கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 8, 2022
இங்கு குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் என்பவை கற்பனையானவையே.
லஷித என்பவர் ஒரு பாடசாலை ஆசிரியர். அவர் தனியார் வகுப்புகளையும் நடாத்தி வந்தார். ஒரு நாள் அவர் தனியார் வகுப்பில் ஈடுபட்டிருந்த போது அவரது தொலைபேசியை நிறுத்தி வைத்திருந்தார். வகுப்பு முடிவடைந்தவுடன் தொலைபேசியை எடுத்து பார்த்தபோது XYZ வங்கியிலிருந்து அவருக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவரது அனைத்துக் கணக்குகளும் அவ்வங்கியிலேயே உள்ளன.
லஷித: நான் எந்தவிதமான பணப்பரிவர்த்தனையையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கையில் ஏன் எனக்கு வங்கியிலிருந்து இவ்வாறான குறுஞ்செய்திகள் வருகின்றன? 💭
OTP ஐ (ஒரு முறை கடவுச் சொல்லை) குறிப்பிடப்பட்ட குறுஞ்செய்தி ஒன்றும் இதுவரை அவருக்கு அறிமுகமில்லாத கணக்கு ஒன்றுக்கு LKR 25,000 மாற்றப்படுவதாக மற்றொரு குறுஞ்செய்தியும் வங்கியிலிருந்து அவருக்கு வந்திருந்தது.
சிறிது நேரத்தின் பின்னர் லஷிதவுக்கு அறிமுகம் இல்லாத ஒருவரிடமிருந்து Messenger இல் ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தெளிவாக இருக்கவில்லை. அந்நபருடைய பெயருக்கே லஷிதவின் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம் லஷிதவினுடைய நண்பர்கள் அவருக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள்.
லஷித: என்ன? நான் பணம் எதுவும் கேட்கவில்லை. 😳
லஷித அவரது Messenger இலிருந்து அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்திகளை விரைவாகப் பார்த்த போதுதான் அவசர விடயத்திற்காகப் பணம் கேட்டு அவரது நண்பர்களுக்குப் பல குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருப்பதை அவதானித்தார்.
நண்பர்: ஹாய் லஷித, நான் உனக்கு சிறிதளவு பணத்தை அனுப்பியுள்ளேன்.
லஷித: ஓ.. ஐயோ.. இது நான் இல்லை. நான் பின்னர் இதைப் பற்றிக் கூறுகிறேன்.
லஷித அவரது வங்கிக் கணக்கை விரைவாக முடக்கினார். இந்த தொழில்நுட்ப விடயங்கள் பற்றி அவர் சிறிதளவு அறிந்து வைத்திருந்தார். ஆகவே அவர் இதுபற்றி ஆறுதலாக யோசித்து Hithawathi இல் பணிபுரியும் அவரது நண்பர் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.
லசிதவின் மின்னஞ்சலில் உள்ள தகவல்கள் அனுமதியின்றித் திருடப்பட்டிருப்பதையும் (Hack) அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த cookies இலிருந்து அவரது Online வங்கி விவரங்களைப் பெற Hacker மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட்டுள்ளதையும் லசித அறிந்து கொண்டார்.அத்துடன் அவரது Facebook கணக்கு மற்றும் Messenger ஊடாகவும் Hacker உள் நுழைந்திருந்தார். அவரே நண்பர்களிடம் பணம் கேட்டு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார்.
XYZ வங்கிக்குள் உள்நுழைந்த பின் Hacker தனது கணக்கிற்குப் பணத்தை மாற்றியுள்ளார். அத்துடன் லஷித தனது OTP ஐ (ஒரு முறை கடவுச் சொல்லை) வழக்கமாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் விளைவாக லசித அவரது கணக்கிலிருந்த அனைத்துப் பணத்தையும் இழக்க நேரிட்டது. மேலும் கீழே குறிப்பிடப்படும் முன்னெச்சரிக்கை குறிப்புகளின் உதவியுடன் எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு Hithawathi ஆல் ஆலோசனை வழங்கப்பட்டது.
முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:
- உங்கள் சாதனத்தை விட்டு வெளியேறும் போது குறிப்பாக அது உங்கள் சொந்த சாதனமாக இல்லாதவிடத்து அனைத்து கணக்குகளிலிருந்தும் வெளியேறவும்.
- Cookies மற்றும் Browsers இல் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை அழித்துவிடவும். இல்லையெனில் இணையத்தளங்களில் உங்கள் உள்நுழைவுத் தரவுகள் சேமிக்கப்பட்டிருந்தால் மூன்றாம் தரப்பினருக்கு அவற்றை அணுகுவது எளிதாக இருக்கும்.
- மின்னஞ்சல் மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தள கணக்குகளில் இரு சாதன அங்கீகாரத்தை (2FA) இயக்கவும்.
- தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், Screenshots மற்றும் வேறு பல) தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும் இணையக் குற்ற முறைப்பாடுகள் சிஐடி யிடம் ஒப்படைக்கப்படலாம் அல்லது பணிப்பாளர், குற்றவியல் விசாரணைத் திணைக்களம், கொழும்பு1 என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்ப முடியும். அதை விட dir.cid@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அனுப்பி வைக்க முடியும்.