கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 7, 2021
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
ஓர் அதிகாலையில் ஹிதாவதிக்கு மிகக் குறைந்த தொனியுடன் கூடிய குரல் கொண்ட லலிதா எனும் பெண்மணியிடமிருந்து அழைப்பு வந்தது.
“.காலை வணக்கம்! நாம் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?” என்று கூறியபடி ஹிதாவதி அழைப்புக்கு பதிலளித்ததுடன் அப்பெண் எதுவும் சொல்லாமல் அழ ஆரம்பித்து, சுமார் 20 விநாடிகள் அழுதாள்.
பின்னர் அப்பெண் அவரது கதையைச் சொன்னாள். “நான் லலிதா, 46 வயது. எனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்கிறார்.
நான் உயர்தர வகுப்புகளில் இருந்தபோது என் பள்ளியில் ஒரு பையனுடன் காதல் உறவொன்று வைத்திருந்தேன். நாம் எங்கள் வகுப்புகளில் ஒருவருக்கொருவரை சந்தித்து ஒன்றாக புகைப்படங்களை எடுத்தோம். அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை நான் அறிந்த பின் எங்கள் உறவை துண்டித்துக்கோண்டோம். நாங்கள் பிரிந்தோம், மீண்டும் சந்திக்கவே இல்லை.
நாங்கள் வெவ்வேறு பாதைகளை தேர்வு செய்து பயணித்தோம். எப்படியோ மிக சமீபத்தில், எனது நண்பர்கள் சிலர் “எனது பேஸ்புக்” கணக்கிலிருந்து நண்பர் கோரிக்கை அழைப்புகளைப் பெற்றதாகக் கூறினர்.
ஆனால் எனது சுயவிவரப் படம்(கள்) 20 ஆண்டுகளுக்கு முன்பு (பள்ளி நேரம்) போன்ற மிகப் பழையவை. எனது பழைய படங்களைப் பயன்படுத்தி அந்த நபர் அல்லது யாரோ ஒருவர் என்னைப் பற்றி ஒரு போலி கணக்கொன்றை உருவாக்கியுள்ளார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இப்போலி கணக்கைப் புகாரளித்து நீக்க வேண்டும், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.”
அவர் வழங்கிய தகவல்களின் படி, ஹிதாவதி, மேலும் சரிபார்த்ததுடன், போலி கணக்கை அகற்ற உதவியதுடன் தேவையான சட்ட நடைமுறைகள் குறித்தும் அவருக்கு தெரிவித்தது. மேலும், 1938 (பெண்கள் உதவிச் சேவை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்) கவனித்துக்கொண்டிருக்கும் சட்ட நடைமுறைகளைத் தொடருமாறு ஹிதாவதி அவரிடம் கேட்டுக்கொண்டது.
மேலும் இவ்வாறான இக்கட்டான நேரங்களில் லலிதா உறுதியாக இருக்க வேண்டும் என ஹிதாவதி அறிவுறுத்தியதுடன் நம்பமுடியாத சம்பவங்கள் காரணமாக அவர் மனம் வருந்தினால் 1926 (மனநல உதவிக்கான சிறப்பு தொலைபேசி எண்) அல்லது சுமித்ரயோவை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டது. எல்லாம் சரியாகிவிடும் என்ற உணர்வுடன் லலிதா அழுவதை நிறுத்தினார். இறுதியாக, அவர் ஹிதாவதிக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:
- நீங்கள் பயன்படுத்தும் இணையம் / சமூக ஊடகங்களில் (உ.தா. பேஸ்புக்) உங்கள் பெயரைத் தேடுவதை உறுதிசெய்து, உங்கள் / உங்கள் பெயரின் சந்தேகத்திற்கிடமான கணக்குகளை சரிபார்க்கவும்.
- இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் உதவியற்ற பெண்ணாக இருந்தால் சட்ட ஆதரவுக்காக 1938 (பெண்கள் உதவிச் சேவை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்) ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
- இவ்வகையான சம்பவங்களால் நீங்கள் உதவியற்ற நிலையை உணரும் போது 1926 (மனநல உதவிக்கான சிறப்பு தொலைபேசி எண்) அல்லது சுமித்ரயோவைத் தொடர்பு கொள்ளுங்கள்.
- உங்கள் அனுமதியின்றி உள்ளடக்கங்கள் (படங்கள், வீடியோக்கள் போன்றவை.) வெளியிடப்பட்டதாகத் தோன்றினால் புகாரளிக்கவும்; தேவைப்பட்டால், ஆதரவுக்காக ஹிதாவதியைத் தொடர்பு கொள்ளுங்கள்.