கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 24, 2021
போலியான அல்லது மோசடியான வலைத்தளம் என்பதனை தீர்மானிக்கக்கூடிய குறிப்பிடதக்க வழிகள்
- URLக்கு கூடுதல் கவனம் செலுத்துதல்
நீங்கள் ஒரு வலைத்தளத்தை பார்வையிடும் போதும் அல்லது லிங்க் ஒன்றை அழுத்தும் முன்னரும் URLஐ கவனிப்பதுடன் அது உண்மையான வலைத்தளமா? என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.சில ஏமாற்று தளங்களின் URLகள் உண்மையான தளங்களின் தோற்றம், தந்திரமான எழுத்துக்கள், துணை டொமைன்கள், சிறிய URLகள் மற்றும் SSL சான்றிதழ்கள் என்பவற்றின் பயன்பாட்டினால் உண்மையானவை மற்றும் பாதுகாப்பானவை என பாவனை செய்யும். - இணைப்பு பாதுகாப்பு சுட்டிகளை சரியார்க்கவும்
நீங்கள் ஒரு வலைத்தளத்தின் பாதுகாப்பை அதனுடன் வரும் நெறிமுறை என்ன என்பதனை சரிபார்ப்பதனூடாக தீர்மானிக்க முடியும். அதன் நெறிமுறை ‘https’ ஆகவிருப்பின், அது URL உடனுள்ள ‘http’ விட மிகவும் பாதுகாப்பானதாகும். நீங்கள் இலத்திரனியல் வணிக (நிகழ்நிலை பரிமாற்றங்கள் நிகழ்கின்ற) வலைத்தளங்களுடன் வியாபாரம் மேற்கொள்ளும் போது, மேலதிக பாதுகாப்பை கவனத்திற் கொள்ளல் மற்றும் முன்னுரிமை வழங்குதல் வேண்டும். அதனால், அங்கு ‘https’ என்பதனை காணவில்லையெனில், உங்களது சுயத் தகவல்கள் அல்லது கடனட்டையின் தகவல்களை தளத்திற்கு ஒருபோதும் வழங்க வேண்டாம்.பாதுகாப்பு சுட்டிகளுக்கிடையில், கீழே காட்டப்படும் Padlock குறிகாட்டி அல்லது EV பெயர் அடையாளக்குறி/ கிரீன் முகவரி தடுப்பு (Green address bar) என்பன இணைப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய பங்கை வகிக்கின்றன.
- சான்றிதழ் தகவல்களை பார்வையிடல்
முகவரி தடுப்பிலுள்ள padlock குறிகாட்டியை () அழுத்துவதன் மூலம் உங்களால் சான்றிதழ் தகவல்களை பார்வையிட முடியும்.சான்றிதழிலுள்ள தகவல்களிலுள்ள விடயம் (Subject in the Details) எனும் டெப்பை அழுத்தும் போது, உங்களால் குறித்த நிறுவனத்தின் வலைத்தளம் எவ்வகையான SSL சான்றிதழைக் (DV, OV or EV) கொண்டுள்ளது என்பதனை உங்களால் அறிந்துக் கொள்ள முடியும்.அதுவொரு DV சான்றிதழாகவிருப்பின தகவல்கள், டொமைன் பெயரை காட்சிப்படுத்தும். இலத்திரனியல் வணிக வலைத்தளமொன்றைக் கொண்டுள்ள நிறுவனமொன்றிற்கு பாதுகாப்பான நிதியியல் அறிமுக ஆவணங்களுக்கு OV அல்லது EV சான்றிதழ் கட்டாயம் காணப்படுதல் வேண்டும். OV மற்றும் EV என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டை கண்டறிவது மிகவும் இலகுவானதாகும். SSL சான்றிதழ்களுடன் கூடிய OV ஆனது அரசு மற்றும் டொமைன் பெயரிற்கு அப்பால் நாட்டின் பெயரையும் காட்டும். EV ஆனது அதற்கு ஒரு படி மேலாக பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் வீதிப் பெயரையும் சுட்டிக்காட்டும்.SSL உடன் கூடிய EV சான்றிதழைக் கொண்ட நிறுவனங்களுக்கான உதாரணங்கள் வருமாறு, உதாரணங்கள் வருமாறு, - நம்பகமான முத்திரைகளை நாடல்
அதற்கு மேலதிகமாக வலைத்தளத்தின் சட்டப்பூர்வமானத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நீங்கள் இணையத்தில் காணப்படும் நம்பகமான குறிகளை பரிசோதிக்க முடியும்.
