கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 20, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.


ருசரா தனது பணியிடத்திற்கு அருகிலுள்ள வாடகை வீடொன்றில் தனியாக வசித்து வந்தார். அவர் மாதம் இருமுறை தனது விட்டிற்குச் செல்வார். அவர் தனது பெற்றோர் மற்றும் ஒரு குறுகிய பயிற்சித் திட்டத்திற்காக வெளிநாட்டில் வசிக்கும் தனது காதலனுடனும் காணொளி அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்தார்.

ஒரு நாள், ருசரா வேலை முடிந்து தனது தங்குமிடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவளுடைய தொலைபேசி திடீரென செயலிழந்துவிட்டது. அவள் அதை மீள்தொடக்கம் செய்து சார்ஜ் செய்ய முயன்றாள், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அவளுடைய காதலன் அவளுடைய நேர மண்டலத்தை விட 2 மணிநேரம் முன்னால் இருந்ததால், அவன் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவனுடன் பேச விரும்பினாள். அவசரமாக அருகில் இருந்த தொலைபேசி பழுதுபார்க்கும் கடையைத் தேடினாள். அப்போது இரவு 7:30 மணி ஆகிவிட்டது, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன, ஆனால் ஒரு சிறிய கடை இன்னும் திறந்திருப்பதை அவள் கண்டாள்.

அவளது தொலைபேசியை பழுதுபார்க்க முடியுமா என்று கேட்டாள், அதற்கு அவர்கள் சிறிது நேரம் ஆகும் என்றும், அவளுடைய தொலைபேசி மாதிரிக்கு ஏற்ற புதிய திரைகளை ஆர்டர் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். அவர்கள், அவளை தொலைபேசியை அவர்களிடம் விட்டுச் செல்லுமாறும், மறுநாள் மதியம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உறுதியளித்தனர். ருசரா தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார், சரியான நேரத்தில் திருத்தித் தரப்படும் என்றும் நம்பினார்.

ருசரா: நான் தொலைபேசியை விட்டுச் செல்கிறேன். நாளை மதியம் அதை என்னிடம் கொடுக்க முடியுமா? உண்மையில் அது இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாது.

தொலைபேசி திருத்துபவர்: ஆமாம் மிஸ்., நாங்கள் நாளை மதியம் அதனை உங்களுக்குக் கொடுக்கலாம்.

அவள் தனது தங்குமிடத்திற்குத் திரும்பினாள், தன் காதலனைத் தொடர்பு கொள்ள முடியாததால், தன் மடிக்கணினியைப் பயன்படுத்தி அவனுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தாள். அவள் நடந்ததை விளக்கமாகக் சொல்லிவிட்டு, மறுநாள் அவள் தனது தொலைபேசியை எடுப்பதாகச் சொன்னாள்.

ருசரா : ஹாய் அன்பே, என் தொலைபேசி திரையில் ஏதோ பிரச்சனை, அதனால் அதைத் திருத்துவதற்குக் கொடுத்திருக்கிறேன். நாளை மதியம் அதனை எடுத்து வருகிறேன்.

ருசராவின் காதலன்:அப்படியா? நன்றி. நான் பலமுறை உங்களை அழைக்க முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை. நான் கவலைப்பட்டேன். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள், நான் நாளை உங்களிடம் பேசுகிறேன். இரவு வணக்கம். நான் உங்கள் அம்மாவுக்கும் தெரியப்படுத்துகிறேன்.

ருசரா : சரி, அன்பே. இரவு வணக்கம்.

மறுநாள், ருசரா தனது தொலைபேசியைப் பெற்றுக் கொண்டாள், அது திரும்பக் கிடைத்ததில் நிம்மதி அடைந்தாள். அவள் தனது அம்மா மற்றும் தனது காதலனிடமும் கதைத்தாள்.

கலும்: ஏய், எப்படி இருக்கிறாய்? அதற்குள் சிறிது காலம் ஆகிவிட்டது.

ருசரா: ஹாய்! நான் நன்றாக இருக்கிறேன். உங்களுடன் விஷயங்கள் எப்படி இருக்கின்றன?

கலும்: பறவாயில்லை. என்னிடம் சில செய்திகள் உள்ளன. பயப்பட வேண்டாம், ஆனால் இது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

ருசரா:நான் வேலையில் இருக்கிறேன். என்ன நடக்கிறது? நான் ஏற்கனவே பயமாக உணர்கிறேன்.

கலும்: உங்கள் தனிப்பட்ட படங்களில் ஒன்று மோசமான வாட்ஸ்அப் குழுவொன்றில் பதிவிடப்பட்டுள்ளது. உங்கள் புகைப்படத்தைப் பார்த்து உங்களை அடையாளம் கண்டுகொண்ட மற்றொரு நண்பரிடம் இருந்து நான் தெரிந்து கொண்டேன். கவலைப்பட வேண்டாம், நாம் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.

பீதியடைந்த ருசரா வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். அவள் அரை நாள் லீவு போட்டுவிட்டு, தன் வாடகை விட்டிற்குச் சென்று, பைகளை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள். அவள் தனது காதலனிடம் நிலைமையைப் பற்றி கூறினாள், மேலும் பழுதுபார்க்கும் கடை தனது தனிப்பட்ட புகைப்படங்களைத் திருடியிருக்கலாம் என்று அவர் சந்தேகித்தார்.

அவர் அவளை ஆறுதல்படுத்தி தீர்வுகளைத் தேடத் தொடங்கினார். அவர் ஹிதவதி (Hithawathi) இணையதளத்தைக் கண்டுபிடித்து ஆலோசனைக்காக அவர்களைத் தொடர்பு கொண்டார். சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததால் குழு தடைசெய்யப்படலாம் என்பதால், குழுவைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும், அதைப் புகாரளிக்கவும் ஹிதவதி அவருக்கு வழிகாட்டினர். அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவை (சிசிஐடி) தொடர்பு கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினர். ஹிதவதி இனால் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு ருசராவின் காதலன் நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:

• அந்தரங்கக் காட்சிகளைப் பதிவு செய்வது அல்லது உங்கள் நிர்வாணப் படங்கள்/வீடியோவை மற்றவர்கள் எடுக்க அனுமதிப்பது பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் சில காரணங்களால் அவை கசிந்தால் அதிலிருந்து மீள்வது நீண்ட செயல்முறையாக இருக்கும்.

• உங்கள் தொலைபேசியினைத் திருத்த வேண்டியிருந்தால், உங்கள் தொலைபேசி மாதிரிக்கான நம்பகமான சேவை வழங்குநரிடம் அதை எடுத்துச் செல்லுங்கள்.

• இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம் சமூக விதிகளைப் பின்பற்றாத வாட்ஸ்அப் குழுக்களைப் பற்றி நீங்கள் புகாரளிக்கலாம்.

• உங்கள் தனிப்பட்ட / நிர்வாணப் படங்கள் அல்லது காணொளிகளை ஒன்லைனில் கண்டால், அவற்றைப் புகாரளிப்பதற்கும் அகற்றுவதற்கும் உதவிக்கு ஹிதவதிஇனைத் தொடர்பு கொள்ளுங்கள்.

• இணையம் வழியிலான-குற்றவியல் முறைப்பாடுகள் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை CIDயிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றவியல் விசாரணை திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், dir.ccid@police.gov.lk / report@cid.police.gov.lk என்ற முகவரியிலும் மின்னஞ்சல் அனுப்ப உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.