கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 14, 2021
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும்.
ஒரு நாள் ஹிமாலி வட்ஸ்அப் ஊடாக ஹித்தவத்தியுடன் உரையாடினாள்:
ஹிமாலி: மிஸ், நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருவரை விரும்பினேன். அண்மையில் அவன் பெண்கள் மற்றும் பாலியல் குறித்து மக்கள் உரையாடும் மிகவும் மோசமான வட்ஸ்அப் குழுவில் எனது புகைப்படங்களை தொகுத்து பகிர்ந்துள்ளார் என்பதை கேள்வியுற்றேன்.
ஹித்தவத்தி: சரி, உங்களை பற்றி அவன் குழுவில் என்ன குறிப்பிட்டிருந்தார்
ஹிமாலி: நான் சந்தோசத்திற்காக அலைகிறேன் இதற்கு யாராவது ஆர்வமாக இருந்தால் எனக்கு உதவுங்கள், என்று குறிப்பிட்டுள்ளான். அக்குழுவில் 100இற்கும் மேற்பட்ட உறுப்பினர் உள்ளனர். இதனை அவர்கள் எங்கெல்லாம் பகிர்வார்கள் என்பது எனக்கு தெரியாது.
ஹித்தவத்தி: உங்கள் பிரச்சினை தெளிவானது. உங்களுடைய படங்களைப் பரிமாறிய நபருடன் அத்தகைய குழுவை பற்றி முறைப்பாடு செய்வதற்கு நீங்கள் எமக்கு அவனது வட்ஸ்அப் இலக்கம் மற்றும் நீங்கள் குறிப்பிட்ட பலாத்காரத்தை உறுதிப்படுத்தக்கூடிய திரைவிம்பங்களை குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தல் வேண்டும்.
ஹித்தவத்தியின் வேண்டுகோளிற்கமைய, ஹிமாலி முறைப்பாடு செய்வதற்கு தேவையான சகல தகவல்களையும் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்தாள். அவள் கவலையாக இருந்ததுடன் தான் முன்னர் விரும்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு விரும்பவில்லை.
ஹித்தவத்தியானது அவளை அமைதி பேணுமாறும், அதன்மீது எந்தவொரு தாக்கத்தையும் அவனிடம் வெளிக்காட்டாமல் இருப்பதற்குமாரும் கேட்டுக் கொண்டது. அதன் பிரகாரம் நடப்பதாகவும் ஹமாலி உறுதியளித்தாள். மேலும், இவ் விவகாரம் வட்ஸ்அப் மறுமொழியளிக்கும் வரை அவளை உறுதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
சில வாரங்கள் கடந்து, அவளது முறைப்பாட்டிற்கேற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அபிலிருந்து கிடைத்த சாதகமான செய்தியுடன் அவளை தொடர்புக் கொண்டது.ஹிமாலி நிம்மதியை உணர்ந்ததுடன் ஹித்தவத்திக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.
முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:
- சமூக ஊடகங்களில் கலந்துரையாடுவதற்கான விடயமொன்றாக நீங்கள் மாறும் போது, சுயநினைவுடனும் உறுதியாகவும் இருங்கள். அவை உங்களை எவ்வாறு பாதிக்கும் அல்லது அவர்களது கருத்துக்களினால் எழும் தாக்கங்கள் குறித்து அவர்கள் சிந்திப்பது கிடையாது.
- நீஙகள் வட்ஸ்அப்பில் துஸ்பிரயோகம் செய்யப்படுவீர்களாயின் குறிப்பிடப்பட்டிருக்கும் படிமுறைகளின் மூலம் முறைபாடு செய்யமுடியும் https://www.hithawathi.lk/help-centre/social-media/whatsapp/reporting-on-whatsapp/. தேவை ஏற்படின் ஹித்தவத்தியைத் தொடர்புக் கொள்க.
- நீங்கள் ஆதரவில்லா பெண்ணாக உணரும் பட்சத்தில் இலவச சட்டஆலோசனை மற்றும் அறிவுரைக்கு Women In Need (WIN) ஐத் தொடர்புக் கொள்ளவும்.
- இணையவெளி குற்றங்களுடன் தொடர்புடைய உரிய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், ஸ்கிரீன் ஷாட்கள் போன்றவை) தெளிவாக குறிப்பிடப்படும் முறைபாடுகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கையளிக்கப்படலாம் அல்லது ‘பணிப்பாளர், குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கொழும்பு 01’ என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்படலாம் இதற்கு மேலதிகமாக, நீங்கள் குறித்த விடயம் தொடர்பில் dir.cid@police.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் முடியும்.