கடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 19, 2024


பலர், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினர், ஒவ்வொரு நாளும் கைத்தொலைபேசியில் விளையாட்டுக்களை விளையாடுவது, தொலைபேசிகளைப் பயன்படுத்துவது அல்லது சமூக ஊடகங்களில் உலாவுவது என பல மணிநேரங்களை திரையில் செலவிடுகிறார்கள். இது வேடிக்கையாக இருந்தாலும், திரையில் அதிக நேரம் செலவிடுவது உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கலாம்.

அதிக நேரம் திரையில் செலவிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்

மன ஆரோக்கியம்;

  • சோகமாக அல்லது மனச்சோர்வடைந்ததாக உணர்தல்: அதிக திரை நேரம் உங்களை மகிழ்ச்சியற்றதாக உணர வைக்கும்.
  • கவலை: நிகழ்நிலையில் அதிக நேரம் செலவிடுவது மன அழுத்தத்தையோ அல்லது கவலையையோ ஏற்படுத்தும்.

உடல் ஆரோக்கியம்:

  • தூக்கப் பிரச்சனைகள்: திரைகள் தூங்குவதையும் நன்றாக ஓய்வெடுப்பதையும் கடினமாக்கும்.
  • சோர்வான கண்கள்: அதிக நேரம் திரைகளைப் பார்ப்பது உங்கள் கண்களை காயப்படுத்தி, அவற்றை உலர வைக்கும்.
  • தலைவலி: பிரகாசமான திரைகள் மற்றும் நீண்ட பயன்பாடு தலைவலியை ஏற்படுத்தும்.

சமூக மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம்:

  • தனிமையாக இருப்பதாய் உணர்தல்: திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து விலகியிருத்தல்.
  • சைபர்புல்லிங்: இளம் வயதினர் பெரும்பாலும் நிகழ்நிலையில் கொடுமைப்படுத்துதல் அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

 

நீங்கள் திரைகளுக்கு அடிமையானவரா?

இங்கே சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன:

  • நீங்கள் விரும்பினால் கூட, உங்கள் தொலைபேசியை அல்லது கணினியைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியாது.
  • நீங்கள் இனி வெளிப்புற நடவடிக்கைகள் அல்லது பொழுதுபோக்குகளை அனுபவிக்க மாட்டீர்கள்.
  • இரவில் நன்றாக உறங்க நீங்கள் போராடுகிறீர்கள்.
  • நீங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் குறைந்த நேரத்தை செலவிடுகிறீர்கள்.

திரை நேரத்தை எவ்வாறு குறைப்பது

வயதின் அடிப்படையில் திரை நேர வரம்புகள்:

  • குழந்தைகள் (0–6 மாதங்கள்): திரைகள் இல்லை.
  • 6 மாதங்கள்–2 ஆண்டுகள்: காணொளி உரையாடல்களுக்கு மட்டும்.
  • 2-5 ஆண்டுகள்: ஒரு நாளைக்கு 1 மணிநேரம்.
  • வயது வந்த பிள்ளைகள் (6-18 வயது): பெற்றோர்கள் கைத்தொலைபேசியில் விளையாட்டுக்களை விளையாடுவது மற்றும் சமூக ஊடகங்களில் செலவு செய்யும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். (ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இல்லாமல்)
  • பெரியவர்கள்: திரை நேரத்தை ஒரு நாளைக்கு 4 மணிநேரமாகக் குறைக்க முயற்சிக்கவும்.

திரைகளில் குறைந்த நேரத்தைச் செலவிடுவதற்கான இலகுவான குறிப்புகள்:

  • திரை நேர செயலிகளைப் பயன்படுத்தவும்: இந்தச் செயலிகள் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் குறைக்கவும் உதவுகின்றன.
  • ஒன்றாகச் செயற்பாடுகளைச் செய்யுங்கள்: பேசுங்கள், வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுங்கள் அல்லது திரைகள் இல்லாமல் உணவு உண்ணுங்கள்.
  • வேடிக்கையான மாற்றுவழிகளை முயற்சிக்கவும்: திரையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வண்ணம் தீட்டவும், இசையைக் கேட்கவும், புத்தகத்தைப் படிக்கவும் அல்லது நடனமாடவும்.

ஆதாரங்கள்:
Premier Health
Diamond Rehab Thailand