கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 19, 2024

மோசடியின் பல முகங்கள்

போலிச் செய்திகள் என்பது உண்மையான செய்திகளைப் போல தோற்றமளிக்கும் பொய்யான தகவல்களைக் குறிக்கிறது, இவை பெரும்பாலும் கருத்துகளை பாதிக்கும் விதமாகவோ அல்லது நகைச்சுவையாகவோ ஆன்லைனில் பரவுகிறது.
தவறான தகவல் என்பது ஏமாற்றுவதை நோக்கமாகக் கொள்ளாமல் பரப்பப்படும் பிழையான தகவல் ஆகும்.
மோசடியை அல்லது கையாள்வதை நோக்கமாகக் கொண்டோ அல்லது ஏதோ நோக்கத்திற்காக பிழையாகவோ தவறாகவோ வழிப்படுத்துகின்ற தகவல்களும் தவறான தகவல்களாகும்.
தவறான தகவல் என்பது தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் பகிரப்படும் உண்மையான தகவல் எனவும் கூறலாம்.

“வதந்தி ஒளியை விட வேகமாக பரவுகின்றது”

  • தகவல் சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் வேகமாகப் பரவி, விரைவாகப் பலரைச் சென்றடைகிறது.
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி படங்கள் மற்றும் வீடியோக்களால் பிள்ளைகள் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர்.
  • சமூக ஊடகங்களில் பகிரப்படும் இடுகைகள் தவறானவையாக இருந்தாலும் கூட, அவை நிறைய விருப்பக் குறிகளையும் கருத்துகளையும் பெறுவததன் மூலம் விடயங்களை மோசமாக்குகிறது.
  • இந்த நெறிமுறை மேம்பாட்டினால் போலியான பதிவுகளை கூட அதிகமான மக்கள் பார்வையிட முடிகிறது.
  • மக்கள் தாங்கள் ஏற்கனவே நம்பும் விடயத்துடன் ஒத்த உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள், அதுவே எதிரொலிக்கிறது.
  • இது பல கருத்துக்களைப் பார்வையிடுவதைக் குறைத்து தவறான அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்களின் பரவலை அதிகரிக்கிறது.

பிழையான தகவல் எவ்வாறு பரவுகிறது

  • Clickbait: தகவல்களை பார்க்க தூண்டும் விதமாக வடிவமைக்கப்பட்ட தலைப்புச் செய்திகள், பெரும்பாலும் தவறான வழிபடுத்தல் அல்லது தவறான தகவல்கள் பரவுவதில் பங்களிக்கின்றன.
  • தவறாக வழிப்படுத்தும் தலைப்புச் செய்திகள்: கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் ஆனால் கட்டுரையின் உள்ளடக்கத்துடன் எப்போதும் பொருந்தாது காணப்படும்.
  • பிரச்சாரம்: அரசியல் உள்ளடக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கை மேம்படுத்துவது அல்லது மற்றவர்களைப் பற்றிய தவறான தகவலைப் பரப்புவது.
  • நையாண்டி: கேளிக்கைக்காக உருவாக்கப்படும் நகைச்சுவைக் கதைகள் அல்லது கிராபிக்ஸ், பெரும்பாலும் உண்மையான செய்திகள் என்று தவறாகக் கருதப்படும்.
  • பகடி: பொழுதுபோக்குக்காகவோ அல்லது விமர்சனங்களுக்காகவோ உண்மையான நிகழ்வுகளை நகைச்சுவையாக மிகைப்படுத்தி கூறும் நகைச்சுவை கதைகள் அல்லது உள்ளடக்கம்.
  • பக்கச்சார்பான செய்திகள்: ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை ஆதரிக்கும் செய்திகள் அல்லது ஒரு கருத்து சார்பான நம்பிக்கை.

தவறான தகவல்களைக் கண்டறிந்து தவிர்க்க ஏதும் வழி உள்ளதா?

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதும், இதுபோன்ற செய்திகளை எதிர்த்துப் போராடுவதும் மிகவும் அவசியம்.

  • தகவலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைச் சரிபார்க்கவும்: சமூக ஊடகங்களில், அவர்களின் சுயவிவரத்தைப் ஆராய்வதன் மூலம் இதை மேற்கொள்ளலாம்.
  • சந்தேகத்துடன் இருங்கள்: ஒரு கட்டுரை பெரும்பாலும் அநாமதேய ஆதாரங்களைப் பயன்படுத்தினால் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது ஆதாரம் இல்லாவிட்டால், அதை சந்தேகிக்கவும்.
  • தலைப்பை மட்டும் படிக்காமல் முழு கட்டுரையையும் படியுங்கள். Clickbait தவறாக வழிநடத்தக்கூடும்.
  • பல்வேறு ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.
  • விமர்சன ரீதியாக சிந்தியுங்கள்.
  • அங்கீகரிக்கப்பட்ட சரிபார்க்கும் இணையதளங்கள் மூலம் உண்மையை சரிபார்த்தல்.
  • உண்மை போன்று தோற்றமளிக்கும் ஆனால் பொய்யான ஆழமான போலிகளைக் குறித்து கவனமாக இருங்கள்.

மூலங்கள்:
https://www.nla.gov.au/faq/what-is-fake-news-misinformation-and-disinformation
https://www.internetmatters.org/issues/fake-news-and-misinformation-advice-hub/learn-about-fake-news-to-support-children/
https://csirt.uct.ac.za/awareness-cybersecurity-month-cybersecurity-month-2020/fake-news-misinformation-and-disinformation-same-same-or-different
https://www.security.org/digital-security/misinformation/