கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 15, 2021
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.
சிவா அம்பாறையில் வசிக்கும் ஒரு தமிழ் பையன் . அவர் ஒரு இயற்கை காதலன் என்பதுடன் அவரின் பொழுதுபோக்கு புகைப்படம் எடுத்தலாகும் . முதன் முதலாக 2012 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றபோது சிவா தனது தாயிடமிருந்து அக்காலப்பகுதியில் வெளிவந்த புதிய வகை ஸ்மார்ட் போனை ஒன்றைப் பெற்றுக் கொண்டார். அதையிட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். சிவா ஒரு தொழில்நுட்பத்துடன் தொடர்புபட்ட பையன் அல்ல, தொலைபேசியை எவ்வாறு இயக்குவது என்று அவருக்கு தெரியவில்லை. எனவே அதை எடுத்துக் கொண்டு தனது நண்பர்கள் குழுவை சந்திக்க சென்றார். அதன்போது அவர்கள் எவ்வாறு அதை இயங்குவது என்று அவருக்கு சொல்லிக் கொடுத்தார்கள், மேலும் சகல பொதுவான பயன்பாடுகளையும் அவரது தொலைபேசியில் அவர்கள் நிறுவினர். மேலும் அவருக்காக ஒரு பேஸ் புக் கணக்கை உருவாக்கி, பேஸ்புக் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் அவருக்கு தெரியப்படுத்தினார்கள். இந்த புதிய விஷயங்களை ஆராய்வதற்கு சிவா மிகவும் விருப்பம் கொண்டிருந்ததுடன் இணையம் மூலம் அனுபவங்கள், தகவல்கள் மற்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதனூடாக தனது நண்பர்களுடன் தொடர்பு கொள்ள அவர் அதை பயன்படுத்தினார். மேலும் அவர் மொபைல் போனைப் பயன்படுத்தி புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தார். காலம் செல்லச்செல்ல சிவா தனது புதிய டிஜிட்டல் சாதனத்தைப் பற்றி நன்கு அறிந்தது கொண்டதுடன் அவரது பேஸ்புக் கணக்கில் ஏராளமான நண்பர்கள் இணைந்திருந்தார்கள். அதிலுள்ள இணையம் மூலம் அறிமுகமாகிய சில நண்பர்களை அவருக்குத் தெரியாது.
ஒரு நாள் அவர் இந்தியரை போலவுள்ள ஒருவரிடமிருந்து பேஸ்புக் நட்புக் கோரிக்கையைப் பெற்றார். சிவா அந்தக் கோரிக்கையை ஏற்று புதிய இந்திய நண்பருடன் அரட்டையடிக்கப் பழகினார், பின்னர் தனது புதிய நண்பர் ஒரு பெண் என்பதை அறிந்து கொண்டார். சிவா அவருடனான அரட்டையை நிறுத்த விரும்பினார், ஆனால் “புதிய நண்பர்” அவரது புகைப்படங்களைப் பாராட்டுவதோடு வாழ்க்கையில் புகைப்பட துறையில் அவரது அவரை ஊக்குவிக்கும் ஒரு நேர்மையான நண்பராகக் காணப்பட்டார் .
அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டதுடன் சிவா ஒரு புகைப்படக் கலைஞராக பணியாற்ற ஆரம்பித்ததுடன் அவரது கமரா புதிய இந்திய நண்பரின் உதவியுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. சிவா தனது தனிப்பட்ட விவரங்கள், குடும்பம் மற்றும் அவரது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருவரினதும் நட்பு காணப்பட்டது.
திடிரென இருவருக்கும் இடையிலான உறவு பிழையான ஒன்றாக மாறும் சூழ்நிலை உருவாகியது. இந்திய நண்பரிடமிருந்து வந்த வீடியோ அழைப்பு சிவாவை அவரது உடலை நிர்வாணமாக காட்டும் படி கோரியது. சிவா அவ்வாறு செய்யாவிடின் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக அவர் மற்றும் அவரது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பரப்பப்படும் என அவர் அச்சுறுத்தப்பட்டார். அப்பாவி சிவாவுக்கு வேறுவழி எதுவும் இல்லாத நிலையில் அவள் கேட்டதுக்கு ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தை வேறு யாரிடமும் சொல்ல முடியாததால் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவர் தனக்குள்ளே இதனை வைத்து கஷ்டப்பட்டார். “புதிய இந்திய நண்பர்” அவரை பிளாக்மெயில் செய்யும்போது, ஒன்லைன் மூலமாக பல முறை பாலியல் துன்புறுத்தலுக்கு சிவா ஆளானபோது இது அவருக்கு மன அழுத்தத்தை உருவாக்கியது. அந்த நேரம் சிவாவுக்கு தனது குடும்பத்தை பாதுகாப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை . சிவாவின் மனது மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் தனது கவனத்தை இழந்தார், அவரது நெருங்கிய நண்பர்களுடனான தொடர்புகளையும் இழந்தார்.
ஒரு நாள் காலை அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்பினார்.
ஆயினும்….
அவரது விதி அவ்வளவு மோசமாக அமைந்திருக்க வில்லை !
ஒரு திடீர் எண்ணம் அவரது நினைவுக்கு வந்தது, அவர் இணையத்தில் உதவியைத் தேட ஆரம்பித்தார்.
அதன்போது ஹிதவதி பற்றிய இணைப்பை அவர் கண்டுபிடித்தார். ஆம் தவறான ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அமைந்த கடைசி வாய்ப்பை சிவா புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார்.
சிவா ஹிதவதிக்கு அழைப்பினை மேற்கொண்டார். அவரது கதையைச் சொல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆனது. ஹிதவதி உதவி நிலையத்தை சேர்ந்த முகவர் அவரது கதையை மிகவும் பொறுமையாகக் கேட்டு அவருக்கு மிக தெளிவாக அறிவுறுத்தினார். அதிர்ஷ்டவசமாக, சிவா விடயத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய பையனாக இருந்தார் , உண்மையில் அவர் தனது கதையை ஒருவரிடம் சொல்லி தான் செய்த காரியங்கள் சரியானவையா அல்லது தவறானவையா என்பதையே உறுதிப்படுத்த விரும்பி இருந்தார். ஹிதவதியின் உதவியுடன் நேர்மறையான எண்ணங்களைப் பெற்றுக்கொண்டு தனது மனதை மிகவும் வலிமையாகக் கட்டமைத்து, ஆரம்பத்தில் இருந்த நபராக சிவா மாறினார்.
ஒரு வாரம் கழித்து, ஹிதவதி உதவி நிலையத்துக்கு ஒரு அழைப்பு வந்தது – “ஹலோ ஹிதவதி! , நான் சிவா, உங்களது எல்லா ஆலோசனைகளுக்கும் என்னை பழைய சிவாவாக மாற்றியதற்கும் மிக்க நன்றி.! “
முன்னெச்சரிக்கை உதவிக்குறிப்புகள்:
- அறியப்படாத நட்புக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
- அவர்களின் அரட்டையின் நோக்கம் எங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்பதால் நீங்கள் ஒன்லைனில் அரட்டை அடிப்பவர்களுடன் கவனமாக இருங்கள். (வீணாக நேரம் கடத்துதல் , மோசடி போன்றவை)