கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.
தனது உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் சவினு தனக்கான ஒரு தொழிலைத் தேடிக்கொண்டிருந்தார். அவர் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் அவர் விண்ணப்பித்திருந்த வேலையொன்றிலிருந்து வாட்ஸ்ஆப் ஊடாக ஒரு செய்தி வந்தது.
இதனால் மிகுந்த உற்சாகமடைந்த சவினு அவர்களிடம் மேலதிக தகவல்களைக் வினவினார். அவருக்கு நிகழ்நிழையூடாக நேர்முக பரீட்சையொன்றுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் சவினு அடுத்த நாளே பணியைத் துவங்க வேண்டும் என்றும் ஒரு மாதம் கழிந்ததன் பின்னரே நியமனக் கடிதம் தரப்படும் என்றும் அவர்களால் கூறப்பட்டது.
சவினு மகிழ்ச்சியடைந்ததுடன், அவர்களுடன் பணியாற்றவும் ஒப்புக்கொண்டார். சில வாரங்களுக்குப் பிறகு, சவினுவுக்கு அவரது வங்கியிலிருந்து அழைப்பு வந்தது, அவருடைய சேமிப்புக் கணக்கில் தலா 5000/- ரூபாய் படி பல பேர் வைப்புச் செய்து வருவதாக சொன்னார்கள்.
சவினு இதைப் பற்றி யோசித்து, அந்த புதிய நிறுவனத்திடம் மாத்திரமே தான் தனது வங்கிக் கணக்கு விபரங்களை பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தார், எனவே அவர் இதைப் பற்றி நிறுவனத்திடம் கேட்டார்.
நிறுவன அதிகாரிகள் சவினுவை அவரது தொலைபேசியில் குறிப்பிட்ட ஒரு செயலியை (App) நிறுவி, அவரது கணக்கில் உள்ள பணத்தை கிரிப்டோவாக மாற்றச் சொன்னார்கள். இதன் போது அவரது கணக்கில் 11 மில்லியன் ரூபாய் பணம் இருந்தது, நிறுவனம் அறிவுறுத்தியபடியே சவினு செய்தார்.
மறுநாள் சவினுவை எந்த வேலைக்காகவும் நிறுவனத்திலிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. மேலும் அவர் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு சவினு தனது சம்பளத்தின் மீதி தரப்பட இருப்பதால் மீண்டும் அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றார். இருப்பினும், அவரால் குறித்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
சவினு கடுமையாகத் தொலைந்துபோன நிலையில் ஹிதவதியை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டார். தனக்கு நடந்ததைக் கூறினார். ஹிதவதி சவினுவிடம் பண மோசடிகள் பற்றி விளக்கினார், சவினு தான் செய்த மோசடியை உணர்ந்தார். உரிய ஆதாரத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சமூக ஊடக புகார் பிரிவில் புகார் அளிக்குமாறும் ஹிதவதி மேலும் கூறினார்.
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- நீங்கள் பணியமர்த்தப்படும் நிறுவனம் குறித்து முழுமையான பின்னணி ஆய்வொன்றினை மேற்கொள்ளுங்கள்.
- வேலை மோசடிகளானது தற்காலத்தில் மிகவும் பிரபலமாகக் காணப்படுவதால் அவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
- மோசடிகளானது உங்களிடம் மிகவும் கவர்ச்சிகரமான முறையில் வந்து சேர்வதால், அவற்றைப் பற்றி இரண்டு மூன்று முறைகள் நன்றாக யோசியுங்கள்.
- சைபர் குற்றம் தொடர்பான புகார் இருந்தால், அதற்குரிய ஆதாரங்களுடன் (சரியான இணைப்பு, திரைக்காட்சிகள் (ஸ்கிரீன்ஷாட்) போன்றவை) தெளிவாகக் குறிப்பிட்டு, சிஐடியிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபால் ஊடாக “, பணிப்பாளர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரி மூலமாகவோ அல்லது dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.