அவ்வாறான நம்பகமான முத்திரைகள் நிறுவனத்தின் வலைத்தளத்திலுள்ள SSL சான்றிதழ் சிறந்தமுறையில் உள்ளதென்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதோடு மல்வெயார் (malware) மற்றும் ஏனைய பாதிப்புகள் குறித்து விழிப்புடன் இருங்கள். அவ்வாறான குறிகள் பொதுவாக முதற்பக்கங்கள் (homepages), நுழைவுப்பக்கங்கள் (login pages) மற்றும் சரிபார்ப்பு பக்கங்களிலும் (checkout pages) தோற்றமளிக்கும். - கூகில்னது பாதுகாப்பான இணைய உலாவலுக்கான வெளிப்படைத்தன்மை அறிக்கையை (Google Safe Browsing Transparency Report) நாடுதல்
வலைத்தளம் பாதுகாப்பானதா? என்பதனை தீர்மானிப்பதற்கு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு URL ஐ பிரதி செய்து அதனை கீழ் காட்டப்படடவாறு The Google Safe Browsing Transparency Report என்பதில் paste செய்ய முடியும் - சுருக்கப்பட்ட இணைப்புகளை விரிவாக்கவும். சில நேரங்களில் இடுகைகளில் பொருந்துவதற்காக அவற்றில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கும் என்பதால் அதற்காக இணைப்புகளை சுருக்கும் சேவைகள் உள்ளன. உதாரணமாக டுவீட்ஸ். இருப்பினும், ஒரு இணைய முகவரி (URL ) மிகவும் குறுகியதாக இருக்கும்போது,அதனது உண்மையான இலக்கை உணருவது சற்று சிக்கலானது.எனவே எப்போதும் Check Short URL முதலிய சேவையைப் பயன்படுத்தி சுருக்கப்பட்ட இணைப்புகளை விரிவாக்க உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது
- இணையமுகவரி(URL) விசித்திரமான எழுத்துக்களைக் கொண்டிருக்கலாம். சிறப்பு எழுத்துக்கள் கொண்ட URL குறியாக்கத்தைப் பயன்படுத்தி, ஹக்கர்கள் தீம்பொருள் அல்லது ஃபிஷிங் தளங்களின் உண்மையான இலக்குகளை மறைக்க முயற்சி செய்கிறார்கள். உங்களிடம் URL டிகோடிங் கருவி இல்லையென்றால் அத்தகைய இணையமுகவரிகளின் உண்மையான இலக்கை அடையாளம் காண முடியாது. உதாரணமாக, இணைப்பில் % குறியீடுகளைக் கண்டால், அவதானம் .
- வேண்டப்படாத மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளின் மூலம் பெறப்பட்ட இணைப்புகளில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பொப்-அப்கள் கொண்டுள்ள பஃபிஷிங் இணைப்புகள் பின்வருவனவற்றை உங்களிடம் கேட்பதன் மூலமாக உங்கள் கவனத்தை ஈர்க்கலாம்‘இந்த உள்நுழைவை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?’‘உடனடி நடவடிக்கை தேவைப்படுகின்றது’ இது தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைத்தாலும் கூட , புத்திசாலித்தனமாக சரிவர வாசிக்காமல் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய ஒருபோதும் அவசரப்படாதீர்கள். வெறுமனே அவர்களை நம்பாதீர்கள், ஏனெனில் அவற்றில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் இருக்கலாம்
- இணைப்பு ஸ்கேனர் (link scanner) மூலம் இணைப்பை ஸ்கேன் செய்யுங்கள். ஸ்கேனிங் கருவிகள், கிளிக் செய்வதற்கு முன் சந்தேகத்திற்கிடமான இணைப்பை ஆய்வு செய்ய உதவுகிறது. பாதுகாப்புச் சரிபார்ப்பு சேவைகளில், நோர்டன் சேஃப் வெப் (Norton Safe Web), யூஆர்எல் வொயிட் (URL Void) மற்றும் ஸ்கேன் யூஆர்எல் (Scan URL) ஆகியவை பெரும்பாலும் யூஆர்எல்லின் விபர அறிக்கையை வழங்குகின்றன.
- உங்கள் தீம்பொருள் எதிர்ப்பு (Anti-malware) மென்பொருளில் நிகழ்நேர ஸ்கேனிங் (real-time) அல்லது செயற்படும் ஸ்கேனிங் (Active) விருப்பத்தை இயக்கவும். இறுதியாக, உங்கள் தனிப்பட்ட கணனி / கையடக்கத் தொலைபேசியில் வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவி, அதை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது எப்போதும் சிறந்தது. அது தவிர இணையத்தில் உலாவ நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் இரண்டாவது தெரிவாக தீம்பொருள் ஸ்கேனரைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட விடயங்கள் ஒரு போலி அல்லது மோசடி வலைத்தளத்தை அடையாளம் கண்தறிந்து தீர்மானிப்பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேற்கோள்: https://www.thesslstore.com/blog/5-ways-to-determine-if-a-website-is-fake-fraudulent-or-a-scam/https://www.lifewire.com/how-to-test-a-suspicious-link-without-clicking-it-2487171