கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 24, 2021
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனைகளாகும்.
பாடசாலைக்கு அடிக்கடி விடுமுறை எடுத்த சுனேத்திற்கு நண்பர்களுடன் சுற்றி அலைந்து வாழ்வை கொண்டாடி மகிழ ஆசை இருந்த போதும்! அவனுக்கென்று ஒரு வேலை இல்லாததால்! விரும்பியதைச் செய்ய அவனிடம் பணம் இருக்கவில்லை. பெற்றோர்களிடம் பணம் கேட்டவும் அவனுக்கு கூச்சமாயிருந்தது.
சுனேத் பணமீட்டுவதற்கு இலகுவான மார்க்கமொன்றைத் தேடும் வேளையில் முகநூலில்> உங்களுக்கு பணம் வேண்டுமெனில் உட்பெட்டியில் தெரிவியுங்கள் எனும் மிகவும் அற்புதமான பதிவொன்றைப் பார்த்தான்.
சுனேத் இந்த செல்வத்தை எண்ணி சிறிது ஆர்வத்துடனே இருந்தான். முயற்;சித்துப் பார்க்கலாம் என எண்ணி அவர்களுக்கு செய்தி அனுப்பிய போது மறுபக்கத்திலிருந்து காதல் வார்த்தைகளில் மறுமொழியளிப்பது பெண் ஒருவர் என்பதை புரிந்துக்கொண்டான். அவள் சுனேதின் பெயர், முகவரி மற்றும் வங்கிக் கணக்கிலக்கம் போன்ற சுயவிபரங்களை கேட்டாள். பின்னர் ரூ.5000 ஐ வைப்பிலிடுவதற்காக சுனிதின் வங்கி அட்டையின் இருப்பக்கங்களையும் புகைப்படமெடுத்து அனுப்புமாறும் கேட்டுக்கொண்டாள்.
இச்சமயத்தில், வங்கி வைப்பொன்றை மேற்கொள்வதற்கு கணக்கிலக்கமே போதுமானது ஏன் அவள் ATM அட்டையின் இருப்பக்க புகைப்படங்களை கேட்கின்றாள் என தன் பகுத்தறிவைக்கொண்டு சிந்தனை செய்தான். ஆன்லைன்னில் பொருட்களை கொள்வனவு செய்யும் போதே அட்டையின் பின்புறத்திலுள்ள மூன்று எழுத்துக்களைக் கொண்ட குறியீடு முக்கியமென்பது அவனுக்கு தெரியும். ஆதலால் இது நன்கொடை என்ற போர்;வையில் மக்களிடமிருந்து ஏமாற்றி பணம் பறிப்பதை இலக்காக கொண்ட செயல் என்பதை அவன் அறிந்துக் கொண்டான்.
இருப்பினும், சுனேத் அந்த வலையில் சிக்காமல் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை எண்ணி மகிழ்வடைந்துடன் தவறான முறையில் வழிநடத்தப்படும் மற்றும் தங்களது அட்டையிலுள்ளவற்றை இழந்திருக்ககூடிய ஏழை மக்களை காப்பாற்ற வேண்டுமென அவன் எண்ணினான். மேலும், அவர்களது தகவல்கள் மோசடியான செயற்பாடுகளான, அடையாளத் திருட்டு மற்றும் ATM அட்டை நகலெடுத்தல் போன்றவற்றிற்கு தவறாக பயன்படுத்தக்கூடும் என்னும் நிதர்சனத்தை சுனித் உணர்ந்தான். அதன் விளைவாக அவன் குறித்த இணைப்பையும் (Links) திரைப்பிடிப்புக்களையும் (Screenshots) ஹிதாவதி (Hithawathi) உதவி தளத்தில் இணைத்து இந்த ஊழலைப் பற்றி தெரியப்படுத்தினான். முதலில் ஹிதாவதியானது (Hithawathi) இப்பதிவு தொடர்பில் முகநூலிடம் முறைபாடிட்டதுடன் அவனின் வேண்டுகோளிற்கிணங்க இவ்வகையான ஊழல் செயல்களிலிருந்து சமூகத்தை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதாகவும் உத்தரவாதமளித்தது. சுனேத் தன் கதையை வெளியிட்டு அதன் தேவையை உணர்த்தியமைக்காக ஹிதாவதிக்கு (Hithawathi) நன்றி தெரிவித்தான். மேலும் இவ்விடயத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டுவந்ததை இட்டு ஹிதாவதி (Hithawathi) தன் பாராட்டுக்களை அவனுக்கு தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:
- இவ்வாறான ஏமாற்று பதிவுகளினுடாக தங்கள் சுய விபரங்களை வழங்க வேண்டாம். (பண வைப்பிடுவதற்கு வங்கி அட்டையில் இருபக்கங்களினதும் புகைப்படங்கள் அவசியமற்றது.)
- இவ்வாறான பதிவுகளை பகிர்வதை தவிருங்கள்.
- இவ்வாறான ஊழல்களை முறையிடுங்கள்: தேவையெனில்! ஹிதாவதியை (Hithawathi) உதவிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.