கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 7, 2022
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
சுசீலாவின் மகளுக்கு வெறும் 17 வயதுதான், தீங்கு விளைவிக்கும் அபாயகரமான போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு இளைஞனுடன் அவள் ரகசிய உறவொன்றை வைத்திருந்தாள்.ஒருநாள் ஒரு நம்பகமான நபரிடம் இருந்து சுசீலா இதைப் பற்றி அறிந்துகொண்டாள், அத்துடன் பாடசாலை கல்வியை தொடரும் தனது குழந்தையின் முன்னேற்றத்திற்காக உடனடியாக அவ்வுறவை உடைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் அந்த பையன் சுசீலா மீது மிகவும் கோபமடைந்தான், எப்படியாவது அவளைப் பழிவாங்குவேன் என்று கூறினான்.
அடுத்த நாள், சுசீலாவுக்கு குறித்த இளைஞனிடமிருந்து டிக்டோக் வீடியோ இணைப்புடனான ஒரு தகவல் வந்தது. சுசிலாவுக்கு அவள் கண்களை நம்ப முடியவில்லை; அந்த வீடியோவில் அவளது மகள் திரையின் முன் நின்றபடி தனது ஆடைகளை அகற்றிக்கொண்டிருந்தாள்.
“ஐயோ, நான் என் மகளுக்கு ஏதாவது தவறு செய்துவிட்டேனா?
இந்த வீடியோ அழைப்பு பதிவுகளையும் (ரெக்கார்டிங்களையும்) , டிக்டோக் பதிவுகளையும் எப்படி நான் அகற்றுவேன்?
நான் தான் இதை நிறுத்தினேன், அதனால் இப்போது அவன் பைத்தியகாரதனமாக செயற்படுகிறான் என்று மகளுக்கு எப்படிச் சொல்வது?
இந்த அழுத்தத்துடன் அவளால் பரீட்சை எழுத முடியாது.
சமூகம் கண்டிப்பாக அவளைப் பற்றி கேவலமாகப் பேசும், அது அவள் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும்.
இது தெரிந்தால் இந்த நாட்டில் எம்மால் நிம்மதியாக வாழ முடியாது”
ஹிதவதி அவளது கதையைக் கேட்டு, டிக்டாக் தளத்தில் வீடியோவைப் புகாரளிப்பதன் மூலம் அதை மறைக்க முடியும் என்று கூறினார். இருப்பினும், அதற்குள் அவளின் மகள் இப்போது சிறுவராக இருப்பதால் 1929 – சிறுவர் உதவி சேவை இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும், மேலும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஹிதவதி பரிந்துரை செய்த்துள்ளார். அதன்படி, இதுபோன்ற குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை தண்டிக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் புகாரளிக்க வேண்டும் என்பதை சுசீலா உணர்ந்தார். தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கியமைக்காக ஹிதவதிக்கு தனது நன்றியை சுசீலா தெரிவித்தாள்.
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- பாதிக்கப்பட்டவர் சிறுவராக இருந்தால் (18 வயதுக்குக் குறைவானவர்), குற்றவாளியை எளிதாக எடுத்துக்கொள்வது நியாயமில்லை என்பதால், பின்வருவனவற்றில் ஒருவரைத் தொடர்பு கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
- குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான துஷ்பிரயோகங்களையும் விசாரித்து, அவை நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆதிகார சபையின் – 1929 சிறுவர் உதவி சேவை இலக்கத்தை (24/7, மும்மொழி, கட்டணமில்லா துரித எண் (ஹாட்லைன்)) தொடர்பு கொள்ளவும்.
- பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தை (தொலைபேசி: 011 244 4444) தொடர்பு கொள்ளவும், அங்கு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதனால் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க முடியும்.