கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 19, 2023
சுரேஸ் வேலைத்தேடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவனது வயது இருபதின் தொடக்கமாக இருந்தது. பெரும்பாலான சமயங்களில் அவன் வீட்டிலிருந்தவாறு கணினி விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பதோடு மாலையில் தன்னுடைய நண்பர்களுடன் கொல்லைப்புறத்தில் கிரிக்கெட் விளையாடுவான்.
மற்ற நேரங்களில் வீட்டில் செய்வதற்கு ஏதுமில்லையாதலால் அவன் சிறிது சோம்பலுற்றுக் காணப்பட்டான். இதிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் குறித்து சுரேஷ் சிந்தித்தான். அவனுடைய நண்பர்களில் சிலர் இரவு பகல் பாராது பெண்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டிருப்பதுடன் அவனுக்கும் அவ்வாறு செய்ய ஆர்வமிருப்பினும் தனது உண்மையான முகநூல் கணக்கின் ஊடாக அதனைச் செய்வதற்கு அவன் அஞ்சினான். அதன்காரணமாக ஒரு அருமையான நடிகரின் நிழற்படங்ளுடன் வேறொரு பெயரில் போலியான முகநூல் கணக்கினை ஆரம்பித்தான். அதன் பின் பெண்கள் சிலருக்கு நட்புக் கோரிக்கைகளை விடுத்ததுடன், அன்றைய தினமே மாலையில் அவன் ஆச்சயரியப்படும் விதமாக இரண்டு பெண்கள் அவனது நட்புக் கோரிக்கையை ஏற்றிமிருந்தனர்.
சில நாட்களின் பின்னர் சுரேஷ் இந்தப் பெண்களுடன் mul;ilabf;fj; தொடங்கினான். இது அவனிற்கு அதிக சுவராசியமாக இருந்த காரணத்தினால் தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதனைக்கூட நிறுத்திவிட்டான். அவன் பல பெண்களுடன் இரவு பகலாக அரட்டையில் ஈடுபடத் தொடங்கினான்.
படிப்படியாக சுரேஷ் தன்னுடைய உண்மையான நிழற்படங்களை இந்தப் பெண்களுடன் பகிரத்தொடங்கியதுடன் அவர்களிடமிருந்தும் நிழற்படங்களை அனுப்புமாறு கோரினான். அந்தப் பெண்களும் சுரேஷ{டன் தங்களது படங்களை பகிர்ந்துக்கொண்டனர். சில பெண்கள் தங்களுடைய அரைநிர்வாண நிழற்படங்களைக்கூட அவனுக்கு அனுப்பினார்கள். சுரேஷ் இதற்கு அடிமையானதுடன் அவனது வாழ்க்கைமுறை முழுமையாக மாற்றமடைந்தது.
ஒரு நாள் காலையில் சுரேஷ் தன்னுடை பெண் நண்பிகளுக்கு வழக்கமான காலை வணக்கம் செய்திகளை அனுப்புவதற்காக எழுந்தான். எனினும் அவனால் அவனது கணக்கினுள் உள்நுழைய முடியவில்லை. சுரேஷ் பலமுறை முயன்றும் அவனால் அது முடியவில்லை. சுரேஷ் குழப்பமடைந்தான். அன்றைய தினம் மாலை இந்த போலிக் கணக்கு குறித்து அறிந்திருந்த சுரேஷின் நண்பர்களில் ஒருவன் அவனுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தான்.
சுரேஷின் நண்பன்: ஹாய் நண்பா, என்ன செய்துகொண்டிருக்கின்றாய், சற்று முன்னர் நீ எதனை பதிவேற்றியிருக்கின்றாய்?
சுரேஷ்: என்னது?? நான் ஒன்றும் செய்யவில்லையே…
சுரேஸின் நண்பன் அவனுக்கு ‘ஸ்கிறீன்ஷாட்’ ஒன்றினை அனுப்பியதுடன் அதனைப் பார்த்த சுரேஷ் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது என்பதனை உணர அவனுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சுரேஷ்: நண்பா, என்னுடைய கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது, நான் இப்பொழுது என்ன செய்யவேண்டும்? எனக்கு பயமாக இருக்கின்றது. அந்த அரட்டைத் தகவல்களில் அதிகளவிலான படங்கள் உள்ளன.
