அவர்களது நிறுவனக் கொள்கைகளை மீறுகின்ற நடவடிக்கைகளை, கீழ்குறிப்பிட்டவாறு செயலியில் முறைப்பாடு செய்யுமாறு டிக்டொக் கேட்டுக்கொள்கின்றது.
- நீங்கள் முறைப்பாடு செய்ய வேண்டிய போலியான உருவகப்படுத்தப்பட்ட கணக்கின் தோற்றுருவத்திற்கு (Profile) செல்லவும்
- டெப் ஆன் ( Tap on
) (திரையில் மேல் வலப்புறத்தில் காணப்படும்)
- “Report” (முறைப்பாடு) எனும் கொடியை டெப் ஆன் செய்க.
- “Report” (முறைப்பாடு) கணக்கைத் தெரிவு செய்க.
- பின்னர் “Pretending to be someone” என்பதனை தெரிவுச் செய்க.
- யாரை போன்று பாசாங்கு செய்கின்றது (உங்களை போன்றா அல்லது பிரபலமொன்றை போன்றா) என்பதனை தெரிவு செய்க.
- இறுதியாக முறைப்பாட்டை ‘சமர்பித்தல்’





டிக்டொக் ஆனது உங்களின் முறைப்பாட்டை கவனத்திற்கொள்வதோடு அவர்களது நிறுவனக் கொள்கைகளை மீறுகின்ற செயற்பாடுகளுக்கெதிராக தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மூலம்: https://support.tiktok.com/en/safety-hc/report-a-problem/report-a-user