கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 20, 2025
இங்கே குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் யாவும் கற்பனையானவை ஆகும்
தீப்தி ஒரு நாள் மாலைப்பொழுதில் தனது முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நவநாகரீகமான புதிய ஆடைகள் பற்றிய விளம்பரம் ஒன்றினைப் பார்த்தாள். அந்த ஆடைகளின் ஸ்டைல்கள் சரியாக இருந்ததுடன், விலைகளும் அதனைக் கடந்து செல்ல முடியாத அளவுக்குச் சிறப்பாக இருந்தது. உற்சாகமான அவள், விரைவாக இணைப்பினைச் சொடுக்கி சில ஆடைகள் மற்றும் டொப்களை ஆர்டர் செய்தாள்.
சில நாட்களுக்குப் பிறகு, அவளுடைய பார்சல் வந்தது. தீப்தி அதை ஆவலுடன் திறந்தாள், உள்ளே பழைய, தேய்ந்துபோன துணிகள் இருந்தன! ஆடைகள் மங்கிப்போனதாகவும், துணி மலிவானதாகவும் தோன்றியது. அவள் ஏமாற்றமடைந்து மிகவும் குழப்பமடைந்தாள். அவள் விரைவாக தனது முகப்புத்தகத்தில் அந்த இணைப்பிற்கான தொலைபேசி இலக்கத்தினைக் கண்டுபிடித்து அதற்கு அழைத்தாள், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
விரக்தியடைந்த தீப்தி, உதவிக்காக ஹிதாவதியை (Hithawathi) அணுக முடிவு செய்தார். இது ஒரு வகையான மோசடி என்று ஹிதாவதி விளக்கமளித்தது, மேலும் விற்பனையாளரின் விவரங்களைப் பெற்று முறையான பொலிஸ் புகாரைப் பதிவு செய்யுமாறு தீப்திக்கு அறிவுறுத்தியது. இணைவழியூடாக ஷொப்பிங் செய்யும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் ஹிதாவதி பகிர்ந்து கொண்டது. தீப்தி, இப் பயனுள்ள ஆலோசனைகளுக்காக ஹிதாவதிக்கு நன்றி தெரிவித்தார்.
அவள் அடுத்த முறை, ஏதேனும் விலை கொடுத்து வாங்குவதற்க்கு முன்னர் விற்பனையாளர் நம்பகமானவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வேன், மதிப்புரைகளைப் படிப்பேன் மற்றும் அது நன்கு அங்கீகரிக்கப்பட்டதா என்று சரிபார்ப்பேன் என தனக்குத்தானே வாக்குறுதி எடுத்துக் கொண்டாள்.
முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:
- இப்போது இணையவழியூடான கொடுக்கல் வாங்கல் மோசடிகள் சர்வசாதாரணமாகி வருவதால், “ஒப்படைக்கப்பட்ட பின்னர் பணம் செலுத்தும்” விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது.
- வாங்குவதற்கு முன், ஆன்லைன் விற்பனையாளர்களின் வாடிக்கையாளர் மதிப்புரைகளை எப்போதும் படித்து, அவர்கள் எவ்வளவு நன்கு அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்பதைச் சரிபார்க்கவும்.
- முகப்புத்தகத்தில் போலி வணிகப் பக்கங்களைப் புகாரளிக்கவும்.
- வாங்குவதற்கு முன் விற்பனையாளர்களிடம் அவர்களின் பரிமாற்றக் கொள்கை பற்றி வினவுங்கள்.
- இந்த மோசடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கையில் உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் (CAA) முறையான புகாரை பதிவு செய்யவும் அல்லது நுகர்வோர் தொடர்பான பிரச்சினைகளைப் பொலிஸில் புகாரளிக்கவும்.