கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024
மிகவும் தாமதமானதால் டிலினி வேலைக்கு விரைந்தாள். இந்த நேரத்தில், இலங்கையில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமொன்றிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அழைப்பாளர்களை அடையாளம் காணும் செயலியைப் பயன்படுத்தியதால் அவளால் அழைப்பை அடையாளம் காண முடிந்தது. அவள் தாமதமாக இருப்பதாலும், அந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் மனநிலையில் இல்லாததாலும் அவள் பதிலளிக்க விரும்பவில்லை. இருப்பினும், அவளுக்கு மீண்டும் இந்த அழைப்பு வந்தது, அவளால் இதை மறுக்க முடியவில்லை. அவள் பதிலளிக்க அழைப்பை ஏற்றதும்,
தொலைத் தொடர்பு முகவர்: வணக்கம் வாழ்த்துக்கள்!!!!!! நீங்கள் 1 மில்லியன் ரொக்கப் பணப் பரிசை வென்றுள்ளீர்கள், குலுக்கல் முறையில் இவ் இலக்கத்தை தேர்ந்தெடுத்தோம், நீங்கள் முதல் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.
அது அவளுக்கு ஒரு நல்ல காலைபொழுதாக அமையவில்லை என்றாலும் இதைக் கேட்ட அவள்பெறும் மகிழ்ச்சி அடைந்தாள்.
டிலினி: உண்மையில், நான் தொலைபேசியை பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து xxxx தொடர்பு சேவையை பயன்படுத்துகிறேன், இது தான் நான்அப்போதிலிருந்தே பயன்படுத்திய இலக்கம்.
தொலைத் தொடர்பு முகவர்: ஆமாம் மிஸ், மிக நீண்ட காலமாக xxxxஐப் பயன்படுத்தி வரும் எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களில் இருந்து உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.பணப் பரிசை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பலாம் அல்லது எங்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் நீங்கள் இன்று மதியம் 12:00 மணிக்கு முன் வர வேண்டும்.
டிலினி சிறிது நேரம் யோசித்துவிட்டு, அன்றைய தினத்திற்கான அனைத்து வேலைகளையும் திட்டமிட்டிருந்ததால், உண்மையில் அவளுக்கு அங்கே சென்று பரிசை பெற விரும்பம் இருக்கவில்லை. அதற்கு பதிலாக, அவள் எளிதான வழியான வங்கி கணக்கிற்கு பணத்தைஅனுப்ப சொன்னாள்.
தொலைத் தொடர்பு முகவர்: மிஸ், ஒரு சின்ன விடயம். உங்கள் பரிசை வங்கியில் வைப்புச் செய்யதுகோள்ள, நீங்கள் ஒரு சிறிய ஆரம்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அது வெறுமனே10,000 ரூபாய் தான். தயவு செய்து நான் கொடுக்கும் வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணத்தை வைப்பு செய்ய முடியுமா?
டிலினி அதைப் பற்றி சிறிதும் யோசிக்கவில்லை, அவள் இன்னும் அலுவலகம் செல்லும் வழியில் இருந்தாள்.
டிலினி: தயவு செய்து கணக்கு இலக்கத்தை சொல்லுங்க, எழுதி கொள்கிறேன்
தன் பையில் இருந்த பேனாவை எடுத்து உள்ளங்கையில் கணக்கு விபரத்தை எழுதினாள்.
டிலினி: நான் உடனடியாக பணத்தை வைப்புச் செய்கிறேன்
டிலினி அலுவலகத்தை அடைந்தாள், அவள் தனக்கு ஓய்வு கிடைத்ததும், குறித்த கணக்கில் பணத்தை வைப்புச் செய்ய அருகிலுள்ள ஏ.டி.எம் இயந்திரத்திற்குச் சென்றாள்.
