கடைசியாக புதுப்பிக்கப்பட்டது நவம்பர் 20, 2024


நாம் அனைவரும், பொது வைஃபை இலவசம் என்பதால் அதைப் பயன்படுத்த விரும்புவதோடு, வைஃபை இலவசமாக கிடைக்கக்கூடிய இடங்களில் சிந்திக்காமல் இணைப்பை​ ஏற்படுத்துகின்றோம். இருப்பினும், இலவசமாக கிடைக்கக்கூடிய விடயங்களில் பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகள் காணப்படும். பொது வைஃபை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாம் பின்பற்றக்கூடிய எளிமயான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வோம்.

பொது வைஃபை (Wi-Fi) பயன்படுத்துவதன் பாதகமான விளைவுகள்

தரவுத் திருட்டு

பொது வைஃபையை பயன்படுத்தும்​ போது ஹேக்கர்கள், கடவுச்சொற்கள் அல்லது கடன் அட்டை எண் போன்ற உங்களது தனியுரிமைத் தகவல்களை திருட முடிவதனால் இது பெரும்பாலும் பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது.

போலி வைஃபை இணைப்புக்கள்

ஹேக்கர்கள் போலி வைஃபை ஸ்பாட்களை உருவாக்கலாம். நீங்கள் இணைப்பை ஏற்படுத்தும் போது, அவர்கள் உங்கள் நிகழ்நிலை செயல்பாடுகளை உளவு பார்க்கலாம் அல்லது உங்களது தரவுகளை திருடலாம்.

மால்வேர் (தீம்பொருள்) தாக்குதல்

பெரும்பாலும் நீங்கள் அறியாமல் கிளிக் செய்யும் போலி பாப்-அப்கள் அல்லது புதுப்பிப்புகள் மூலம் உங்கள் சாதனங்களிற்கு தீம்பொருளை அனுப்புவதற்காக பொது வலையமைப்புக்கள் பயன்படுத்தப்படலாம்.

பாதுகாப்பற்ற தரவு

அநேகமான பொது வைஃபை வலையமைப்புக்கள் உங்களது தரவகளை என்க்ரிப்ட் செய்வதில்லை, உங்களின் உலாவல் வரலாறு மற்றும் உள்நுழைவு விவரங்களை ஹேக்கர்களுக்கு திறந்துவிடுகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

  1. மெய்நிகர் தனியார் வலையமைப்பை (VPN) பயன்படுத்தல்
    VPN இணைப்பு உங்களது தரவுகளை குறியாக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, ஹேக்கர்கள் அணுகுவதை தடுக்கின்றது.
  2. தனிப்பட்ட தகவல்களை தவிர்த்தல்
    பொது வைஃபையில் தனிப்பட்ட தரவுகள் (வங்கி அல்லது வணிகம் போன்ற) காணப்படுகின்ற கணக்குகளில் உள்நுழையாமல் இருக்க வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில், VPN ஐப் பயன்படுத்தவும் அல்லது பாதுகாப்பான இணைப்புக்காக காத்திருக்கவும்.
  3. வைஃபை இணைப்புக்களை சரிபார்த்தல்
    போலி வலையமைப்புக்களுடன் இணைப்பை தவிர்ப்பதற்கு, எப்போதும் வலையமைப்பின் பெயரை தொடர்புடைய ஊழியர்களுடன் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
  4. HTTPS ஐ பயன்படுத்தல்
    உங்களது தரவுகள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதற்கு இணையதள URLகளில் HTTPS ஐ சரிபார்த்தல்.
  5. பகிர்வதை தடுத்தல்
    உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக, உங்களது சாதனத்தில் கோப்பு மற்றும் தரவுப் பகிர்வை முடக்கவும்.
  6. இரு காரணி அங்கீகாரத்தை இயக்குதல்
    உங்களது கடவுச்சொல்லை யாராவது கண்டுபிடித்தாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக இரு காரணி அங்கீகாரத்தை ஐ இயக்கவும்.
  7. மென்பொருளைப் புதுப்பிக்கவும்
    புதிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க உங்கள் சாதனத்தின் மென்பொருள் மற்றும் வைரஸ் தடுப்புகளை தவறாமல் புதுப்பிக்கவும்.
  8. வலையமைப்பை மறந்துவிடுதல்
    பொது வைஃபையைப் பயன்படுத்திய பிறகு, அடுத்த முறை தானாக இணைக்கப்படுவதைத் தடுக்க, இணைப்பைத் துண்டித்து, பிணையத்தை மறந்து விட வேண்டும்.

 ஆதாரம்: https://us.norton.com/blog/privacy/public-wifi