கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 8, 2021

பெற்றோரின் கட்டுப்பாடுகள் என்றால் என்ன?

 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த உதவும் அமைப்புகளின் தொகுப்பாக பெற்றோரின் கட்டுப்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் தனியுரிமை அமைப்புகளை பாதுகாப்பானதாக்குவது ஒன்லைன் மூலம் அனுபவிக்கும் விடயங்களில் இருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க பெற்றோர்களுக்கு வழிவகுக்கிறது.

பெற்றோர்களுக்கு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துவது ஏன் அவசியம்

  • இது உங்கள் பிள்ளைகளின் சாதனங்கள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக சுயவிவரங்கள், செய்திப் பரிமாற்றங்கள் ஏனைய மொபைல் செயல்பாடுகளை கண்காணிக்க உதவுகிறது.
  • ஒன்லைன் ஆபாச படங்கள், செக்ஸ்டிங், தானாகவே தீங்கினை ஏற்படுத்தல், அடிப்படைவாதியாக்குதல் போன்ற பிரச்சினைகளுக்கு பிள்ளைகள் உள்ளாகக்கூடிய அபாயத்தை இது குறைக்கிறது.
  • பிள்ளைகளின் விளையாட்டுகளின் போது சில அம்சங்களைத் தடுக்க இது உங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக, கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு, அந்நியர்களுடன் பேசுவது.
  • திரை நேரத்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக மட்டுப்படுத்தலாம்.
  • தேடுபொறிகளில் பிள்ளைகள் தேடும்போது அவர்களுக்கு பொருத்தமில்லாத வெளிப்படையான உள்ளடக்கத்தைத் தடுப்பதன் மூலம் வடிகட்டலாம்.
    உதாரணம் கூகிளின் பாதுகாப்பான தேடல்.

YouTube இல் தடைசெய்யப்பட்ட பயன்முறை


  • பெற்றோரின் கட்டுப்பாடுகள் இணைய பாதுகாப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் இணைய பண்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உறுதி செய்கின்றன. இவை ஆபத்தான ஒன்லைன் நடத்தை, அடையாள திருட்டு, இணையம் தொடர்பான சட்டங்கள் போன்ற விடயங்களை பேசுகின்றன.
  • எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் கட்டத்தில் அமைப்புக்களால் பிள்ளையின் நற்பெயர் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது ஒன்லைனில் பிள்ளையின் நன்மதிப்பினைப் பாதுகாக்க முடியும்.
  • பயனுள்ள தரவைப் பாதுகாப்பாக காப்புப் பிரதி எடுக்கலாம் (எ.கா., திட்டங்கள், டிஜிட்டல் நினைவுகள்)
  • பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப பெற்றோரின் கட்டுப்பாடுகளைத் தனிப்பயனாக்கலாம்.
  • பிள்ளைகளின் இருப்பிடத்தையும் நீங்கள் கண்காணிக்கலாம்.

மேற்குறிப்பட்ட நன்மைகளை எந்த பெற்றோராலும் மறுக்க முடியாது. எனவே, வளங்களைப் பற்றி அறிந்து அவற்றைக் கையாண்டு உங்கள் பிள்ளையைப் பாதுகாப்பது அவசியம்.

பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டி

அடிக்கடி இணைய குற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய உலகில், அப்ஸ்டோர் / பிளேஸ்டோரிலிருந்து கூட பதிவிறக்கம் செய்யக்கூடிய உரிய செயலிகளைப் பயன்படுத்தி பெற்றோரின் கட்டுப்பாடுகளை அமைப்பது மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில், உங்கள் பிள்ளைகளுடன் ஆரம்பத்தில் இருந்தும் அடிக்கடியும் பேசிக் கொள்வது, . சரியான நேரத்தைத் தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதில் அனுபவத்தின் தாக்கத்தை சாதகமாக திறந்த மனதுடன் பகிருதல் முதலியவற்றை தீர்மானிக்க உங்களுக்கு உதவும் சில உதவிக்குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

இணைய சைபர் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள்

  • மென்பொருள் மற்றும் செயலியின் புதுப்பிப்புகள்: அவற்றைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது மிக முக்கியமானது.
  • கடவுச்சொற்களைப் பாதுகாத்தல்: கடவுச்சொல் முகாமைத்துவ மென்பொருள் தீர்வுகளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.
  • வைரஸ் தடுப்பு மென்பொருள்: அணுகல் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள மென்பொருள் , விரிவான வைரஸ் எதிர்ப்பு, மின்னஞ்சல் ஸ்கிரீனிங்(E-mail Screening), தீச்சுவர் (Firewall), தீம்பொருள் எதிர்ப்பு(Anti-Malware), எதிர்ப்பு-ஸ்பைவேர்(Anti –Spyware), எதிர்ப்பு கீலொக்கர்கள் (Anti-Keyloggers), குறுக்கீடுகளை எதிர்க்கும் (Anti-Tamper) அம்சங்கள், ஊடுருவல் கண்டறிதல் / தடுப்பு (Intrusion Detection / Prevention), பாதுகாப்பு தகவல் முகாமைத்துவம் , ரன்சம்வேர் தடுப்பு (Ransomeware Prevention) மற்றும் அழிவுத் தடுப்பு (Anti-Subversion) என்பன பரிந்துரைக்கப்படுகிறன.
  • சந்தேகத்திற்கிடமான தொடுப்புகள், இணைப்புகள் மற்றும் பதிவிறக்கங்கள்: தீம்பொருள் தொற்று அல்லது ஹேக்கிங் அவற்றின் மூலமாக நிகழ்கிறது.
  • பிஷிங் மோசடிகள்: அவற்றை கையாள்வதில் ஏற்படும் ஆபத்து குறித்து பிள்ளைகள் எச்சரிக்கப்பட வேண்டும்.
  • தரவு மற்றும் இருப்பிட கண்காணிப்பு: ஜி.பி.எஸ் கண்காணிப்பு அல்லது இருப்பிட அம்சத்தை இயக்க முடியும்.

