கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 18, 2025
இங்கே குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் யாவும் கற்பனையானவை ஆகும்
சஹான் தான் பயன்படுத்திய சில பொருட்களை நல்ல நிலையில் முகப்புத்தகத்தில் உள்ள சந்தைப்பகுதியில் (marketplace) விற்க விரும்பினார், அதனால் அவற்றைப் பற்றி அதில் பதிவிட்டார். கொள்வனவாளர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டதை அடுத்து, பொருட்களுக்குரிய பணம் தனது கணக்கில் வைப்புச் செய்யப்பட்டவுடன், பொருட்களை விநியோகிப்பதாக சஹான் அவரிடம் கூறினார்.
சஹான் விஜயவர்த்தன
கணக்கு # xxxxxxxxxxxxxx
ABC வங்கி, கிருளப்பனை கிளை
கொள்வனவாளர்:– நாங்கள் பணத்தை வைப்புச் செய்து விட்டு உங்களுக்கு அறியத்தருகிறோம்.
சிறிது நேரம் கழிந்த பின்னரும், சஹான் பணவைப்பு எதனையும் பெறவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு நீண்ட வார இறுதி விடுமுறை நெருங்கிவிட்டதால், சஹான் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிட்டான். அந்த சந்தர்ப்பத்தில் அவரை முன்பு தொடர்பு கொண்ட அதே கொள்வனவாளரிடம் இருந்து அவருக்கு ஒரு தகவல் வந்தது. அது வெள்ளிக்கிழமை இரவு, சஹான் உறங்கச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.
சஹானுக்கு வங்கியில் இருந்து பணவைப்புத் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. வாங்குபவர் அனுப்பிய வைப்புச்சீட்டை அவர் சரிபார்த்தார், ஆனால் வங்கியில் இருந்து எந்தச் செய்தியும் வராததால் குழப்பமடைந்தார். சஹான் ஹிதாவதி முகப்புத்தகப் பக்கத்தைப் பின்தொடர்வதால், நிகழ்நிலையில் நிதி மோசடி பற்றி அடிக்கடி கேள்விப்படுவதால், அவர் பார்த்த உதவிக்குறிப்புகளின் அடிப்படையில் வங்கியின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடிவு செய்தார். அவரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்பதை வங்கி முகவர் உறுதி செய்தார்.
பின்னர் அந்த நபர் மோசடி செய்பவர் என்பதை உணர்ந்த சஹான் கொள்வனவாளருக்கு தகவல் தெரிவித்தார்.
கொள்வனவாளர்:– நீண்ட வார இறுதி என்பதால் இப்போது தாமதமாகி இருக்கலாம். ஆனால் நீங்கள் வைப்புச் சீட்டை பார்க்க முடி யுமல்லவா?
முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:
- குறுஞ்செய்தி சேவையினைப் பெறுவதற்கு நீங்கள் குழுசேர்ந்திருந்தால், வங்கியில் ஏதேனும் ஒரு தொழில்நுட்பச் சிக்கல் இருந்தால் தவிர, உங்கள் கணக்கில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் (வரவுகள் மற்றும் பற்றுகள்) பற்றிய அறிவிப்புகளை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள். அத்தகைய பிரச்சனை இருந்தால், வங்கி முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கலாம்.
- மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி வங்கிச் சீட்டுகளைத் திருத்தலாம், எனவே ஏதேனும் சந்தேகம் இருந்தால், சரிபார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட வங்கியின் அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவும்.
- சமீபத்திய மோசடிகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு Hithawathi Facebook பக்கத்தைப் பின்தொடரவும்.
- நீங்கள் தொடர்புடைய சமூக ஊடக செயலியின் மூலம் இதுபோன்ற மோசடியான சமூக ஊடகக்கணக்குகள் பற்றிப் புகாரளிக்கலாம்.
- இணையம் வழியிலான-குற்றவியல் முறைப்பாடுகள் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை CID யிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், dir.ccid@police.gov.lk / report@cid.police.gov.lk என்ற முகவரியிலும் மின்னஞ்சல் அனுப்ப உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.