கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 7, 2021
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும்.
ரசிக்கா தனது பாடசாலை மாணவருடன் காதல்வயப்பட்டிருந்தாள். க. பொ. த உயர்தர பரீட்சையின் பின்னர் ரசிக்காவும் அவளது நண்பனும் கணினி கற்கைநெறிக்காக பதிவு செய்தனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதால் இவ்வுறவு மேலும் வலுவானது. அவர்கள் திருமணம் செய்ய விரும்பிய போதிலும் ரசிக்கா 18 வயதை அடையும் வரை மேலும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
அவர்களுள் இருவர் அவர்களது விவகாரத்தை அவர்களின் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர். இருப்பினும், ரசிக்காவின் பெற்றோரும் அவரது மகள் தொடர்பான விவகாரம் மற்றும் துரிதமாக திருமணம் செய்து கொள்ளும் தீர்மானம் தொடர்பிலும் விருப்பம் கொள்ளவில்லை. காலம் துரிதமாக கடந்ததுடன் ரசிக்கா 18 வயதை அடைந்தாள். அவளது பெற்றோர் மிகப்பெரிய பிறந்த தின வைபவமொன்றை அவளுக்காக ஏற்பாடு செய்தனர்.
ரசிக்கா தனது 18 வயதினைப் பூர்த்தி செய்து ஒரு வாரக்காலப்பகுதிக்கு பின்னர் தனது பெற்றோருக்கு அறிவிக்காது நண்பனுடன் திருமணம் செய்து கொண்டாள். மேலும் அவர்கள் வீட்டிலிருந்து தொலைவில் ஒரு இடத்தில் வசித்தனர்.
திருமணமாகிய 6 மாதங்களின் பின்னர், ரசிக்கா திடீரென தனது பெற்றோருடன் வந்திணைந்து கொண்டாள். அவள் தனது போதைப்பொருளுக்கு அடிமையான கணவரால் பல தடவைகள் துன்புறுத்தலுக்குட்பட்டதுடன் பல தடவைகள் அவமானப்படுத்தப்பட்டமையால் திரும்பி வந்தாள். அவரது போதைப்பொருளுக்கு அடிமையான விடயம் திருமணத்திற்கு முன்பிலிருந்தே மறைக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
ரசிகவின் அவளது கணவன் தன்னைவிட்டு ரசிக்கா விலகியமையால் மிகுந்த கோபம் கொண்டான். அவளது சமூகபிம்பத்தை அழிக்கத் திட்டமிட்டார். அவளது பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி போலியான ஃபேஸ்புக் கணக்கொன்றை அவன் உருவாக்கினான். மேலும் அவன் அவளது சில காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பிரசுரித்தான். மோசமான முறையில் கருத்துரைத்தல் (வெறுப்புப் பேச்சு) மற்றும் அவற்றினை தனது அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பரப்புவதற்கும் அவன் முற்பட்டான்.
இது தொடர்பாக ரசிக்கா நெருங்கிய நண்பர்கள் மூலம் அறிவிக்கப்பட்டதோடு, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்குவதற்கான ஒரு வழியை அவள் தேடினாள். பின்னர் அவள் “ஹித்தாவத்தி”யை கண்டறிந்தார். அவர் ஹித்தவத்திக்கு அழைக்கப்பை ஏற்படுத்தி சரியான ஆலோசனை மற்றும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டாள்.
- போலியான பேஸ்புக் கணக்கை அறிக்கையிடுவதற்கும் அகற்றவதற்கும் ஹித்தவத்தி ரசிக்காவிற்கு உதவி புரிந்தது.
- கணவரின் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை ஆகியவற்றை அறிவிக்கும் பொருட்டு வின் ( தேவையுடைய மகளிர் ) WIN(Women in Need) நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு ஹித்தவத்தி அவளை பணித்தது.
- அவனுக்கெதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு 1938 இனை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டாள்.
முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:
- உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபருக்கு இது போன்றதாக நடைபெறுமாயின், இது தொடர்பாக குழப்பம் மற்றும் பயம் கொள்ள வேண்டாம். இவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் உள்ளன.
- பொதுவாக பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் எவ்விதத்திலும் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ( உதாரணமாக, மோசடியான கணக்குகளை உருவாக்குவதற்கு, பகையாளிகளால் தவறாக பயன்படுத்தப்படும்).
- உங்களது சம்மதமின்றி உங்களுடைய உள்ளடக்கத்திலுள்ள (விம்பங்கள், காணொளிகள் போன்றவை ) வெளியிடப்படுமாயின் அறிக்கையிடல் வேண்டும்; அவசியமேற்படின் ஹித்தாவத்தியை தொடர்பு கொள்ளவும்.
- இவ்வாறான சூழ்நிலையில் உதவியற்ற ஒரு பெண்ணாக இருப்பின் இலவச சட்ட ஆலோசனை அல்லது ஆலோசனைக்காக தேவையுடைய மகளிர் Women In Need ( WIN ) தொடர்பு கொள்ளவும்.
- இந்த இணையத்தளத்தினூடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும். https://www.hithawathi.lk/how-to-get-help/useful-contact-information/
- இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் ஆதரவற்றிருக்கும் ஒரு பெண்ணாயிருப்பின் 1938 (பெண்கள் உதவியெண் – பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சு) இனைத் தொடர்பு கொள்ளுங்கள்.
- இவ்வகையான சந்தர்ப்பங்களில் தாங்கள் தாழ்வாக உணரும் போது 1926 (விசேட மனநிலை ஆரோக்கிய துரித எண் – 1926 (Special Mental Health Hotline) அல்லது சுமித்திரயோ (Sumithrayo) ஐ தொடர்புக்கொள்ள முடியும்.