கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 18, 2025
ஒன்லைனில் டேட்டிங் செய்வது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கலாம். ஆனால், எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், சாத்தியமான ஆபத்துகளைத் தவிர்க்கவும் சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.
இணையவழியில் காதல் உறவுகளை பாதுகாப்பாக அணுக சில முக்கியமான வழிகாட்டுதல்கள் இங்கே:
- தனிப்பட்ட விபரங்களை வெளியிட வேண்டாம் – உங்கள் உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை ஆரம்பத்திலேயே பகிர வேண்டாம். உங்கள் பயனர் பெயர் மூலம் அடையாளம் காண முடியாத வகையில் அநாமதேயமாக வைத்திருங்கள்.
- பொது கணினிகளில் உங்கள் கணக்குகளுக்கு உள்நுழைவதை தவிர்க்கவும், சந்தேகமான மின்னஞ்சல் இணைப்புகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பதன் மூலமும், , மேலும் உங்கள் பாதுகாப்பு மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைப்பதன் மூலமும் உங்கள் கணக்கைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
- ஒருவரை முழுமையாக அறிந்து கொள்ள நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். டேட்டிங் தளத்திற்கு வெளியே தொடர்பு கொள்ளும் முன் நன்றாக சிந்தியுங்கள்.
- மிக விரைவாக உங்களைப் பற்றி அதிகம் பகிர்வதை தவிர்க்கவும்.
- சந்திக்க முடிவு செய்வதற்கு முன்பு ஒருவரைப் பற்றி மேலும் அறிய உங்கள் சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.
- இணையத்தில் புதிதாக சந்தித்தவர்களிடம் பணம் மற்றும் நிதித் தகவல்களைப் பகிர வேண்டாம்.
- உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள், சந்தேகத்துக்கிடமான அல்லது அருவருப்பான நடத்தை மேற்கொள்ளப்பட்டால் உடனடியாக முறைப்பாடு செய்யவும்.
- மின்னஞ்சல், தொலைபேசி அல்லது உரையாடல் மூலம் நீங்கள் நெருக்கமாகிவிட்டாலும், அந்த நபரை நீங்கள் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்றால் அவர் அந்நியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- திடீரென வரும் காதல் அறிவிப்புகள், பணத்திற்கான கோரிக்கைகள், பணம் வழங்குவது அல்லது அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் இவை பெரும்பாலும் மோசடிகளின் அடையாளங்களாக இருக்கலாம்.
ஒன்லைனில் டேட்டிங் இனை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் அனுபவியுங்கள்!
மூலம்:
https://www.getsafeonline.org/personal/articles/online-dating/