கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 11, 2021
சைபர் மிரட்டல்கள் : சைபர் மிரட்டல்கள் (Cyberstalking) என்பது இணையம், மின்னஞ்சல் அல்லது ஏனைய மின்னணு தகவல் தொடர்புகளை பயன்படுத்தி தனிநபர்கள் குழுவையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ மிரட்டல் அல்லது துன்புறுத்தலை குறிக்கும்.பொதுவாக அச்சுறுத்தும் அல்லது தீங்கிழைக்கும் நடத்தைகளின் வடிவத்தை இது குறிக்கிறது. பொய்க் குற்றச்சாட்டுகள் அல்லது அறிக்கைகளை (அவதூறான ) உருவாக்குதல் ,கண்காணித்தல் ,அச்சுறுத்தல்கள், அடையாள திருட்டு,தரவு அல்லது சாதனங்களுக்கு சேதம், பாலியலுக்காக சிறுவர்களை கோருதல் துன்புறுத்த பயன்படும் தகவல்களை சேகரித்தல் என்பவை இதில் உள்ளடங்கும். நம்பத்தன்மை கொண்ட அச்சுறுத்தலை ஏற்படுத்துபவைகளின் அடிப்படையில், சைபர் மிரட்டல்கள் மூன்று வகையான இணைய துன்புறுத்தல்களில் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படலாம்.
மூலம் : மாநில சட்டமன்றங்களின் தேசிய சம்மேளனம் (NCSL) மற்றும் விக்கிபீடியா
http://www.ncsl.org/research/telecommunications-and-information-technology/cyberstalking-and-cyberharassment-laws.aspx
சைபர் துன்புறுத்தல்கள் (Cyber harassment) : சைபர் துன்புறுத்தல்கள் (Cyber harassment) சைபர் மிரட்டல்களில் இருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது பொதுவாக நம்பகமான அச்சுறுத்தலை உள்ளடக்கியதாக இல்லையென வரையறுக்கப்படுகிறது. சைபர் துன்புறுத்தல்கள் பொதுவாக மின்னஞ்சல் செய்திகள், உடனடி செய்திகள் அல்லது வலைப்பதிவு உள்ளீடுகள் அல்லது வலைத்தளங்கள் முதலிய தனிநபரைத் துன்புறுத்துவதற்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்: மாநில சட்டமன்றங்களின் தேசிய சம்மேளனம் (NCSL)
http://www.ncsl.org/research/telecommunications-and-information-technology/cyberstalking-and-cyberharassment-laws.aspx
சைபர் கொடுமைப்படுத்தல்(cyber bullying) : பொதுவாக பயமுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்தில் சூழ்நிலைக்காக மின்னணு தகவல்தொடர்பு பயன்பாட்டின் மூலமாக செய்திகளை அனுப்புவதன் மூலம் ஒரு நபரை கொடுமைப்படுத்தல்.
மூலம்: ஒன்லைன் ஒக்ஸ்போர்ட் அகராதியின் வரைவிலக்கணம் http://www.oxforddictionaries.com/definition/english/cyberbullying
சைபர் தாக்குதல்கள் (cyber attacks) : சைபர் தாக்குதல்கள், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சைபர் யுத்தம் அல்லது சைபர் பயங்கரவாதம் என்றும் குறிப்பிடப்படுகின்றன, கணினி தகவல் அமைப்புகள், உள்கட்டமைப்புகள், கணினி வலையமைப்புக்கள் மற்றும் / அல்லது தனிப்பட்ட கணினி சாதனங்களை பல்வேறு தீங்கிழைக்கும் செயல்களால் குறிவைக்கும் தனிநபர்களாலும் முழு நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான தாக்குதல் உத்தியாகும் இவை பொதுவாக எளிதில் பாதிக்கக்கூடிய அமைப்பினை ஹேக்கிங் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட இலக்கை திருடும், மாற்றும் அல்லது அழிக்கும் அநாமதேய மூலத்திலிருந்து உருவானவை.
மூலம்: விக்கிபீடியா:Wikipedia http://en.wikipedia.org/wiki/Cyber-Attacks
மின்-தூண்டிலிடல் (Phishing) : மின்-தூண்டிலிடல் என்பது மின்னணு தகவல் தொடர்புகளின் போது பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கடனட்டை விவரங்கள் (மற்றும் சில நேரங்களில், மறைமுகமாக, பணம்) போன்ற தகவல்களை நம்பகமான நபராக காட்டி தந்திரமாக ஏமாற்றுவதன் மூலமாக பெற முயற்சிக்கும் செயலாகும். பிரபலமான சமூக வலைத்தளங்கள், ஏல தளங்கள், வங்கிகள், ஒன்லைன் கட்டண செயலிகள் அல்லது தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆகியோரிடமிருந்து வரும் தகவல்தொடர்புகளின் ஊடாக பொதுவாக சந்தேகமற்ற பொதுமக்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படுகின்றன.
எரித/ஸ்பாம் (Spam): கோரப்படாத அல்லது விரும்பாத மின்னணு செய்திகள்.
அறிவுசார் சொத்தினை மீறுதல்: அறிவுசார் சொத்து மீறல் என்பது அறிவுசார் சொத்தின் உரிமைக்கு மாறாக நடப்பது அல்லது மீறுவதாகும்
ஒன்லைன் பாலியல் துன்புறுத்தல் / துஷ்பிரயோகம்: இது பாலியல் அடிப்படையில் கொடுமைப்படுத்துதல் அல்லது வற்புறுத்தல் அல்லது வரவேற்க்கப்படாத அல்லது ஒன்லைன் மூலமான பாலியல் உதவிகளுக்கு பதிலான வெகுமதிகளின் பொருத்தமற்ற வாக்குறுதி.
மூலம் : Wikipedia