கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 24, 2021
உங்கள் கணினி பணையத் தீநிரல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?
பணையத் தீநிரல் தாக்குதல்களை தடுப்பது எவ்வாறு என்பது குறித்த சில பயனுள்ள உதவிக்குறிப்புகள்
பணையத் தீநிரல் என்பது ஒரு வகை தீம்பொருள் (தீங்கிழைக்கும் மென்பொருள்) ஆகும், இது குற்றவாளிகளால் பணத்தை பறிக்க பயன்படுத்தப்படுகிறது. இது குறியாக்கத்தைப் பயன்படுத்தி அல்லது பயனர்களை அவர்களின் சாதனத்தை அணுகுவதில் இருந்து தடுப்பதன் மூலம் பிணையமாக தரவை வைத்திருக்கிறது. உங்கள் கணினியையும் உங்கள் தரவையும் பணையத் தீநிரல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை நாங்கள் ஆராய்வோம்.
பணையத் தீநிரல் தடுப்பு
இந்த பிரிவில், அறிமுகமில்லாத யூ.எஸ்.பி-களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சரிபார்க்கப்படாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாமல் விடுதல் போன்றவை வழியாக பணையத் தீநிரல் தாக்குதல்களை எவ்வாறு தடுப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பணையத் தீநிரல் தடுப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள வாசிக்கவும்.
- சரிபார்க்கப்படாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்
ஸ்பேம் மின்னஞ்சல்கள் அல்லது அறிமுகமில்லாத வலைத்தளங்களின் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கிளிக் செய்யும்போது தொடங்கும் பதிவிறக்கங்கள் உங்கள் கணினியானது பாதிப்படையக்கூடிய ஒரு வழியாகும். சில உதவிக்குறிப்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள்: போலி இணைப்புகளை எவ்வாறு அடையாளம் காண்பது.
- சந்தேகத்திற்கிடமான தோற்றமுடைய மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம்
அவற்றை பார்ப்பதற்கு மேக்ரோக்களைக் செயற்படுத்தும்படி கேட்கும் இணைப்புகளை ஒருபோதும் திறக்க வேண்டாம். இணைப்பு ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், அதைத் திறப்பது தீங்கிழைக்கும் மேக்ரோவை இயக்கும், இது தீம்பொருளுக்கு கணனியின் கட்டுப்பாட்டை வழங்கும்.
- நீங்கள் நம்பும் தளங்களிலிருந்து மாத்திரமே பதிவிறக்கம் செய்யவும்
அறியப்படாத வலைத்தளங்களிலிருந்து மென்பொருள் அல்லது மீடியா கோப்புகளை பதிவிறக்க வேண்டாம். நீங்கள் ஏதாவது பதிவிறக்க விரும்பினால் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான தளங்களுக்குச் செல்லவும். பெரும்பாலான புகழ்பெற்ற வலைத்தளங்களில் நீங்கள் அடையாளம் காணக்கூடிய நம்பிக்கையின் குறிப்பான்கள் இருக்கும். தேடல் பட்டியில் தளம் ‘http’ என்பதற்கு பதிலாக ‘https’ ஐப் பயன்படுத்துகிறதா என்று பாருங்கள். முகவரி பட்டியில் கவசம் அல்லது பூட்டுன் அடையாளம் காண்பிக்கப்படுவதும் தளம் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துகிறது.
- தனிப்பட்ட தரவை வழங்குவதைத் தவிர்க்கவும்
தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் நம்பத்தகாத மூலத்திலிருந்து நீங்கள் அழைப்பு, உரையாடல்,மின்னஞ்சலை போன்ற எதனையாவது பெற்றால், அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டாம். பணையத் தீநிரல் தாக்குதலைத் திட்டமிடும் சைபர் கிரைமினல்கள் தாக்குதலுக்கு முன்கூட்டியே தனிப்பட்ட தரவைப் பெற முயற்சிக்கலாம்.குறிப்பாக உங்களைகுறிவைக்க அவர்கள் ஃபிஷிங் மின்னஞ்சல்களில் இந்த தகவலைப் பயன்படுத்தலாம்.தகவலைக் கேட்டு நிறுவனத்தால் நீங்கள் தொடர்பு கொள்ளப்படும்போது , கோரிக்கையை புறக்கணித்து, அது உண்மையானது என்பதை சரிபார்க்க நிறுவனத்தை சுயாதீனமாக தொடர்பு கொள்ளுங்கள்.
