கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 5, 2021
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
செல்வி நாணயக்கார 35 வயது நிரம்பிய திருமணமாகாதவராவர். இவர் தனியார் வங்கியில் முகாமையாளராக பணிபுரிகிறார். அவருக்கு ஒருநாள் தற்போது இலங்கை பல்கலைக்கழகமொன்றில் பணிபுரியும் ஆண் உளவியல் விரிவுரையாளரிடமிருந்து பேஸ்புக் மெசஞ்சர் மூலம் ஒரு செய்தி கிடைத்தது
” வணக்கம்…. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ,,,, நீங்கள் திருமணமாகாதவர் என்பது எனக்குத் தெரியும், கவலைப்பட வேண்டாம் நான் …………… என்பதால் உங்களுக்கு ஆலோசனை வழங்குவேன் . ”
இந்த நபரைப் பற்றியோ அல்லது அவரது நிலையைப் பற்றியோ நாணயக்காரவுக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை, ஏனெனில் அவரது அரட்டைகள் ஒரு தொழில்முறை ஆலோசகரைப் போலவே இருந்தன.
மேற்கூறப்பட்ட ஆலோசகருக்கும் செல்வி நாணயக்காரருக்கும் இடையிலான உரையாடல் மிகவும் பலனளிக்கும் வகையில் நடந்தது, அவர்கள் இருவரும் நட்பாக மாறினர். செல்வி நாணயக்கார அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறப் பழகினார், ஏனெனில் அவர் விரிவுரை மற்றும் ஆலோசனைத் துறையில் நன்கு அனுபவம் பெற்றவர். அவரது ஆலோசனைகளில் நாணயக்கார நம்பிக்கை வைத்தார்.
அரட்டை இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், குறித்த விரிவுரையாளரின் அணுகுமுறை படிப்படியாக தடமறிந்து கொண்டிருப்பதை நாணயக்கார அறிந்து கொண்டார்
“விரிவுரையாளர்: ஹாய் அன்பே, இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அன்பே உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாமா… நீங்கள் என்னுடன் பகிரங்கமாக பேச முடிந்தால்… எங்களின் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். ”
“செல்வி நாணயக்கார: மன்னிக்கவும் மிஸ்டர்…! நான் இப்போது ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடன் பின்னர் பேசுகிறேன். ”
ஆம் நாணயக்காரவின் யூகம் முற்றிலும் சரியானது !!!!! விரிவுரையாளரின் அரட்டையின் வழி கொஞ்சம் கொஞ்சமாக மோசமான காமம் மிக்கதாக மாறியது. அவர் நாணயக்காரவின் பாலியல் வாழ்க்கை, உடல் வடிவம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பற்றி கேட்கத் தொடங்கினார். நாணயக்கார அந்த கேள்விகள் அனைத்தையும் ஒரு தந்திரமான முறையில் கையாண்டார், விரிவுரையாளருடன் தொடர்புகொள்வதையே முற்றாக நிறுத்தினார்.
பல்கலைக்கழக மாணவர்களை விரிவுரையாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக இந்த சம்பவத்தை உரிய அமைப்புக்கு தெரிவிக்க நாணயக்கார விரும்பினார். இணையத்தில் அத்தகைய இடத்தைத் தேடியபோது, அவள் ஹிதவதியைக் கண்டார்.
அவள் ஹிதவதியைத் தொடர்புகொண்டு கதையை விளக்கினார். என்ன செய்ய வேண்டும் என்பதை ஹிதவதி அவருக்கு அறிவுறுத்தி, சரியான தொடர்புக்கு அவரை வழிநடத்தியது.
முடிவில், அவர் மிகுந்த மகிழ்ச்சியை உணர்ந்ததுடன் சரியான சேவைகளை வழங்கி அவருக்கு வழிகாட்டியதற்காக ஹிதவதிக்கு நன்றி தெரிவித்தார்.
ஹிதவதி.…..இணையவெளியில் உங்கள் உயிர்த் தோழி
முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:
- இணையவெளியில் உங்களுடன் அரட்டை அடிக்கும் தெரியாதவர்களை நம்ப வேண்டாம்.
- ஒன்லைனில் நீங்கள் சந்திக்கும் நபர்களுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம்.