ஒன்லைன் பரிவர்த்தனைகளுக்கான வலையமைப்பு பாதுகாப்பு

  •  பல் காரணி அங்கீகாரம்: இதை செயற்படுத்தப்படுவதன் மூலம் நீங்கள் மட்டுமே உங்கள் கணக்குகளில் உள்நுழைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது.
  • கடன் அட்டை விபரங்களை சேமித்தல்: அவற்றை ஒன்லைனில் சேமிப்பதில் அபாயம் உள்ளது.
  • பாதுகாப்பான ஐபி முகவரிகள்: குறிப்பாக இலத்திரனியல் வணிக (ஒன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெறும்) வலைத்தளங்களில் https: // முகவரிகளுடன் மாத்திரமே தொடரவும்.

தொடரோடி(Streaming) ஒன்லைன் கேளிக்கைக்கான பாதுகாப்பு: விளையாட்டுகள், வீடியோக்கள், இசை

  •  தொடரோடி(Streaming) வீடியோக்கள் மற்றும் ஒன்லைன் இசை: கடனட்டை அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கோரும் பாப்-அப் விளம்பரங்களில் விழிப்புடன் இருங்கள்.
  •  செருகுநிரல்கள் மற்றும் செயலி கொள்முதல்கள் : நிறுவலுக்கு முன் அவற்றின் நியாயத்தன்மையை சரிபார்க்கவும்.
  • சமூக ஊடகம் : துன்புறுத்தல் நடைபெறும் இந்த தளங்களில் ஒரு கண் வைத்திருங்கள்.
  •  வீடியோ அரட்டை மற்றும் தனிப்பட்ட வீடியோ தொடரோடி(Streaming): நீங்கள் சில சேவைகளை கட்டுப்படுத்த முடிவதுடன் பிள்ளைகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தஅவர்கள் ஒன்லைனில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் கூட காணமுடியும் . (உதாரணமாக அவர்களின் கணக்கு அமைப்புகளை தனிப்பட்டதாக ஆக்குங்கள், அவர்கள் யாருடன் அரட்டை அடிப்பார்கள், அவர்கள் எதனை இடுகையிடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும், தகவல் / அடையாள திருட்டின் தவறான பயன்பாட்டின் காரணமாக ஏற்பட சாத்தியமான தீங்கு குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவும்.)

செய்தி: மின்னஞ்சல், உரைகள் மற்றும் உடனடி செய்திகள்

  • மின்னஞ்சல்: ஸ்பேம் மின்னஞ்சல்களில் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் ஃபிஷிங் மோசடிகள் இருக்கலாம்.
  • டெக்ஸ்டிங், செக்ஸ்டிங் மற்றும் மெசஞ்சர் சேவைகள்: இவை கொடுமைப்படுத்துதல், வெளிப்படையான உள்ளடக்கங்களை வெளிவிடுதல், பாதிக்கப்படக்கூடிய சாதனங்களுக்கு ஏற்றவாறாக இணைந்து போகுதல் என்பவற்றுக்கு இடமளிக்கின்றன. செக்ஸ்டிங் சில நேரங்களில் சிறுவர் பாலியலுக்கு வழிவகுக்கிறது, மேலும் இது தொடர்பாக காணப்படும் பெற்றோர் கட்டுப்பாடுகளுக்கு தொலைபேசி சேவை வழங்குநரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.

சைபர் துன்புறுத்தல்

  • உங்கள் பிள்ளை பலியாகக்கூடிய அறிகுறிகளை அடையாளம் காணுங்கள் : பெற்றோர் / கல்வியாளர்கள் / பிள்ளைகளை கவனிக்கும் யாராக இருப்பினும், ஒருபிள்ளை சாதனங்களை ஏற்க மறுக்கும், தூங்குவதில் / சாப்பிடுவதில் குறைபாடுகளை காட்டும் அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அறிகுறிகளை அடையாளம் காண முடியும்.
  • துன்புறுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் : குழு விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது பிரச்சினைக்குரியதல்ல என்பதையும் ஒன்லைனில் அல்லது வகுப்பில் விவாதங்கள் தேவையில்லை என்பதையும் சொல்லுங்கள். மேலும், கடவுச்சொற்களைப் பகிர்வது அல்லது சாதனங்களை கவனிக்காமல் விட்டுவிடுவது அவர்களின் கணக்குகளை பிறருக்கு ஹேக் செய்து தவறாகப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்குத் அறிவிக்குமாறு அல்லது பாடசாலை ஆசிரியர்கள் / உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு தயவுசெய்து அவர்களை அறிவுறுத்துங்கள் . இதேபோல், இந்த விஷயம் உங்கள் பிள்ளைக்கு தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தினால் நீங்கள் சட்ட ஆலோசனைக்கு செல்லலாம்.

மேற்கோள்கள் :
https://us.norton.com/internetsecurity-kids-safety-top-reasons-to-use-parental-controls.html
https://www.internetmatters.org/parental-controls/
https://www.security.org/resources/protecting-kids-online/
https://www.theguardian.com/technology/2014/aug/11/how-to-keep-kids-safe-online-children-advice