கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 14, 2021
அடிப்படையில் இணையம் என்பது மிகவும் பயனுள்ள வளங்களின் தொகுப்பு . ஆனால் இந்த வலைப்பதிவு இணையத்தைப் பயன்படுத்துவதன் வசதிகள் அல்லது நன்மைகளைப் பற்றி பேசப்போவதில்லை…
ஆரம்பத்தில் இருந்தே இணையம் / சைபர் வெளியில் நல்லதும் கெட்டதுமான பக்கங்கள் உள்ளன என்று நான் கூறுவேன். அதனால்தான், சைபர் மிரட்டல்கள் , சைபர் துன்புறுத்தல், சைபர் கொடுமைப்படுத்தல் , கப்பங்கோரல் , ஒன்லைன் அச்சுறுத்தல், தேவையற்ற அரட்டை மற்றும் சிறுமிகளின் மாற்றியமைக்கப்பட்ட படங்களை (ஆபாச படங்கள்) இடுகையிடுவது போன்ற பல சம்பவங்களை நாங்கள் கேட்கிறோம். அதுமட்டுமல்லாது ஒன்லைன் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் உள்ளன . கிட்டிய கடந்த ஆண்டுகளில் இந்த சம்பவங்களில் அதிகரிப்பு காணப்படுகிறது .
எனவே, நாங்கள் என்ன செய்வது? முதலில் இணையத்தில் எது நல்லது, கெட்டது என்பதைப் பற்றி எமக்கு நல்ல விளக்கம் இருக்க வேண்டும். பின்னர் அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் சமாளிப்பது என்பதை அறிந்து நாம் அதைப் பயன்படுத்த வேண்டும்.
இணையம் மற்றும் தொடர்புடைய சேவைகளைப் பயன்படுத்தும் போது நாம் எவ்வாறு சிக்கலில் மாட்டலாம் என்பதையும் அவற்றை எவ்வாறு தடுப்பது / சமாளிப்பது என்பதையும் இந்த தொடர் பதிவுகள் பேசும் .
இந்த பதிவு சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள் பற்றியதாக இருக்கும்….
http://hithawathi.lk/ta/help-center-ta/internet/internet-frauds/