கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 5, 2021
பாதுகாப்பு பிரச்சினைகள்
பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் சகல இணைய மற்றும் வலையமைப்பு சேவையகங்களுக்கும் தங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
உங்கள் மின்னஞ்சலை அனுப்ப அல்லது பெற முயற்சிக்கும்போது சரியான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுகிறீர்களா என்பதை சரிபார்க்கவும். பயனர்பெயர் அல்லது கடவுச்சொல்லை உங்களிடம் கேட்கவில்லை என்றால், பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மின்னஞ்சல் நிரலுக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.சரியான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மின்னஞ்சல் நிரலின் உள்ளமைவில் உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
குறிப்பு : சில வலையமைப்பு முகாமையாளர்களோ அல்லது இணைய சேவை வழங்குநர்களோ உங்கள் கடவுச்சொல்லை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலாவதியாக்கலாம்.அந்தக் காலத்திற்குள் கடவுச்சொல் மாற்றப்படாவிட்டால், கடவுச்சொல் மாற்றப்படும் வரை நீங்கள் மின்னஞ்சலைப் பெற முடியாது.
ஸ்பேம் வடிகட்டி
ஸ்பேம் வடிப்பான்கள் பொருத்தமற்ற நிலையில் மின்னஞ்சலை உங்களால் பெறமுடியாமைக்கு காரணமாகலாம்.ஸ்பேம் வடிப்பான் பொருத்தமற்ற முறையில் கட்டமைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு செய்தி பொருத்தமற்றது என்று உங்கள் ஐஎஸ்பி(இணைய சேவை வழங்குனர்) நம்பினால், அது ஸ்பேம் கோப்புறையில் வைக்கப்படும் அல்லது அதை நீங்கள் படிக்கும் முன்பாகவே நீக்கப்படும்.இது நிகழ்கிறதா என்பதை உங்கள் இணைய சேவை வழங்குநரால் மட்டுமே உங்களுக்குச் கூற முடியும்.
இன்று கிட்டத்தட்ட அனைத்து மின்னஞ்சல் நிரல்களும் ஸ்பேமிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க உதவும் சில பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்த நிரல்கள், ஸ்கிரிப்ட்கள் மற்றும் துணை நிரல்கள் மின்னஞ்சலை தவறாக நீக்குவதற்கு காரணமாக அமையலாம் . உங்களுக்கு மின்னஞ்சலை பெறுவதில் சிக்கல் இருந்தால், உங்கள் முடிவில் சகல ஸ்பேம் வடிப்பான்களும் முடக்கப்பட்டுள்ளது என்பதையும் எந்த மின்அஞ்சலும் குப்பை(Junk) அல்லது ஸ்பேம்(Spam) கோப்புறையிலோ அல்லது குப்பைத் தொட்டியிலோ (Trash bin) இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.