கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 20, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் யாவும் கற்பனையாகும்.


வரவிருக்கும் தேர்தல் குறித்து கமல் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் அரசியலில் ஆர்வம் அவருக்கு சிறந்த பொழுதுபோக்காகி விட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார். கமல் அடிக்கடி யூடியூப்பில் அரசியல் விவாதங்களைக் பார்ப்பதோடு, முகப்புத்தகத்தில் அரசியல் பக்கங்களையும் பின்தொடர்ந்தார். ஒரு நாள், அவர் யோகா வகுப்பிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் ஒரு முக்கிய அரசியல் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை கூட்டத்திற்கு அவரை அழைப்பது போன்ற ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்அப்பில் வந்தது.

வணக்கம் கமல்
இன்று நீர்கொழும்பு பொலவானையில் xxxx நிகழ்நிலை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது
கீழே உள்ள aaaaaaaaaaaaaaaaaaaa லிங்க் (link) இனூடாக இக் கூட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்
நாளை மாலை 6 மணியளவில் இணைந்து கொள்ளவும்.

கமல் இதற்கு முன்னர் பல்வேறு நேரிடை சந்திப்புகளில் கலந்து கொண்டிருந்தார், ஆனால் நிகழ்நிலை கூட்டத்திற்கு சமூகமளிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அவர் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள், கமல் குறித்த நேரத்தில் நிகழ்நிலை கூட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் இருந்த நபர், கமலுக்கு கிடைக்கும் குறியீட்டை குறித்த நபருடன் பகிர்ந்தவுடன், அவர் கூட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார் என்று கூறியவுடன், கமல் குறியீட்டைப் பகிர்ந்து கொண்டார்.

மறு நொடியில், இனி கமல் தனது வாட்ஸ்அப்பை அணுக முடியாது என்பதனை உணர்ந்தார். உள்நுழைவதற்கு பல்வேறு முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. பின்னர், அவர் தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டார். அவரது நண்பர் இணையதளத்தில் தீர்வுகளுக்கான வழிமுறைகளை கண்டறிய ஹிதாவதியைத் தொடர்பு கொண்டார்.

பின்னர் கமல் ஹிதாவதியை தொடர்பு கொண்டு மோசடியில் விழுந்து தொடர்பாக விளக்கம் கொடுத்தார். கமலுக்கு தனது வாட்ஸ்அப் கணக்கை மீட்டெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்த பயனுள்ள சுய சேவையினை ஹிதாவதி வழங்கியது.

முன்னெச்சரிக்கை குறிப்புகள் :

  1. உங்களது பதிவுக் குறியீடு அல்லது இருபடி சரிபார்ப்பை (OTP / PIN) ஒருபோதும் ஏனையவர்களுடன் பகிர வேண்டாம்.
  2. நீங்கள் வட்சப் ஹேக்கிங்கை எதிர்கொண்டால், https://www.hithawathi.lk/help-centre/social-media/whatsapp/whatsapp-hacking/ ஐ தொடர்பு கொள்ளவும்.
  3. குறியீட்டு எண்ணை மறந்துவிட்டால், இருபடி சரிபார்ப்பை இயக்கி மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்Enable.