கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 10, 2022
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
38 வயதுடையவரும் திருமணமாகாதவருமான மருத்துவர் சாந்தா ரத்நாயக்க இலங்கை அரசாங்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். அவருக்காக அவரது பெற்றோர் முன்மொழிவு ஒன்றின் மூலம் ஒரு துணைவரைக் கண்டுபிடித்தனர். அதன் இறுதியில் இரு தரப்பினரும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஏற்கனவே திருமணத்திற்கான திகதிகளை நிர்ணயித்து வைத்த போதும் கொவிட் -19 நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. கொவிட் -19 நோய்த்தொற்றுப் பரவல் ஏற்பட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை என்றாலும், அவர்கள் இணையவெளியில் அரட்டை அடிப்பதன் மூலம் ஒருவருடனொருவர் பேசிக்கொண்டார்கள். இணையவெளி மூலம் அவர்கள் படங்களைப் பரிமாற்றிக் கொண்டதோடு, மற்றும் காணொளி அரட்டையும் புரிந்தனர். அவ்வாறு காணொளி அரட்டையடிக்கும்போது, அந்த மனிதர் அவளது சில ’ஸ்கிரீன் ஷாட்’களை எடுத்தார். ஆனால் சாந்தாவுக்கு அது பற்றி எதுவும் தெரியாது.
அதிஷ்டவசமாக, அந்த பகுதியில் வசிக்கும் தனது நண்பரான மருத்துவர் ஒருவரிடமிருந்து, தாம் மணந்து கொள்ளவிருந்த இந்த நபரைப் பற்றி சாந்தா அறிந்து கொண்டாள். அந்த மருத்துவ நண்பர் குறிப்பிட்டுள்ளபடி, சாந்தா மணந்து கொள்ளவிருந்த குறித்த நபர், இரண்டு பெண்களை விவாகரத்து செய்த ஒரு மனிதர் என்பது தெரியவந்தது. முதலில் சாந்தா அதிர்ச்சியடைந்தார் எனினும், இந்த நபரை திருமணம் செய்ய வேண்டாம் என்று ஒரு முடிவை எடுத்தார். அதற்கான காரணத்தையும் அந்த நபரிடம் சொன்னார். குறித்த நபர் அந்த விடயத்தை ஏற்றுக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரினார்.
ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அந்த நபர் சாந்தாவின் படங்களுடன் சில இடுகைகளை உருவாக்கி, மோசமான முறையில் எழுதினார். எவ்வாறாயினும் சாந்தா இதைப் பற்றி தெரிந்து கொண்டார். உடனே அவர் அந்த இடுகைகளை அகற்றுவதற்காக ஹிதாவதியை அழைத்தார். அவருக்கு சட்டச் செயன்முறைகள் தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:
- இணையவெளியில் முன்பின் தெரியாதவர்கள் உங்களுடன் அரட்டை அடித்தால், அவர்களை நம்ப வேண்டாம்.
- நீங்கள் காணொளி அழைப்புகளை மேற்கொள்ளும்போது கவனமாக இருங்கள்.