- மின்னஞ்சல் அஞ்சல் சேவையகத்தின் உள்ளடக்க ஸ்கானிங் மற்றும் வடிகட்டலைப் பயன்படுத்தவும்
உங்கள் அஞ்சல் சேவையகங்களில் உள்ளடக்க ஸ்கானிங் மற்றும் வடிகட்டலைப் பயன்படுத்துவது பணையத் தீநிரல் ஐத் தடுக்க ஒரு சிறந்த வழிமுறையாகும். இந்த மென்பொருள் தீம்பொருள் பாதிக்கப்பட்ட இணைப்புகள் அல்லது இணைப்புகளைக் கொண்ட ஸ்பேம் மின்னஞ்சலை உங்கள் மின்னஞ்சலின் இன்பொக்ஸை அடைவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றது.
- அறிமுகமில்லாத யூ.எஸ்.பி-களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்அவை எங்கிருந்து வந்தன என்பது உங்களுக்குத் தெரியாத போது அத்தகைய யூ.எஸ்.பி அல்லது பிற அகற்றுதல் சேமிப்பக சாதனங்களை உங்கள் கணினியில் செருக வேண்டாம். சைபர் கிரைமினல்கள் சாதனத்தை பணையத் தீநிரல் மூலமாக தொற்றினை ஏற்படுத்தி அதைப் பயன்படுத்த உங்களை கவர்ந்திழுக்க ஒரு பொது இடத்தில் வைத்திருக்கலாம்.
- உங்கள் மென்பொருள் மற்றும் இயக்க முறைமையைப் புதுப்பித்து வைத்திருங்கள்
உங்கள் மென்பொருள் மற்றும் இயக்க முறைமையை புதுப்பித்து வைத்திருப்பது தீம்பொருளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். ஏனெனில் நீங்கள் புதுப்பிப்பை இயக்கும்போது, அண்மைய பாதுகாப்பு இணைப்புகளிலிருந்து நீங்கள் பயனடைவதை உறுதிசெய்கிறீர்கள், இது உங்கள் மென்பொருளில் உள்ள குறைபாடுகளை இணைய குற்றவாளிகள் பயன்படுத்திக்கொள்வதை கடினமாக்குகிறது.
- பொது வைஃபையை பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும் (பொது வைஃபை பயன்படுத்தும் போது மெய்நிகர் தனியார் பிணையத்தினை(விபிஎன்) பயன்படுத்தவும்)
நீங்கள் பொது வைஃபை பயன்படுத்தும்போது, உங்கள் கணினி அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். பாதுகாப்பாக இருப்பதற்கு ரகசிய பரிவர்த்தனைகளுக்கு பொது வைஃபையை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அல்லது பாதுகாப்பான விபிஎன் ஐப் பயன்படுத்தவும்.
- எப்போதும் பாதுகாப்பு மென்பொருள் புதுப்பிக்கப்பட்டிருக்கட்டும்
இணைய பாதுகாப்பு மென்பொருள் (வைரஸ் தடுப்பு) வழங்க வேண்டிய மிக உயர்ந்த பாதுகாப்பிலிருந்து பயனைப் பெற்றுக்கொள்ள அதை புதுப்பித்து வைத்திருப்பதை உறுதிசெய்க. ஒவ்வொரு புதுப்பிப்பிலும் சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகள் காணப்படுவதுடன் பணையத் தீநிரல்தடுப்பை அதிகரிக்கும்.
- உங்கள் தரவை காப்புப்பிரதி எடுக்கவும்
எல்லாவற்றையும் வெளிப்புற வன்வட்டில் பிரதிசெய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஆனால் பயன்பாட்டில் இல்லாதபோது அதை உங்கள் கணினியுடன் இணைக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பணையத் தீநிரல் தாக்குதலுக்கு பலியாகும் சந்தர்ப்பத்தில் வன்வட்டு செருகப்பட்டால், இந்தத் தரவும் குறியாக்கம் செய்யப்படும்.