கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 25, 2024
இங்கு குறிப்பிடப்படும் பெயர்கள் மற்றும் இடங்கள் அனைத்தும் கற்பனைகளாகும்.
குசல் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவனது நண்பி நதுனி தொலைபேசியில் அழைத்து அவனுக்கு இன்பமும் வெற்றிகளும் உண்டாகட்டும் என வாழ்த்துத் தெரிவித்தாள். அவ்வாறு தனக்கு தெரிந்த நீண்டகால நண்பனுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவள் இவ்வாறு வினவினாள்?,
ஓய், நீ அன்றிரவு குடித்திருந்தாயா?
அவள் எந்த இரவைப் பற்றி கதைக்கிறாள் என்பது பற்றி அவனுக்கு நினைவில்லை. அவள் ஏசும் வரை:
அன்றிரவு நீ காதல் மொழியில் நீ நிலாவில் இருப்பதை போன்று அளவளாவிக் கொண்டிருந்தாய். நீ உன் நிதாதனத்தை இழந்து விட்டாய் என்று நான் நினைத்தேன்.
அவள் கூறியதை
வைத்து, குசலின் புகைப்படத்தை தோற்றுருவமாகக் கொண்டு அவன் வைபரில் பாசாங்கு செய்து அவனது நண்பர்களை இணைத்துள்ளான் என்பதை அவன் புரிந்துக் கொண்டான். அவனுக்கு தெரிந்த நபரொருவரினாலே மேற்குறித்த விடயம் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதோடு, அவனை பற்றி அவனது நட்பு வட்டாரத்தில் பிழையான புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் தான் இவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். எவ்வாறெனினும், குசல் வைபர் கணக்கொன்றை கொண்டிராத போது எவ்வாறு அந்த சூழ்நிலைக்கு எதிர்விளைவைக் காட்டுவதென தெரியாது சிறிது குழப்பத்துடனும் உதவியற்றவனாகவும் காணப்பட்டான்.
நதுனி உதவிக்கு ஹிதாவதியை (Hithawathi) அணுகுமாறு அவனை வழிநடாத்தினாள். பின்னர் குசல் ஹிதாவதியின் (Hithawathi) உதவிமையத்தை அணுகி நடந்த சம்பவத்தை விவரித்தான். ஹிதாவதியானது, (Hithawathi) குறித்த ஆள் மாறாட்டத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென அவனை வழிநடாத்தியது. அதன்படி, அவன் குசல் சுலபமாக வைபருக்கு அறிக்கையிடமுடியும் அல்லது காவல்துறைக்கு புகார் வழங்குவதன் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் தெளிவடைந்தான். இறுதியாக, அவன் தான் முன்நோக்கிச் செல்வதற்கான நம்பிக்கையை வழங்கியமைக்காக ஹிதாவதிக்கு (Hithawathi) நன்றி தெரிவித்தான்.
முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:
- இவ்வாறான சூழ்நிலைகள் வரும்போது குழப்பம் அடைய வேண்டாம். இன்றைய காலத்தில் இவ்வாறான அநீதியான சுழ்நிலைகள் எல்லா செயலிகளிலும் (App) நடைபெறுகின்றது. மேலும், அதனை முறைபாடு செய்வதற்கும் உங்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால், ஹிதாவதியின் (Hithawathi) உதவியை பெறுவதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் உரிய பதிலை கண்டறிந்து கொள்ளவும்.
- யாரேனுமொருவர் வைபரில் உங்களைப் போன்று உருவகப்படுத்தி (பாசங்கு செய்தல்) செயற்பட்டால், https://www.hithawathi.lk/help-centre/social-media/viber/reporting-on-viber/ இல் காட்டப்பட்டுள்ள படிமுறைகளை பயன்படுத்தி ஹிதாவதிக்கு (Hithawathi) முறைப்பாடு செய்ய முடியும். தேவைப்படின், உதவிக்கு ஹிதாவதியை (Hithawathi) தொடர்பு கொள்ளவும்.
- இதன் பின்புலத்தில் இருக்கும் நபரை உண்மையிலே கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என எண்ணினால் (சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில்) நீங்களாகவே காவல் நிலையத்திற்கு சென்று ஒரு புகார் அல்லது இணையவெளி மூலமாக telligp.police.lk இல் காவல்துறைப் பதிவை மேற்கொள்ளவும். (சைபர்கிரைம் எனும் வகையை தெரிவு செய்து அதில் உங்கள் ஆதாரங்களை இணைக்கவும்.)