அலுவலகம் திரும்பிய பிறகு, டிலினி தனது வங்கியிலிருந்து பரிசு பணம்வைப்பு செய்தமை குறித்த செய்தியைப் பெற ஆவலுடன் காத்திருந்தாள். நீண்ட நேரம் காத்திருந்து அவளுக்கு வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இருப்பினும், சிறிது நேரம் கழித்து அவள் தனக்கு அழைப்பு வந்த இலக்கத்தை டயல் செய்ய முயன்றாளாலும் அது பயனளிக்கவில்லை. அவள் அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றாள், ஆனால் அவர்களை அணுக முடியவில்லை.
அவள் மிகவும் வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தாள். அவளுடைய சக ஊழியர்களில் ஒருவர் அவளுடைய சோகமான மனநிலையை கவனித்ததுடன் என்ன நடந்தது என்று கேட்டார். பின்னர் டிலினி நிலைமையை சுருக்கமாக விளக்கினாள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியூடாக ஹிதவதியைப் பற்றி சக ஊழியர் கேள்விப்பட்டதாகவும் மற்றும் ஆலோசனை பெற அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் டிலினிக்கு பரிந்துரைத்தார்.
டிலினி கவலையோடு ஹிதவதியை அழைத்தாள். ஹிதவதி அவள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டு, இதுபோன்ற பிரபலமான(டிரெண்டிங்) மோசடிகளைப் பற்றி விளக்கியது. தான் ஏமாற்றப்பட்டதால், ஹிதவதி தனது அதிகார வரம்பில் உள்ள உள்ளூர் பொலிஸாரிடம் புகார் கொடுக்கும்படி டிலினியை கேட்டுக் கொண்டது அல்லது IGP யின் இணைய போர்டல்(பொலிஸ்மா அதிபரிடம் சொல்லுங்கள் ) மூலம் ஆரம்பநிலை ஒன்லைன் பொலிஸ் முறைப்பாட்டினை மேற்கொள்ளும்படி கூறியது. மேலும், இது தொலைத்தொடர்பு சேவையின் நற்பெயரைக் கெடுக்கும் என்பதால், அவர்களுக்கும் இது தொடர்பில் தெரிவிக்குமாறு ஹிதவதி கேட்டுக் கொண்டது.
தான் சிக்கலில் இருந்தபோது வழங்கிய தெளிவான வழிகாட்டுதலுக்கு டிலினி ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.
Precaution tips:
● பரிசு சலுகைகளை நம்புவதற்கு முன், சட்டப்பூர்வமான லோத்தர்/போட்டி நடத்தப்படுள்ளதா என்பதை விரைவாகத் தேடிப்பார்க்கவும். அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிட்டு மெலும் சரிபார்ப்புக்காக அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
●ஒன்று உண்மையென்று நம்ப முடியாத அளவுக்கு நன்றாக இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி இருமுறை யோசியுங்கள். எனவே, எந்த தேவையுமின்றி பணம் கொடுக்க முயற்சிக்கும் யாரையும் நம்பாதீர்கள்.
●பரிசைப் பெறுவதற்குக் கட்டணம் செலுத்துமாறு யாராவது உங்களிடம் கேட்டால், அச்சலுகை, மோசடியாக இருக்கலாம் என்பதால் நிராகரிப்பது எப்போதும் நல்லது.
●அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தனிப்பட்ட கணக்கு விபரங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாது, எனவே அதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும்.
● இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களை தண்டிக்க வேண்டுமானால் (சட்ட நடவடிக்கைகளை எடுக்க) நீங்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும் அல்லது telligp.police.lk வழியாக ஒன்லைனில் பொலிஸ் முறைப்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். (‘சைபர்-கிரைம்’ என வகையைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆதாரங்களை இணைக்கவும்).
● உண்மையான அழைப்பாளரைக் கண்டறியும் பயன்பாடுகள் எப்போதும் உண்மையான அழைப்பாளரின் பெயரை வெளிப்படுத்தாது (அவர்களின் அடையாளம் / வணிகப் பதிவின்படி)