சுரேஸின் நண்பன்: நண்பா, சிறிது பொறு, நான் உனக்கு ஒரு இணைப்பினை அனுப்புகிறேன், நான் அதனை முகநூலில் பார்த்தேன். அது உனக்கு உதவக்கூடும். https://www.facebook.com/hithawathi/
சுரேஷ்: நன்றி! நான் அவர்களுக்கு தகவலை அனுப்பிப் பார்க்கிறேன்.
சுரேஷ் ஹிதவதியை வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொண்டதுடன் என்ன நடந்தது என்பதனை அப்படியே கூறினான். சுரேஷ் போலி கணக்கினை திறந்த அவனது தவறினை ஒப்புக்கொண்டதுடன் பல பெண்கள் அவனை நம்பி நிழற்படங்களை அனுப்பியுள்ளதாகவும் அதனை அந்த இணையத் திருடன் தவறாக பயன்படுத்திவிடக்கூடும் என அஞ்சுவதாகவும் குறிப்பிட்டான். முதலில் முகநூலினால் வழங்கப்பட்டுள்ள சுய-சேவை கருவிகளைப் பயன்படுத்தி செயலியின் மூலமாக போலி கணக்கு குறித்து முறையிடுமாறும், ஒரு வராத்தின் பின்னரும் அக்கணக்கு அகற்றப்படவில்லையெனில் மேலதிக முறைப்பாட்டிற்காக ஹிதவதியை தொடர்புகொள்ளுமாறும் ஹிதவதி கேட்டுக்கொண்டது. சுரேஷ் ஹிதவதி சேவைக்கு நன்றி கூறியதுடன் அறிவுறுத்தப்பட்ட படிமுறைகளை பின்பற்றுவதாகவும் உறுதியளித்தான்.
சுரேஷ் அத்துடன் நிழற்படம் தவறாக பயன்படுத்தப்பட்ட ஒரு பெண்களையும் ஹிதவதியை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அவர்களும் ஹிதவதியை தொடர்புகொண்டதுடன் தவறாக பயன்படுத்தப்பட்ட நிழற்படங்களும் ஹிதவதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் முகநூலிலிருந்து நீக்கப்பட்டன. பதிவிடப்பட்ட படங்களை அவளது பெற்றோர்களும் உறவினர்களும் பார்த்துவிடக்கூடும் என அஞ்சியதால் ஹிதவதியினால் வழங்கப்பட்ட சேவையை அவள் பெரிதும் பாராட்டினாள்.
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- வேடிக்கைக்காகவேனும் போலி கணக்குகளை உருவாக்காதீர்கள்.
- உங்களது முகநூல் கணக்கிற்கு மேலதிக பாதுகாப்பு வலயத்தினை சேர்ப்பதாற்காக எப்பொழுதும் இருவழிப் பாதுகாப்பு நடைமுறையை ( two factor authentication (2FA) ) பின்பற்றுங்கள்.
- நீங்கள் ஒன்லைன் ஊடாக சந்திக்கும் அறிமுகமற்ற நபர்களுடன் நிழற்படங்களை பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.
- சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகள் சர்வசாதாரணமாக ஆகிவிட்ட சூழலில் ஏதேச்சையான நட்பு கோரிக்கைகளை ஏற்காதீர்கள்.
- போலிக் கணக்குகள் நிழற்படங்கள்/ காணொளிகள் அல்லது உங்களது சம்மதமின்றி இணையத்தளத்தில் பதிவிடப்பட்ட வேறு ஏதேனும் உள்ளடக்கங்கள் குறித்து முறையிடல் மற்றும் அகற்றிக்கொள்வதற்கான உதவிக்கு Hithawathi யை தொடர்புகொள்ளவும்.