கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 12, 2021
ஆலன், 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் பி.வி.டி பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மாணவராக இருந்தார். அவருடன் கல்வி கற்கும் சமன் என்ற உள்நாட்டு நண்பருடன் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் உணவகத்தில் அவர்கள் பின்வரும் உரையாடலை மேற்கொண்டார்கள்.
ஆலன்: நாளை என் வீட்டு வாடகையை செலுத்த என் அம்மா எனக்கு கொஞ்சம் பணம் அனுப்ப போகிறார் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் ஒரு வெளிநாட்டு மாணவர் இலங்கையில் வங்கிக் கணக்கைத் திறப்பது ஒரு பாரிய நடைமுறையாகும் .
சமன்: ஒரு கணக்கைத் திறக்க எவ்வளவு நேரம் ஆகும்?
ஆலன்: எனக்கு எதுவும் தெரியாது, அவர்கள் நிறைய ஆவணங்களைக் கேட்கிறார்கள்.
உங்கள் கணக்கிற்கு அனுப்பும்படி நான் அம்மாவிடம் கேட்டால் உங்களால் அந்தப் பணத்தை எடுக்க முடியுமா?
சமன்: எந்த பிரச்சனையும் இல்லை. வங்கி கணக்கு விவரங்களை உங்களுக்கு அனுப்புகிறேன் . நீங்கள் என்னுடன் ஏடிஎம்-க்கு வரலாம், பின்னர் நான் அதை உங்களுக்கு அதனை எடுத்து தருகிறேன்
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆலன் அதே கதையைச் சொல்லி சமனிடம் வந்தான், சமனின் பதில் ,
சமன்:சகோதரர் , எனது வேலையில் நான் பிஸியாக இருக்கிறேன். தயவுசெய்து ஏடிஎம்மில் சென்று அதைப் பெற முடியுமா? நான் உங்களுக்கு எனது இரகசிய இலக்கத்தினை தருகிறேன்.
இந்த செயற்பாடு சுமார் ஆறு மாதங்களுக்கு நம்பகரமான முறையில் தொடர்ந்தது, திடீரென சமன் வெளிநாட்டு வங்கிகளின் ஈடுபாட்டுடன் உழைத்த சட்டவிரோதமாக பணத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி இன்டர்போல் அவரை கைது செய்தது
முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்: உங்கள் வங்கிக் கணக்கை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
உங்கள் கணக்கைப் பயன்படுத்தி யாரும் பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்காதீர்கள்