கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 20, 2022


ஸ்டிகனோகிராபி (Steganography) என்றால் என்ன?

ஸ்டிகனோகிராபி என்பது ஒரு பழைய எண்ணக்கருவாகும், இது “ஒரு இரகசிய செய்தியைச் சாதாரண தோற்றமுடைய கோப்பொன்றில் மறைத்தல்” எனப் பொருள்படுகின்றது,மேலும் இதனூடாக எந்தவிதமான சந்தேகமும் ஏற்படுத்தப்பட மாட்டாது. ஸ்டிகனோகிராபி என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான “ஸ்டிகனோஸ்” உருவானது; அதாவது மறைக்கப்பட்ட / பாதுகாக்கப்பட்ட மற்றும் “கிராபின்” எனும் எழுதுவதை குறிக்கிறது.

ஸ்டிகானோகிராபி  கிரிப்டோகிராஃபியிலிருந்து  எவ்வாறு வேறுபடுகிறது?


கிரிப்டோகிராஃபியில், இரகசிய செய்தி இருப்பதையும், அதன் உள்ளடக்கம் மட்டுமே மறைக்கப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள், அதேசமயம், ஸ்டிகனோகிராபியில், இரகசியச் செய்தியொன்று இருப்பதைக் கண்டறிவது கடினம்.

ஸ்டிகனோகிராபி எவ்வாறு செயற்படுகிறது?

படங்கள், பீடீஎப் (PDF) கள், ஆடியோ, வீடியோ மற்றும் ஏனைய பல ஆவணங்கள் போன்ற தீங்கிழைக்காத கோப்புகளில் தீயநோக்குடைய அல்லது இரகசிய தகவல்கள் இங்கே மறைக்கப்பட்டிருக்கும்.

படக் கோப்புகளைப் பொறுத்தவரை, தீங்கிழைக்கும் குறியீடுகளை மறைப்பதற்காக ஒரு படத்தின் மிகக் குறைவான பிட்களைப் பயன்படுத்தும் வகையில் அமைக்க அச்சுறுத்தல்காரர்களால் முடியும். இங்கே சிறப்பு என்னவென்றால், மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும் அப்படங்கள் பார்வைக்கு மாற்றியமைக்கப்படாமல் இருக்கும். இச்செயல்முறை “ஸ்டெக்ஹையிட்” என்று அழைக்கப்படுகிறது.

தாக்குதல்களை மேற்கொள்பவர்களுக்கு, தீங்கிழைக்கும் குறியீடுகள் மற்றும் தகவல்கள் மறைக்கப்பட்ட படங்கள் ஒரு சிறந்த பொருளாக இருக்கும். பொதுவாக, இது ஆர்வத்தை அதிகரிக்காது என்பதுடன் பெரும்பாலான பாதுகாப்பு கருவிகள் / மல்வேர் (தீங்கு நிரல்) எதிர்ப்பு மென்பொருட்களுக்கு அக்கோப்புகளைக் கண்டறிவது சில சமயங்களில் சவாலாக இருக்கும்.

ஸ்டிகனோகிராபியிடம் இருந்து ஆவணங்கள்/கோப்புகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

  1. ஒரு படம் இயல்புக்கு மாறாக பெரிதாக இருப்பின், அது ஸ்டிகனோகிராபி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதன் சூசகமான குறிப்பாக இருக்கலாம்.
  2. இது குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள்/நண்பர்கள்/சக பணியாளர்கள் மத்தியில் அறிவை புகட்டுதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்; வெளிப்படையாகப் பாதிப்பில்லாத கோப்புகளில் கூட கணினி வைரஸ்கள் இருக்கலாம்.
  3. பாதுகாப்பான உலாவலுக்கு வலை வடிகட்டலைப் பயன்படுத்தவும் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும்.
  4. திடமான புரவலர் (ஹொஸ்ட்) அடிப்படையிலான தீம்பொருள் கண்டறிதல் அமைப்பு மூலம் வணிக வியாபாரங்களை இந்த வகையான தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க முடியும்.
  5. வலையமைப்பு கண்காணிப்புகள் புதிய ஸ்டெகானோகிராபி மூலமான முறிவுகளை அடையாளம் காண உதவும்.

மூலம்:
https://www.esecurityplanet.com/threats/how-steganography-allows-attackers-to-evade-detection/
https://www.csoonline.com/article/3632146/steganography-explained-and-how-to-protect-against-it.html