கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 21, 2024


சோனி, ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பெரிய பெயர்களால் இயக்கப்படும் அணியக்கூடிய (Wearables) பொருட்களின் சந்தை 2026 ஆம் ஆண்டளவில் $265.4 பில்லியனை எட்டும் என்று MarketsandMarkets கணித்துள்ளது. ஆனால் இந்த கேஜெட்டுகள் (gadjets) எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை?

அணியக்கூடியவை (Wearables) என்பது டிஜிட்டல் உலகில் ஒன்றாகச் செயல்படும் ஸ்மார்ட் சாதனங்கள், தொலைபேசிகள் மற்றும் செயலிகளின் சிக்கலான வலையமைப்பான இணையப் பொருட்களின் சிறிய பகுதியாகும் .

உங்களின் உணர்திறன் தரவை அணிந்துகொள்வது

அணியக்கூடியவைகளில் சுகாதாரத் தகவல், இருப்பிடம், கட்டண விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவு போன்ற பல்வேறு வகையான தனிப்பட்ட தரவைச் சேகரித்துச் சேமிக்கலாம். இந்தத் தகவல் பயனர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் போன்ற மூன்றாம் தரப்பினருக்கும் பயனுள்ள நுண்ணறிவைப் பெற உதவும்.

ஆனால்

சைபர் குற்றவாளிகள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

சைபர் குற்றவாளிகள் எப்போதும் தாக்குவதற்கு பலவீனமான புள்ளிகளைத் தேடுகிறார்கள். சாதனங்களை உடல் ரீதியாக எடுத்துக்கொள்வதன் மூலமும், வயர்லெஸ் சிக்னல்களை குறுக்கிடுவதன் மூலமும், கிளவுட் சேமிப்பகத்திற்குள் நுழைவதன் மூலமும், பிற ஹேக்கிங் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் அவர்கள் முக்கியமான பயனர் தகவல்களைத் திருடலாம்.

அணியக்கூடியவைகளில் உள்ள ஆபத்துக்கள்

அணியக்கூடிய சுகாதார தரவுகள்

  • முக்கிய மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை தகவலை வெளிப்படுத்த முடியும்.
  • அபாயங்கள் ஆனது அச்சுறுத்தல், பாகுபாடு மற்றும் அடையாளத் திருட்டு ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

பணம் செலுத்தும் போது தரவு அபாயங்கள்

  • சேமிக்கப்பட்ட கட்டணத் தகவல் பாதுகாக்கப்படாவிட்டால், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கும்.
  • சாதனப் பாதுகாப்பு: PIN அல்லது பயோமெட்ரிக்ஸ் இல்லாமல் அணியக்கூடிய பொருட்களைத் தொலைப்பது அல்லது திருடுவது பாதிப்பை அதிகரிக்கிறது.
  • ஸ்மார்ட்ஃபோன் அச்சுறுத்தல்கள்: ஸ்மார்ட்ஃபோன்களுடன் இணைக்கப்பட்ட அணியக்கூடியவை(Wearables), ஸ்மார்ட்போன்களை கடத்துவது உட்பட கூடுதல் மோசடி அபாயங்களை உருவாக்குகின்றன.
  • வளர்ந்து வரும் அச்சுறுத்தல்: மொபைல் சாதனங்களில் ட்ரோஜான்கள் (Trojans) வேகமாக அதிகரித்து வரும் பாதுகாப்பு பிரச்சினையாகும்..

 நவீன தொழில்நுட்பத்துடன் நமது அணியக்கூடிய பொருட்களைப்(Wearables) பாதுகாப்போம்

  • பயோமெட்ரிக் சரிபார்ப்பைப் பயன்படுத்தவும்: கூடுதல் பாதுகாப்பிற்காக கைரேகை அல்லது இதயத் துடிப்பு சரிபார்ப்பை இயக்கவும்.
  • பாதுகாப்பு முறைகளை ஒருங்கிணைக்கவும்: சிறந்த பாதுகாப்பிற்காக கடவுச்சொற்கள் அல்லது பின்களுடன் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தவும்.
  • தரவு குறியாக்கம்: உங்கள் பயோமெட்ரிக் தரவு குறியாக்கம் செய்யப்பட்டு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
  • தரவுப் பகிர்வைக் கட்டுப்படுத்தவும்: நம்பகமான செயலிகள் மற்றும் சேவைகளுடன் மட்டுமே உங்கள் தரவைப் பகிரவும்.
  • தரவு வகைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: உங்கள் சாதனம் என்னென்ன தனிப்பட்ட தரவு சேகரிக்கிறது மற்றும் அது எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  • பல காரணி அங்கீகாரத்தை (Multi-Factor Authentication) இயக்கவும்: கூடுதல் பாதுகாப்பிற்காக உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க பல வழிகளைப் பயன்படுத்தவும்.
  • Wi-Fi உடன் கவனமாக இருங்கள்: தரவை ஒத்திசைக்கும் போது பொது அல்லது பாதுகாப்பற்ற Wi-Fi நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • தனியுரிமைக் கொள்கைகளைப் படிக்கவும்: உங்கள் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, தேவையற்ற பகிர்விலிருந்து விலகுவதற்கான விருப்பத்தேர்வுகளைத் தேடுங்கள்.
  • தரவு அனுமதிகளைத் தனிப்பயனாக்குங்கள்: இருப்பிடம் அல்லது சுகாதாரத் தகவல் போன்ற எந்தத் தரவை உங்கள் சாதனம் அணுகலாம் என்பதைக் கட்டுப்படுத்த உங்கள் settings இனைச் சரிசெய்யவும்.
  • தகவலுடன் இருங்கள்: உங்கள் அணியக்கூடிய சாதனங்களின் சாத்தியமான அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி அறிந்திருங்கள்.

ஆதாரம்:
https://www.darkreading.com/vulnerabilities-threats/how-safe-is-your-wearable-device