கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 20, 2022
உருமாற்றம் என்றால் என்ன?
‘உருமாற்று’ (morph) என்ற சொல் மாற்றுதல் என்ற பொருள் கொண்ட ‘உருமாற்ற வடிவம்’ (metamorphosis) என்ற கிரேக்க சொல்லிலிருந்து உருவாகியது. உருமாற்றம் என்பது படங்களில் ஏற்படும் சீரான மாற்றத்தைக் குறிக்கின்றது.
உதாரணமாக முயலினுடைய படத்தை டிராகனாக மாற்றுதல். உருமாற்ற விளைவுகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளதுடன், மேலும் அவை மிகவும் யதார்த்தமானதாகத் தோன்றும் வெளிப்படையான தன்மையை மிகவும் குறைவாகக் கொண்ட விளைவுகளை உருவாக்கும் நோக்கில் இது செயற்படுத்தப்படுகின்றது.
பெண்களின் படத்தை உருமாற்றம் செய்து மிரட்டுதல்
இன்று பெரும்பாலான மக்கள் சமூக ஊடக வலைத்தளங்களில் படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள். அவ்வாறிருக்கையில் இந்தக் கணக்குகளில் தனியுரிமை அமைப்புகள் (Privacy settings) எதுவும் மேற்கொள்ளப்படாதவிடத்து சைபர் குற்றவாளிகள் ஒன்லைன் இல் பாலியல் மற்றும் ஆபாச விடயங்களை விளம்பரப்படுத்துவதற்குப் பெண்களின் இப்படங்களை உருமாற்றம் செய்து தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு நபரின் புகைப்படங்களை அவரின் அனுமதியின்றி மாற்றிமைக்கும் உருமாற்றத் தொழில்நுட்பங்களை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகிறார்கள். இன்றைய சூழலில் உருமாற்றப் புகைப்படங்கள் பெண்களுக்கு எதிரான ஒன்லைன் குற்றங்களின் பல வடிவங்களில் ஒன்றாக மாறிவிட்டது. பிரபலங்களால் மட்டுமன்றி ஒன்லைன் இல் இருக்கும் பெரும்பாலான ஆண் பெண்களால் இப்பிரச்சனை எதிர்கொள்ளப்படுகின்றது. சமூக வலைத்தளங்களில் சுய தோற்றத்தை (Profile) வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் படங்கள் உருமாற்றப்பட்டு வயது வந்தவர்களுக்கான இணையதளங்களில் வெளியிடப்பட்டு அதன் பின்னர் சைபர் குற்றவாளிகள் இப்பெண்களை பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இவ்வாறான பல வழக்குகளைக் காணக்கூடியதாக உள்ளது.
உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை எவ்வாறு அடையாளம் காண்பது?
உருமாற்றப் புகைப்படங்களை அடையாளம் காணும் திறன் மக்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது. உருமாற்றப் படங்களை அடையாளம் காண்பதற்கான சில விரைவான விபரக் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
- டிஜிட்டல் தடவியல் நுட்பங்கள்
Fotoforensics.com என்பது போலி உருவங்களைக் கண்டறியும் சிறந்த வலைத்தளம் ஆகும். இது படங்களில் உருமாற்றப்பட்ட பகுதிகளைக் கண்டறிவதற்கு பிழை நிலைப் பகுப்பாய்வு (ELA) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஒரு படம் அசலாக இருந்தால் பிழை நிலைப் பகுப்பாய்வின் (ELA) முடிவில் அப்படத்தின் ஒத்த முனைகள் ஒரே மாதிரியான பிரகாசத்தையும் ஒத்த அமைப்புகள் ஒரே வண்ணத்தையும் கொண்டிருத்தல் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். - டிஜிட்டல் கேமரா மூலம் ஒரு படம் எடுக்கப்படும் போது அது தேதி, நேரம், கேமரா வகை, புவியியல் இருப்பிடம் போன்ற தகவல்களின் முழு வரிசையையும் படக் கோப்பில் இணைக்கிறது. இது மெட்டாடேட்டா எனப்படும்.
* Imageedited.comசில பகுப்பாய்வுகளை மேற்கொள்ளவும், ஒரு படம் திருத்தப்பட்டதா இல்லையா என்பதைக் கூறவும் இந்த மெட்டாடேட்டாவை பயன்படுத்துகிறது. - மாற்றுப் படத்தேடல்
Google reverse image searchஎன்பது படத்தினுடைய மூலத்தைக் கண்டறிவதற்கான சிறந்த வழியாகும். இங்கே கூகுள் படத்தேடல் பட்டியில் ( Google image search bar) புகைப்படத்தை இழுத்து விடும்போது அல்லது பதிவேற்றம் செய்யும் போது அது அந்தப் படத்தின் அனைத்து மூலங்களையும் காட்டுவதாக அமைகின்றது. - Lஒளியூட்டல் மற்றும் உரு நிழலிடல்
ஒளியூட்டல் மற்றும் உரு நிழலிடல்களில் ஏற்படும் முறையற்ற தன்மைகள் மற்றும் வித்தியாசங்கள் என்பவை எளிதான தடயங்களாகக் காணப்படுகின்றன. - கவனமான அவதானிப்பு மற்றும் பகுத்தறிவு
படத்தை மிகவும் கவனமாக உற்று நோக்குவது அதன் நம்பகத் தன்மையைக் கண்டறிய உதவுகிறது.