கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 16, 2025
இங்கு குறிப்பிடப்படும் பெயர்களும் இடங்களும் கற்பனையானவை
சுபுன் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்றாம் வருட மாணவனாக இருக்கிறார். அவர் சிறிது காலமாக பல்வேறு நிறுவனங்களில் உள்ளகப்பயிற்சிகளுக்கு விண்ணப்பித்து வந்தார். ஒரு நாள், ஒன்லைனில் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு பிரபலமான வேலைத் தளத்தில் ஒரு சுவாரஸ்யமான விளம்பரத்தைக் கண்டார். அவர் அதிலிருந்த விவரங்களை விரைவாக வாசித்தார், அத்துடன் அதிக தயக்கமின்றி, அந் நிறுவனத்திற்குத் தனது தகவல்களுடன் கூடிய ஒரு மின்னஞ்சலை அனுப்பினார்.
சில நாட்களுக்குப் பின்னர், சுபுனுக்கு ஒரு அசாதாரண தொலைபேசி அழைப்பு வந்தது.
நிறுவனம்: வணக்கம்! நீங்கள் XYZ நிறுவனத்துடன் பேசுகிறீர்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்தில் ஒரு உள்ளகப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நாளை ஒரு இணைப்புக்காக உங்கள் மின்னஞ்சலை சரிபாருங்கள். இணைப்பில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து சில பாடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். தயவுசெய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை உடனடியாக எங்களிடம் சமர்ப்பியுங்கள். நன்றி!
அழைப்பு பதிவு செய்யப்பட்டதால், சுபுனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அந்தத் தொலைபேசி இலக்கம் குறித்த தகவல்களைத் தேடிப் பார்த்ததில் அதில் அவ்விலக்கம் மோசடிச் செயல்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. சுபுன் அந்த இலக்கத்தை தன் தொலைபேசியில் தடை செய்தார்.
ஹிதவதி உடன் தொடர்ச்சியாகப் புதுப்பித்த தகவல்களைப் பெற்றதால், சுபுன் மோசடிக்குப் பலியாவதிலிருந்து தவிர்க்க முடிந்தது, அவர் அதற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:
- தொடர்பு இலக்கத்தைச் சரிபார்க்கவும்: கூகுள் அல்லது பிற நம்பகமான ஆதாரங்களைப் பயன்படுத்தி எப்போதும் அறியப்படாத அழைப்புகள் அல்லது செய்திகளைச் சரிபார்க்கவும்.
- தனிப்பட்ட தகவலைப் பகிர வேண்டாம்: முறையான சரிபார்ப்பு இல்லாமல் முக்கியமான தகவல்களைப் (உங்கள் தேசிய அடையாள இலக்கம் அல்லது வங்கி விவரங்கள்) பகிர வேண்டாம்.
- தனிப்பட்ட தகவலைப் பகிர வேண்டாம்: முறையான சரிபார்ப்பு இல்லாமல் முக்கியமான தகவல்களைப் (உங்கள் தேசிய அடையாள இலக்கம் அல்லது வங்கி விவரங்கள்) பகிர வேண்டாம்.
- இணைப்புகள் மற்றும் மென்பொருளைச் சரிபார்க்கவும்: அறிமுகமில்லாத இணைப்புகள் அல்லது மென்பொருளை அணுகும்போது எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அவை தரவு திருட்டு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.